தாமிரபரணி ஆறு
பொருநை அல்லது தன்பொருனை என அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் தோன்றி தூத்துக்குடி மாவட்டம் பழையகாயலில் சங்குமுகம் அருகே கடலில் கலக்கிறது. இவ்வாறு நெல்லை–தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைத் தீர்த்து, வேளாண்மைக்கும் பயன்பட்டு வருகிறது.[2]
தாமிரபரணி பொருநை | |
---|---|
![]() ஆத்தூர் பாலத்தில் இருந்து பொருநை ஆறு | |
அமைவு | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருநெல்வேலி, தூத்துக்குடி |
நகரங்கள் | திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் , விக்கிரமசிங்கபுரம்,பாளையங்கோட்டை |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | பொதியம் |
⁃ ஆள்கூறுகள் | 8°36′07″N 77°15′51″E / 8.601962°N 77.264131°E |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | மன்னார் வளைகுடா |
⁃ ஆள்கூறுகள் | 8°38′29″N 78°07′38″E / 8.641316°N 78.127298°E |
நீளம் | 128 கிமீ (80 மைல்) |
வெளியேற்றம் | |
⁃ அமைவு | திருவைகுண்டம்[1] |
⁃ சராசரி | 32 கனமீ/செ (1,100 கன அடி/செ) |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
துணை ஆறுகள் | |
⁃ இடது | காரையாறு, சேர்வலாறு, கடனாநதி, சிற்றாறு |
⁃ வலது | மணிமுத்தாறு, பச்சையாறு |
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/6/66/Vanatheertham_falls_on_Thamraparni_River.jpg/220px-Vanatheertham_falls_on_Thamraparni_River.jpg)
பொருநையின் போக்கு
தொகுபொதிகை மலையிலிருந்து உருவாகி பாண தீர்த்தம், கலியாண தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம் முதலிய புண்ணிய தீர்த்தங்களைக் கடந்து பாபநாசம் என்ற ஊர் வழியாக வருகிறது தாமிரபரணி.தூத்துக்குடி மாவட்டம் பழைய காயலில் சங்குமுகத்தில் கடலில் இணைகிறது.
வரலாறு
தொகுகல்யாண தீர்த்தம்
தொகுமுன்னொரு காலத்தில் கைலாயத்தில் சிவபெருமானுடைய திருக்கல்யாணத்தைத் தரிசிக்கச் சென்ற தேவர்கள் முனிவர்கள் முதலியோர் கூட்டத்தைத் தாங்கமாட்டாது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர அதைச்சமன் செய்யுமாறு திருவுளங்கொண்டு அகத்திய முனிவரை அழைத்து தென் திசைக்கு ஏகும்படிச் சிவபெருமான் கட்டளையிட, அவ்வாணையின்படி பொதிய மலைக்கு எழுந்தருளீய அகத்தியருக்கு கையிலையிலிருந்த தம்முடைய திருக்கல்யாணக் கோலத்தைக் காட்சி கொடுத்தருளியது பாபநாசம் என்னும் இத்தலத்தில் என கூறப்படுகிறது. பாபநாசத்திற்கு மேற்கே ஒரு மைல் தூரத்தில் உள்ள அருவி இதனால் 'கல்யாண தீர்த்தம்' என்று பெயர் பெற்றது.
மகாபாரதத்தில் தாமிரபரணி
தொகுபொதிகை மலையில் தோன்றி வங்கக்கடலில் கலக்கும் இந்த ஆறு 70 மைல் நீளமுடையது. வடமொழியில் உள்ள மகாபாரதத்தில்,
“ | குந்தியின் மகனே! மோட்சத்தை அடையக் கடுந்தவம் புரிந்த முனிவர்களின் ஆசிரமத்தில் இருந்த தாமிரபரணியின் பெருமையை உனக்கு நினைவுபடுத்துகிறேன். | ” |
என்று ஒரு முனிவர் தர்மனைப் பார்த்துச் சொல்வதாக ஒரு பாடல் உண்டு. காளிதாசனின் ரகு வம்சத்திலும் தாமிரபரணி கடலில் கலக்கும் இடத்தில் விளைந்த உயர்தர முத்துக்களைக் கொண்டு வந்து ரகுவின் காலடியில் பணிந்ததாக ஒரு பாடல் உண்டு.
பிற நாட்டு ஆராய்ச்சியாளர்கள் பார்வையில் தாமிரபரணி
தொகுஇதன் ஒரு துணையாறு சிற்றாறு குற்றால அருவியாக விழுகிறது. "உலகத்திலேயே மிக அருமையானதும், தூய்மையானதுமான நீராடுதுறை குற்றாலமே என்று துணிந்து கூறுதல் சற்றும் மிகையாகாது"என்று கால்டுவெல் எழுதுகிறார்.
இராமாயணத்தில் தாமிரபரணி
தொகுதாமிரபரணி தமிழகத்தின் ஒரே, வற்றாத ஆண்டு முழுவதும் நீரோடும் ஆறாகும் . இது பொதிகை மலையில் உள்ள மூலிகைகளின் நற்குணங்களையும் கொண்டுள்ளது. வால்மீகி இராமாயணத்தில் கிட் கிந்தா காண்டம் 41 ஆம் சருக்கத்தில் சில சுலோகங்கள் உள்ளன. அதில் ஒன்று
அதாவது மலை சிகரத்தில் (பொதிகை) அமர்ந்தவர் அகத்திய முனிவர். தாமிரபரணி ஆறு முதலைகள் நிறைந்தது என்று பொருளாகும்.
தாமிரபரணியும் தமிழர் நாகரிகமும்
தொகுதிருநெல்வேலி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கடந்த வருட துவக்கத்தில் மிகப் பழமை வாய்ந்த புதைந்து போயிருந்த நாகரிகத்தின் அடையாளங்கள் கண்டெடுக்கப்பட்டன; அவை, அந்த இடம் மக்கள் கூடி வாழ்ந்த நாகரிகம் செறிந்த ஊரின் எல்லா அடையாளங்களையும் கொண்டிருந்ததாக அறியப்பட்டது. பண்டைக்காலத்தில், 'பொருநை' ஆறு (தாமிரபரணி) தமிழர்களின் நாகரீகப் படிநிலைகளில் முக்கிய இடத்தைக் கொண்டிருந்ததை நமது பண்டை இலக்கியங்கள் வாயிலாகவும், வரலாற்றுக் குறிப்புகள் வாயிலாகவும் அறிய முடியும்.
துணையாறுகள்
தொகுதுணையாறு | தொலைவு | உற்பத்தி | சேருமிடம் | தாமிரபரணி அதுவரை கடந்திருந்த தொலைவு |
---|---|---|---|---|
காரையாறு | களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் | காரையாறு அணை | 6 கிலோமீட்டர்கள் (4 mi) | |
சேர்வலாறு | களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் | பாபநசம் சரணாலயம் | 22 கிலோமீட்டர்கள் (14 mi) | |
மணிமுத்தாறு | 9 கிலோமீட்டர்கள் (6 mi) | மாஞ்சோலை மலை | ஆலடியூர் | 36 கிலோமீட்டர்கள் (22 mi) |
கடனாநதி | அகத்தியமலை உயிரிக்கோளம் | திருப்புடைமருதூர் | 43 கிலோமீட்டர்கள் (27 mi) | |
பச்சையாறு | 32 கிலோமீட்டர்கள் (20 mi) | களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் | தருவை | 61 கிலோமீட்டர்கள் (38 mi) |
சிற்றாறு | 80 கிலோமீட்டர்கள் (50 mi) | குற்றாலம் அருவிகள் | சீவலப்பேரி | 73 கிலோமீட்டர்கள் (45 mi) |
தாமிரபரணி பாசனமும், அணைக்கட்டுகளும்
தொகுதாமிரபரணியின் இருபுறமும் பாசனம் செழிக்க முதல் ஏழு அணைக்கட்டுகளும் கால்வாய்களும் பண்டைய கால அரசர்களினால் அமைக்கப்பட்டிருந்தன. கடைசியாக 1869ல் ஆங்கிலேயர் காலத்தில் சிறீவைகுண்டம் அணைக்கட்டு கட்டப்பட்டது.[3]
எண் | அணைக்கட்டின் பெயர் | பதிவுசெய்யப்பட்ட ஆயக்கட்டு (ஹெக்டரில்) |
கால்வாயின் பெயிர் |
---|---|---|---|
1. | கோடைமேழளகியான் அணைக்கட்டு | 1281.67 | 1. தெற்கு கோடைமேழளகியான் கால்வாய் 2. வடக்கு கோடைமேழளகியான் கால்வாய் |
2. | நதியூன்னி அணைக்கட்டு | 1049.37 | நதியூன்னி கால்வாய் |
3. | கனடியன் அணைக்கட்டு | 2266.69 | கனடியன் கால்வாய் |
4. | அரியநாயகிபுரம் அணைக்கட்டு | 4767.30 | கோடகன் கால்வாய் |
5. | பழவூர் அணைக்கட்டு | 3557.26 | பாளையம் கால்வாய் |
6. | சுத்தமல்லி அணைக்கட்டு | 2559.69 | திருநெல்வேலி கால்வாய் |
7. | மருதூர் அணைக்கட்டு | 7175.64 | 1. மருதூர் மேலக்கால் 2. மருதூர் கீழக்கால் |
8. | சிறீவைகுண்டம் அணைக்கட்டு | 1. தெற்கு முதன்மை அணைக்கட்டு 2. வடக்கு முதன்மை அணைக்கட்டு |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Gauging Station - Data Summary". ORNL. Archived from the original on 4 October 2013. பார்க்கப்பட்ட நாள் 1 October 2013.
- ↑ தாமிரபரணி ஆறு - தமிழ் இணையக் கல்விக் கழகம்
- ↑ "பாசன அணைக்கட்டுகள், கால்வாய்". Archived from the original on 2015-08-13. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 11, 2015.