பொன்னழகி 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஆர். ஆர். கிரியேசன்சு தயாரித்த இப்படத்தை புதுவயல் ஓ. முத்து எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ஏ. கே. ராஜேந்திரன், சிலோன் நம்பியார், சுமதி, ஸ்ரீ காமு ஆகியோர் முக்கிய வேடங்களிலும், உசிலைமணி, கல்லாப்பெட்டி சிங்காரம், வெள்ளை சுப்பையா ஆகியோர் துணைக் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.[1]

பொன்னழகி
இயக்கம்ஓ. முத்து
தயாரிப்புஓ. முத்து
எம். எம். ஆர். கிரியேஷன்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஏ. கே. ராஜேந்திரா
ஸ்ரீ காமு
ஒளிப்பதிவுதாரா
வெளியீடுசூன் 19, 1981
நீளம்2919 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

செல்வி, தங்கம், பொன்னழகி என்ற பெண்களைப் பற்றியும், அவர்களின் வாழ்வில் நிகழந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டும் கதை எழுதப்பட்டுள்ளது.

நடிகர்கள்

தொகு

படக்குழு

தொகு

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். இத்திரைப்படத்திற்கு கவியரசு கண்ணதாசன். பூங்குயிலன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். பாடல்களை மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் , எஸ். பி. சைலஜா ஆகியோர் பாடியிருந்தனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-221. இணையக் கணினி நூலக மைய எண் 843788919.
"https://ta.wiki.x.io/w/index.php?title=பொன்னழகி&oldid=4177802" இலிருந்து மீள்விக்கப்பட்டது