பேச்சு:முக்குவர்
அன்ரன் வணக்கம். முக்குகர், முக்குலத்தவர் இரண்டும் ஒன்றில்லையா? மற்றது கரையார் தானே மீன்பிடித் தொழில் செய்வோர். மட்டக்களப்பில் போடியார் எனும் அடை மொழி முக்குலத்தாருக்குரியதா? --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:20, 18 ஏப்ரல் 2013 (UTC)
- வணக்கம். மூன்றும் வெவ்வேறானவை என நினைக்கிறேன். முக்குவருக்கான ஆங்கில விக்கியிணைப்பு en:Mukkuvar. இதனையும் பாருங்கள்: முக்குவர் சட்டம். மட்டக்களப்பில் போடியார் விவசாயம் (பிரதானமாக நெல்) செய்வோர் ஆவர். ஆயினும் நீங்கள் குறிப்பிட்டதுபோன்று இச்சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமை, வேற்றுமைகள் ஆராயப்பட வேண்டும். --Anton (பேச்சு) 10:14, 18 ஏப்ரல் 2013 (UTC)
முக்குலத்தோரில் உள்ள அகமுடையார் இனம் முற்காலத்தில் "அகம்படியர்" என்று வழங்கப்பட்டதால்,அகம்படியர் மருவி அகம்பொடியர் ஆகி, அதுவே பின்னாளில் "போடியார்" ஆயிருக்கலாம் என்று வட-கிழக்கிலங்கையில் ஒரு கருத்து நிலவுகிறது.முக்குலத்தோரில் அகமுடையார் நிலகிழார்களாக இருப்பதும்,இலங்கையில் போடியார் எனப்படும் பரம்பரையினர் நிலச்சுவான்தார்கள் என குறிப்புகள் சுட்டுவதும் இரண்டும் ஒரே இனக்குழுவினர் என கருத வாய்ப்புள்ளது.
- நன்றி கனக்ஸ், மற்றும் அன்ரன். மேலும் சில குழப்பங்கள். முக்குவர் பிரதானமாக விவசாயம் செய்வோர் எனும் குறிப்பு ஆங்கில விக்கியில் உள்ளது.//Mukkuver's occupations are cultivation of paddy, cattle especially cow and Chenai. Chenai means cutting the frost and cultivating grains and pulse.//. உள்ளூர் உரையாடலிலும் அவர்கள் மட்டக்களப்பில் ஆட்சிப் பொறுப்புகளில் வரலாற்றுக் காலத்தில் இருந்து முக்கியப்பட்டிருந்தமை தெரிகின்றது. முக்குவர் சட்டம் இவர்களால் ஆக்கப்படடமை குறித்தும் சில தகவல்கள் கூறப்பட்டன. ஆதாரபூர்வமாக இவற்றைப் பதிவுசெய்வது முக்கியம் என நினைக்கின்றேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 23:35, 18 ஏப்ரல் 2013 (UTC)
முக்குலத்தோர் தேவர் சமுதாயத்தை இணைத்துக் குறிக்கும் சொல். அவர்கள் தான் விவசாயம் செய்தவர்கள்/பவர்கள். முக்குவர் எனபவர் நெய்தல் சார் மக்களே. மேலும் முக்குவர் திமிலர் சண்டை தற்போதும் இலங்கையில் உண்டு.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:05, 19 ஏப்ரல் 2013 (UTC)
நன்றி! மொழிபெயர்ப்பில் சில தவறுகள் நடந்துவிட்டது, திருத்தியுள்ளேன். மட்டக்களப்புத் தமிழகம் முக்குவர் பற்றி சில தகவல்களைத் தெரிவிக்கின்றது. --Anton (பேச்சு) 01:36, 20 ஏப்ரல் 2013 (UTC)
- நன்றி அன்ரன். --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:05, 20 ஏப்ரல் 2013 (UTC)
Start a discussion about முக்குவர்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve முக்குவர்.