பேச்சு:நீர் சுழல் தாவரம்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Parvathisri
வில் பொறி தாவரமும் திரோசிரேசியீ குடும்பத்தைச் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. ஆயின் // இக்குடும்பத்தைச் சேர்ந்த இத்தாவரம் மட்டுமே உள்ளது// எனும் கூற்று பற்றி கருத்தாடல் தேவை.--சஞ்சீவி சிவகுமார் 04:48, 18 நவம்பர் 2011 (UTC)
- திரோசிரேசீயி- குடும்பம்; ஆல்டிரொவண்டா- பேரினம்; வகை-ஆ.வெசிகுலோசா (A.vesiculosa)ஒன்றுமட்டும் உள்ளது. திருத்தங்கள் செய்து விடுகிறேன், நன்றி.--Parvathisri 11:27, 18 நவம்பர் 2011 (UTC)
- ஊணுணித்தாரங்கள் பகுப்பு அட்டவணை எனக்கு சரியாக அமைக்க தெரியவில்லை. யாரேனும் சரி செய்ய இயலுமா?--Parvathisri 11:55, 18 நவம்பர் 2011 (UTC)
- முடியும் பார்வதிசிறி. கீழுள்ளவாறு. ஆனால் இது ஊனுண்ணித் தாவரம் கட்டுரைக்கு மாற்றி இணைத்தால் நல்லதல்லவா? அக்கட்டுரைக்கு மிகப்பொருந்தும். அல்லது வார்ப்புருவாக்கி எல்லாக் கட்டுரைகளிலும் இடலாம்.--சஞ்சீவி சிவகுமார் 09:36, 19 நவம்பர் 2011 (UTC)
வரிசைஎண் | குடும்பம் | பேரினம் | வகைகள் |
---|---|---|---|
1 | பிப்ளிடேசியீ | பிலிப்ஸ் | 2 |
ரோரிடுலா | 1 | ||
2 | செப்பலோடேசியீ | செப்பலோட்டஸ் | 1 |
3 | திரோசிரேசியீ | அல்டிரோவாண்டா | 1 |
டயோனியா | 1+1 | ||
திரோசிரா | 90 | ||
திரொசோபில்லம் | 2 | ||
4 | லண்டிபுளோரேசியீ | பிங்குவிக்குலா | 40 |
ஜென்லீசியா | 1 | ||
பயோவுலேரியா | 1 | ||
யூட்ரிக்குளோரியா | 275 | ||
பாலிபாம்போலிக்ஸ் | 2 | ||
5 | நெப்பந்தேசியீ | நெப்பந்திசு | 70 |
6 | சாரசீனியேசியீ | டர்லிங்டோனியா | 1+1 |
ஹிலியாம்போரா | 3 | ||
சாரசீனியா | 6 |
இந்த அட்டவணையில் ஏதும் மாறுபாடு இருந்தால் தெரிவிக்கவும் பார்வதிசிறி. வகைகளின் எண்ணிக்கை திரோசிரேசியீ குடும்ப தாவரங்களில் சற்று மாறுபட்டுள்ளது. உங்கள் கருத்தறிந்து கட்டுரைகளில் இணைக்க விருப்பம். கருத்துக்கூறவும்.--சஞ்சீவி சிவகுமார் 00:14, 20 நவம்பர் 2011 (UTC)
- மிக்க நன்றி சிவகுமார். நான் மேற்கோள் காட்டிய நூலில் இவ்வாறே உள்ளது. அது மாறுபட்டுள்ளதாகத் தெரிந்தால் சரியான மாற்றங்கள் செய்து விடுங்கள். அபப்டியே கட்டுரைகளிலும் இணைத்து விடுங்கள்--Parvathisri 04:38, 20 நவம்பர் 2011 (UTC)