பேச்சு:தேவாங்கு

Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by செல்வா in topic இரவாடி


தேவாங்கு ஒரு முதனி என்றறிந்து கொண்டேன். பயனுள்ள கட்டுரைக்கு நன்றி செல்வா. Ape என்பதை மனிதக்குரங்கு எனலாமா? வேறு பொருத்தமான பெயர் உள்ளதா? அல்லது, வாலில்லாக் குரங்கு என்ற தவறான புரிதலில் உருவான பெயர், இத்தவறைத் தமிழ் மொழிபெயர்ப்பிலும் தொடர வேண்டுமா? -- சுந்தர் \பேச்சு 03:47, 2 ஜனவரி 2008 (UTC)

இரவாடி

தொகு

Nocturnal animal என்பதை இரவாடி என்று முகமது அலி தனது நூலில் குறித்துள்ளார். பொருத்தமெனில் பயன்படுத்தலாம். -- சுந்தர் \பேச்சு 03:05, 23 மே 2008 (UTC)Reply

நல்ல சொல். கட்டாயம் பயன்படுத்தலாம். முதலில் பயன்படுத்தும் பொழுது, "இரவில் இரைதேடி உலவும் விலங்குகளை இரவாடி என்று கூறுவர்" என்று கூறிவிட்டுப் பயன்படுத்தலாம். தனியாக ஒரு கட்டுரையில் இரவாடிகளின் இயல்புகள் பற்றியும் குறிப்பிடலாம் (பகலாடிகளைப் பற்றியும்தான்). அப்பொழுது சுட்டி தர எளிதாக இருக்கும். சுந்தர், இப்படியே பலரும் சிறுகச் சிறுக ஆழமும் செறிவும் சேர்த்து வந்தால், மிகவும் அருமையாக தமிழ் விக்கி வளர்ந்து வரும்.--செல்வா 03:11, 23 மே 2008 (UTC)Reply

This article has wrong classification. See http://en.wiki.x.io/wiki/Loris for the correct classification.--80.192.30.41 19:05, 22 ஜூலை 2010 (UTC)

Thank you so much for your pointer! I've corrected the classification. It used to be different. --செல்வா 21:36, 22 ஜூலை 2010 (UTC)
"https://ta.wiki.x.io/w/index.php?title=பேச்சு:தேவாங்கு&oldid=1541886" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தேவாங்கு" page.