பேச்சு:சிவன்
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் அக்டோபர் 9, 2013 அன்று வெளியானது. |
சிவனின் தோற்றம்
தொகுசிவனையே உலகில் முதன் முதலாக வழிபட்டனர் என்ற கூற்றினை ஒரு விபரணப்படத்தினில் பார்த்தேன் பி.பி.சி விபரணப்படத்தில்.ஆனாலும் அது ஒரு கூற்றென நினைக்கின்றேன்.உறுதிப்படுத்த INDIA EMPRE OF SPIRITஇவ்விபரணப்படத்தினைப்பார்க்கவும்.--நிரோஜன் சக்திவேல் 21:34, 6 டிசம்பர் 2006 (UTC)
இந்த மும்மூர்த்திகள் தொடர்பாக பல கருத்துக்கள் உண்டு. அவை கிறிஸ்தவ மும்மூர்த்திகளை ஈடுசெய்ய ஒரு முயற்சி என்றும் சில குறிப்பிடுவர். எனவே சிவன் இந்து சமயத்தின் ஒரு முக்கிய கடவுள் என்று மாத்திரம் குறிப்பிட்டாள் நன்று என்று நினைக்கின்றேன். --Natkeeran 01:32, 7 டிசம்பர் 2006 (UTC)
இல்லை நான் கூற நினைப்பதென்னவென்றால் நாகரீகம் தோன்றிய முதன்முதலில் பசுபதி என்ற சிலையினை வைத்து வழிபடப்பட்டது மொகஞ்சதாரோவிலென இவ்விபரணப்படம் கூறுகின்றது.பசுபதி என்றால் சிவனின் இன்னொரு பெயரென நினைக்கின்றேன்.ஆனாலும் இம்மொகஞ்சதாரோ நாகரீகங்களிற்கு முன்னர் தோன்றிய எகிப்திய நாகரீகங்களில் இறைவன் வழிபடப்படவில்லையா என்பதுவும் என் கேள்வியே ஆனாலும் இவ்விபரணப்படத்தில் அவ்வாறு முதன்முதல் என்று கூறுகின்றனர் என நினைக்கின்றேன்.அனைவரும் பார்க்க.எனக்கு உண்மை தெரிந்தாகவேண்டும் ஆவலாகவுள்ளது.ஏனெனில் இந்து சமயம் பண்டைய சமயமென்றார் எந்தக்கடவுள் உலகில் முதன்முதலிம் வணங்கப்பட்டிருக்கவேண்டும் மேலும் அப்பதிலை நான் தெரிந்துகொள்ள ஆவலுடன் உள்ளேன்.அனைவரும் இவ்விபரணப்படத்தினைப்பாருங்கள் பின்னர் ஒரு முடிவுக்கு வரலாம்.--நிரோஜன் சக்திவேல் 02:08, 7 டிசம்பர் 2006 (UTC)
இணைப்பு
தொகுஇக்கட்டுரையை சிவன் கட்டுரையுடன் இணைக்கலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி. 01:13, 13 செப்டெம்பர் 2010 (UTC)
- சிவன் கட்டுரையில் 62 பெயர்களை இணைப்பதற்கு பதில், இதை ஒரு பட்டியல் கட்டுரையாக்கி, அங்கிருந்து ஒரு தொடுப்பு கொடுத்து விடலாம் என்று நினைக்கிறேன். 62 பெயரை அங்கு இணைத்தால் நன்றாக இருக்காது என்று நினைக்கிறேன்.--சோடாபாட்டில் 05:58, 13 செப்டெம்பர் 2010 (UTC)
- சோடாபாட்டிலின் கூற்றுக்கு இணங்கலாம். ஒவ்வொரு உருவத் திருமேனிக்குமான தோற்றுவாய்க் காரணங்களுடன் தனிக்கட்டுரையாக்கலாம்..--பயனர்:சஞ்சீவி சிவகுமார்(192.248.66.3 06:10, 13 செப்டெம்பர் 2010 (UTC))
தனிக்கட்டுரையாக இருப்பதே சிறப்பாக இருக்கும். சில பக்கங்கள் இப்போதே உருவாக்கப்பட்டு இருக்கின்றன. 62 பெயர்களுக்கான வடிவங்களையும் தொகுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
தொழில்
தொகுசிவன் அழித்தல் தொழிலையும் திருமால் காத்தல் தொழிலையும் பிரம்மா படைத்தல் தொழிலையும் செய்பவர்கள் என்று தான் படித்துள்ளேன். கட்டுரையில் சிவனி்ன் தொழில்களில் காத்தலும் படைத்தலும் உள்ளதே? தவறாக இடப்பட்டதா?--குறும்பன் (பேச்சு) 21:50, 25 ஏப்ரல் 2013 (UTC)
- இல்லை நண்பரே, சிவபிரான் ஐந்தொழில்கள் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) அனைத்தையும் வெவ்வேறு வடிவில் நின்று புரிகிறார் என திருஞானசம்பந்தர் உட்பட பல நாயன்மார்கள் பாடியுள்ளனர். இதில் நடராசர் வடிவம் இவ்வைந்தொழில்களையும் ஒருங்கே செய்யும் என்றும் கருத்துண்டு. எடுத்துக்காட்டாக நடராச உருவத்தின் தத்துவம் பின்வருமாறு:
- ஒரு வலக்கையிலுள்ள உடுக்கை படைக்கும் ஆற்றல் குறிக்கும் (கீழிருக்கும் தாமரையும் பிறப்பிற்கு வழிவகுக்குமென கூறுவர்)
- ஒரு இடக்கையிலுள்ள நெருப்பு அழிக்கும் ஆற்றலை குறிக்கும்
- இன்னொரு வலக்கையின் உட்புறத்தை காட்டுவது அருளும் ஆற்றலை குறிக்கும்
- இன்னொரு இடக்கை மறைக்கும் ஆற்றலை குறிக்கும்
- தூக்கிய காலும் ஆணவத்தை அழிக்கும் இன்னொரு காலும் காக்கும் ஆற்றலை குறிக்கும்.
- மேற்கொண்டு பார்க்க http://www.tamilvu.org/courses/diploma/d061/d0614/html/d0614103.htm. முனைவர் இராஜ் குமார் 03:03, 26 ஏப்ரல் 2013 (UTC)
முனைவர் அய்யா அவர்களுக்கு வணக்கம்! ருத்ரன் ருத்ர தாண்டவம் குறித்து தங்கள் கருத்துரை கூறுங்களேன்.யோகிசிவம் (யோகிசிவம்பேச்சு)
- கூடிய சீக்கிரமே தொகுத்து விடுகிறேன் யோகிசிவம் அவர்களே முனைவர் இராஜ் குமார் 05:47, 26 ஏப்ரல் 2013 (UTC)
முனைவர் அய்யா அவர்களுக்கு வணக்கம்! ருத்ர தாண்டவமும், சங்காரத் தாண்டவமும் ஒன்றா?யோகிசிவம் (யோகிசிவம்பேச்சு)--117.231.0.13 07:07, 26 ஏப்ரல் 2013 (UTC)
சிவன் மட்டும் அல்ல. சாக்த மதத்தில் சக்தி, காணபத்தியத்தில் பிள்ளையார், வைணவத்தில் திருமால் அனைவரும் ஐந்து தொழில்களை செய்வதாகக் கூறுவர். சிவனுக்கும் முருகனுக்கும் மட்டுமே ஆறு தொழில்கள் செய்வதாக குறிப்பு உண்டு. ஆறாவது முகமான அதோமுகம் செய்யும் தொழிற்பெயர் எனக்கு மறந்துவிட்டது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:42, 17 அக்டோபர் 2013 (UTC)