மயூரேசன், தற்போது எமது பாடசாலை வலைத்தளம் சரியாக இயங்கவில்லை என நினைக்கிறேன். கல்லூரி ஆண்டுமலர் ஏதாவது உங்கள் கைவசம் இருக்கிறதா? ஆண்டுமலர்களில் எமது கல்லூரியின் வரலாறு விரிவாக வெளியிடப்படுவது வழக்கம். அதிலிருந்து கட்டுரைக்கான தகவல்களை பெறலாம் --மு.மயூரன் 11:12, 31 ஆகஸ்ட் 2006 (UTC)

பேச்சு:கோணேஸ்வரா இந்துக்கல்லூரி வரலாறு

தொகு

பேச்சு:கோணேஸ்வரா இந்துக்கல்லூரி வரலாறு பக்கத்தில் இருந்து வெட்டி ஒட்டப்பட்ட குறிப்புகள்

இக்கட்டுரை கல்லூரி இணையத்தளத்தில் இருந்து வெட்டி ஒட்டப் பட்டுள்ளது. இவ்வாறு செய்வது சரியா (பதிப்புரிமைப் பிரச்சினைகள்) எனத் தெரியவில்லை. --Sivakumar \பேச்சு 06:00, 25 செப்டெம்பர் 2006 (UTC) பதிப்புரிமை பிரச்சினை இல்லாவிட்டாலும் கல்லூரி தளத்தில் உள்ள தகவல்களை இங்கு வெட்டி ஒட்டுவது அவ்வளாவாக பொருந்தாது என்பது என் கருத்தாகும். செய்ய வேண்டியவை:Reply

  • ஒழுங்கான ஆரம்ப பத்தி
  • கட்டுரையை சிறு பகுதிகளாக உபதலைப்புகளின் கீழ் பிரித்தல்
  • வெளியிணைப்பாக கல்லூரி தளத்தை இணைத்தல்
  • ஆதாரங்களை பொருத்தமான இடங்களில் தருதல்

--டெரன்ஸ் \பேச்சு 08:39, 25 செப்டெம்பர் 2006 (UTC)Reply

ஏற்கனவே கோணேஸ்வரா இந்துக்கல்லூரி கட்டுரை ஒன்றுள்ளது. அங்கு மயூரன் சுருக்கமாக வரளாற்றை இணைத்திருக்கிறார். எனவே இக்கட்டுரை (வேண்டுமானால் அந்தக்கட்டுரையின் பேச்சுக்கு மாறிவிட்டு) நீக்கப்படலாம்.--Kanags 10:23, 25 செப்டெம்பர் 2006 (UTC)Reply
தற்போது, கல்லூரியின் வரலாறுக்கு என தனிக்கட்டுரை வேண்டாம். மேலே குறிப்பிடப்பட்டுள்ள முதன்மை கட்டுரையுடன் இணைக்கலாம். பொதுக் களத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், அரசு இணையத்தளங்கள் ஆகியவற்றில் இருந்து வெட்டி ஒட்டுவது காப்புரிமை மீறல் என்று கடுமையாக கருத முடியாது. எனினும், உரையை விக்கிபீடியாவுக்கு ஏற்றவாறு நடை மாற்றி உள்ளிட வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, சுர்ஜித் சிங் பர்னாலா பற்றிய கட்டுரையை தமிழக அரசு தளத்தில் இருந்து தான் எடுத்து இட்டேன். --ரவி 17:27, 25 செப்டெம்பர் 2006 (UTC)Reply

இக்கட்டுரையின் முக்கிய பகுதிகளை கோணேஸ்வரா இந்துக்கல்லூரி கட்டுரையில் இணைத்துள்ளேன். இக்கட்டுரையை இனி நீக்கலாம்.--Kanags 11:52, 26 செப்டெம்பர் 2006 (UTC)Reply

Return to "கோணேஸ்வரா இந்துக்கல்லூரி" page.