பேச்சு:கி. ஆம்ஸ்ட்ராங்
Latest comment: 1 மாதத்துக்கு முன் by Ravidreams in topic கொலை வழக்கு விவரங்கள்
கொலை வழக்கு விவரங்கள்
தொகுவணக்கம் @Neechalkaran, இவர் கொலையான வழக்கில் நடந்துள்ள முன்னேற்றங்களையும் கட்டுரையில் உள்ளடக்குவது பொருத்தமாக இருக்கும். இல்லையெனில், இது ஒரு அரசியல் படுகொலையாகத் தவறுதலாகப் புரிந்துகொள்ளப்படலாம். - இரவி (பேச்சு) 20:39, 30 திசம்பர் 2024 (UTC)
- நினைவூட்டலுக்கு நன்றி. இற்றை செய்துள்ளேன். விடுபட்டதை நீங்களும் இற்றை செய்யலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 08:46, 31 திசம்பர் 2024 (UTC)
- கட்டுரையை விரிவாக்கியதற்கு நன்றி. கொலை நடந்ததற்கான கோணமும் (ரௌடிகளின் கூட்டுச் சதி, நிலத்தகராறு போன்றவை) தக்க காரணங்கள், சான்றுகளுடன் பதியப்பட வேண்டும். நானே விரிவாக்கலாம் தான். ஆனால், முன்பு நான் தான் குறிப்பிடத்தக்கமை வார்ப்புரு இட்டிருந்தேன். எனக்குப் பக்கச் சாய்வு இருப்பதாகக் கருதக்கூடிய கட்டுரைகளில் தொகுப்புகள் செய்வதை நான் இயன்ற அளவு தவிர்க்கிறேன். நன்றி. - இரவி (பேச்சு) 13:21, 31 திசம்பர் 2024 (UTC)