பேச்சு:அரவான்
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by Sodabottle in topic பயனரா அரவான்
வாசிக்க நடை, நன்றாக உள்ளது. நன்றி. தலைப்புத் தெரிவும் நன்று. --Natkeeran 05:14, 26 நவம்பர் 2010 (UTC)
நன்றி நக்கீரன், ஏதேனும் திருத்தம் தேவைப்பட்டால் சொல்லுங்கள்... அன்புடன் ---சாந்த குமார் 06:02, 26 நவம்பர் 2010 (UTC)
சோடாபாட்டில் குறிப்புகள்
தொகுவிக்கியாக்கம்
தொகு- கட்டுரைக்கு மேலுள்ள ”the capital city of Armenia'க்கு, காண்க Yerevan.” நீக்கி விடுங்கள். இது ஆ. விக்கிக்கு மட்டும் பொருத்தமானது. த. விக்கிக்கானதல்ல
முன்னுரை
தொகு- எ. பிழை - ”இதிகாசமாசமான ” ->இதிகாசமான
- இந்தோனேசியாவிலும் அறியப்படுகிறது (இங்கு Irawan என்று உச்சரிக்கப்படுகிறது). விகுதி பொதுமை தேவை. அரவானை அவர்/அவன் என்று எடுத்துக்கொண்டு கட்டுரை முழுவதும் அதனையே பயன்படுத்தவேண்டும். வெவேறு இடங்களில் அது/அவர் என்று வேறுமாதிரி எழுதக்கூடாது.
- பிழை - spelled is not "உச்சரிக்கப்படுகிறது". its எழுத்துக்கூட்டப்படுகிறது
பெயர் வரலாறு
தொகு- professor of religion = சமயத்துறைப் பேராசிரியர் ("சார்ந்த" தேவையில்லை)
- The French Indologist = பிரெஞ்சு இந்தியவியலாளர். not இலக்கிய அறிஞர்
- Madeleine Biardeau = மடிலைன் பியார்டூ
- Biardeau concludes = என்ற முடிவுக்கு வருகிறார்; என்று சொல்கிறார். (”இறுதி வடிவம் ” பொருந்தாது). இங்கு conclusion என்பது “முடிவுரை” என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- elsewhere = வேறு இடங்களில் (முந்தைய வாக்கியத்தில் வரும் மகாபாரத்திலிருந்து வேறு படுத்திக் காட்ட இந்த "elsewhere" பயன்படுத்தப்பட்டுள்ளது
- Aravan's stepmother and Arjuna's wife = அரவானின் மாற்றாந் தாய் மற்றும் அருச்சுனனின் மனைவி
உருவ விளக்கம்
தொகு- இந்த காரைப் பற்கள் என்பது - இங்கே “என்பது” தேவையில்லை
- Some paintings also depict the sacrifice of Aravan. = அரவானது தியாகத்தையும் சில ஓவியங்கள் சித்தரிக்கின்றன. (the focus is on aravan and not sacrifice, the current version's back translation reads - Aravan is also depicted in some paintings depicting sacrifices)
- அல்லது சௌகார்பேட்டையில் உள்ள ஒரு ஓவியத்தில் தெய்வத்திற்கு வழங்குவதற்காக வாள் மற்றும் தனது வெட்டுண்ட தலையை கையில் பிடித்து கொண்டு அரவானின் தலையில்லாத உடல் நிற்பது போன்று உள்ளது.
- இவ்வரிகள் செள்கார்பேட்டை ஓவியத்தில் மட்டும் இக்காட்சி உள்ளது போன்ற பொருள் தருகின்றன. செளகார்பேட்டை ஓவியம் ஒரு எ. கா மட்டுமே (as in one sowcarpet painting). எனவே இரு வேறு காட்சி மரபுகள் உள்ளன; இரண்டாம் மரபுக்கு எ. கா செளகார்பேட்டை ஓவியம் என்று பொருள்படும்படி மாற்றப்பட்டவேண்டும்
வரலாற்று ரீதியான மேம்பாடு
தொகு- இங்கு development என்பது “மேம்பாடு” என்ற பொருளில் வராது; மாற்றம்/பரிணாமம் என்ற பொருளில் வரும்
- epic = காப்பியம் என்ற சொல்லை பயன்படுத்துங்கள் (கட்டுரை முழுவதும்)
- reciters = உச்சரிப்பவர்கள்; கதை சொல்பவர்கள்; உபசரிப்பு என்பது தவறு
- dynamic text என்பதை அப்படியே “இந்த மாறக்கூடிய எழுத்துகளின் ” என்று மொழி பெயர்க்கக்கூடாது, ”மாறும் தன்மையுடைய மகாபாரதம்” என்ற பொருளில் வருகிறது.
- ”நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த பாணினி (Panini) என்பவரின் இலக்கணக் கையேடான அட்டாத்தியாயி (Ashtadhyayi) என்ற நூலும் இத்தகைய மேற்கோள் குறிப்பிடும் ஒரு நூலாகும்.” இங்கு மூலத்தில் உள்ள “may" என்ற அர்த்தம் விட்டுப் போயுள்ளது.
- குப்தர்கள் காலத்தின் முற்பகுதியிலேயே (நான்காம் நூற்றாண்டில்) சமசுகிருத எழுத்துக்கள் ஒரு முழு வடிவம் அடைந்தன என மதிப்பிடப்பட்டுள்ளது. இங்கும் அர்த்தம் மாறுகிறது. the sanskrit text என்று குறிப்பிடப்படுவது மகாபாரதம்; பொதுவான சம்சுகிருத எழுத்துக்கள் அல்ல
- அசல் வடிவத்திற்கு மீண்டும் மாற்ற நினைப்பது பயனற்றது = மூல வடிவத்தை மீண்டும் உருவாக்க நினைப்பது பயனற்றது. (reconstruct !=change)
- also with a text history from the late Vedic through the Gupta periods = பிந்தைய வேத காலத்திலிருந்து குப்தர் காலம் வரை எழுத்து வரலாற்றை உடையது என்று கருதப்படும்
- புராணத்துக்கு புனித நூல் என்ற அடைப்பு விளக்கம் தேவையில்லை. இதே போல தமிழ்ச் சொற்களுக்கு ஆங்கில மூலத்தினை அடைப்புகளில் தரத் தேவையில்லை. ஆங்கில அடைப்பு விளக்கம் புதிய கலைச் சொற்கள்/வேற்று மொழிப் பெயர்ச்சொற்கள் ஆகியவற்று மட்டும் தந்தால் போதுமானது.
- CE என்றால் கிபி. நூற்றாண்டைக் குறிக்கும் போது கிமு வா கிபியா என்ற வித்தியாசம் தேவை
- மகாபாரதத்தின் தமிழ் பதிப்பில் = பதிப்புகளில் (plural)
- Hiltebeitel relates this to the South Indian glorification of "heroic" self-mutilation and self-decapitation before a goddess = ஹில்டிபெய்டல் இதனைப் பெண் கடவுளுக்கு முன்னர் தன்னைத் தானே வெட்டிக் கொள்வதையும், தலையறுத்துக் கொள்வதையும் உயர்வாகக் கருதும் தென்னிந்திய மரபோடு தொடர்பு படுத்துகிறார்.
- Aravan Kalappali (or Aravan Kalabali) இங்குள்ள or தமிழைப் இரு விதங்களாக ஆங்கிலத்தில் எழுத்துப்பெயர்க்க முடியும் என்பதை விளக்குவதற்கு இடப்பட்டுள்ளது. நாம் தமிழ் மூலச் சோல்லைப் பயன்படுத்தும் போது, ஒரு வடிவத்தைத் தந்தால் போதுமானது.
- தற்கால புரிதல் விளக்கத்தின் படி, அரவான் தனது தலையை வெட்டிக்கொண்டு தியாகம் செய்த பிறகும் போரினைக் காண முடிந்ததால் மறு உருவாக்கம் மற்றும் தொடர்ச்சி ஆகிய கருத்துகளையும் குறிப்புணர்த்துகிறது - எது?
- பிரித்தெழுதாதால் நேரும் குழப்பம். பின்வருமாறு இருக்க வேண்டும் - தற்காலப் புரிதல்களில் அரவானுடைய தலை தியாகத்தை மட்டுமல்லாமல், தொடர்ச்சி மற்றும் மீண்டெழுதல் ஆகிய கருத்துகளையும் குறிக்கிறது. தலையை இழந்து தியாகம் செய்த பின்னரும் அவரால் போரினைக் காணமுடிவதே இதற்குக் காரணம்.
- Iramacamippulavar = இராமசாமிப்புலவர். (Tamil IAST மரபுகளை வாசித்துக் கொள்ளுங்கள்)
- Indologist - இந்தியவியல். (கூகுள் எந்த அகராதியையை பயன்படுத்துகிறது?)
மகாபாரதம்
தொகுபயனரா அரவான்
தொகுகட்டுரையாக இருக்கும் இந்தப்பகுதியை பயனர் என்ற பக்கத்தில் தொகுத்திருக்கின்றீர்களே!. சிறப்பான காரணம் ஏதேனும் உண்டா!...
- இது கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டக்கட்டுரை. திட்டத்தின் விதிமுறைகளுக்கு இணங்க மொழிபெயர்ப்பாளர்களின் பயனர்வெளி (பயனர்/abc என்ற பக்கங்கள் பயனர்வெளியினைக் குறிக்கின்றன. அவை மையவெளியைப் போன்று பொதுவில் கிடையாது. drafting space போன்றவை) வைக்கப்பட்டு திருத்தங்கள் முடிந்த பின்னரே மையவெளிகு நகர்த்தப்படும். மேலும் விவரங்களுக்குக் காண்க விக்கிப்பீடியா பேச்சு:கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு--சோடாபாட்டில்உரையாடுக 17:22, 25 சனவரி 2011 (UTC)