பெ. சண்முகம்
பெ. சண்முகம் (P. Shanmugam) (பிறப்பு:06. ஆகத்து 1960[1]).என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 5 சனவரி 2025 அன்று இந்திய மார்க்சிய பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.[2]
பெ. சண்முகம் | |
---|---|
பிறப்பு | சண்முகம் ஆகத்து 6, 1960 பெருவளநல்லூர், திருச்சிராப்பள்ளி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
பணி | அரசியல்வாதி |
அறியப்படுவது | இந்திய மார்க்சிய பொதுவுடைமைக் கட்சியின் மாநிலச் செயலாளர் |
அரசியல் கட்சி | இந்திய மார்க்சிய பொதுவுடைமைக் கட்சி |
பெ. சண்முகம் தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி வட்டம், பெருவளநல்லூர் சிற்றூரைச் சேர்ந்தவர்.[3] இவர் மாணவராக இருந்த காலத்தில் 18 வயதில் மார்க்சிய பொதுவுடமைக் கட்சியின் மாணவர் அமைப்பில் இணைந்தார். மார்க்சிய பொதுவுடைமைக் கட்சியின் செயற்குழு மற்றும் மத்திய குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். மேலும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச்செயலாளர் பதவி வகித்து இருக்கிறார். மார்க்சிஸ்ட் கட்சி இளைஞர் அமைப்பு, விவசாய சங்க மாநில செயலாளர் போன்ற பதவிகளில் இருந்துள்ளார். வாச்சாத்தி வன்கொடுமை வழக்கை இறுதிவரை நடத்தியவராவார். இந்திய மார்க்சிய பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக இருந்த க. பாலகிருஷ்ணனின் பதவிக் காலம் முடிந்ததையடுத்து, 5 சனவரி 2025 அன்று பெ. சண்முகம் கட்சியின் மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டார். [4] 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பெ. சண்முகத்திற்கு அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி சிறப்பித்தது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ சிபிஎம் கட்சிக்கு புதிய மாநில செயலாளர்! யார் இந்த பெ.சண்முகம்?
- ↑ S, Mani Singh. "சிபிஎம் கட்சியின் புதிய மாநில செயலாளர் பெ சண்முகம்.. யார் இவர்? முழு பின்னணி". பார்க்கப்பட்ட நாள் 5 சனவரி 2025.
- ↑ "மார்க்சிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளர் - யார் இந்த பெ.சண்முகம்?". Hindu Tamil Thisai. 2025-01-06. பார்க்கப்பட்ட நாள் 2025-01-06.
- ↑ Maran, Mathivanan (2025-01-05). "சிபிஎம்-ன் புதிய மாநிலச் செயலாளராக 'வாச்சாத்தி நாயகன்' பெ. சண்முகம் தேர்வு! கே.பாலகிருஷ்ணன் மாற்றம்!". பார்க்கப்பட்ட நாள் 5 சனவரி 2025.
- ↑ WebDesk. "மார்க்சிஸ்ட் புதிய மாநிலச் செயலாளர் தேர்வு: யார் இந்த பெ. சண்முகம்?". tamil.indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2025-01-05.