பெலி ராம் தாசு
இந்திய அரசியல்வாதி
பெலி ராம் தாசு (Beli Ram Das) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1908 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரான இவர் 1952 ஆம் ஆண்டில் பார்பெட்டா தொகுதியில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அசாம் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். [1][2][3][4] தமயந்தி என்ற பெண்ணைஇவர் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு 2 மகன்களும் 5 மகள்களும் இருந்தனர். 1969 ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் தேதியன்று இவர் இறந்தார்.
பெலி ராம் தாசு Beli Ram Das | |
---|---|
![]() | |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1952-1957 | |
பின்னவர் | ரேணுகா தேவி பர்கடகி |
தொகுதி | பர்பேட்டா மக்களவைத் தொகுதி, அசாம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அக்டோபர் 1908 பலாசுபரி, காமரூப் ஊரக மாவட்டம்,அசாம்,பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு |
இறப்பு | 14 சனவரி 1969 (வயது 60) |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | தமயந்தி தாசு |
பிள்ளைகள் | 2 மகன் மற்றும் 5 மகள்கள் |
மூலம்: [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "1st Lok Sabha Assam (2012-08-13). Retrieved on 2012-08-13". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2023-10-30.
- ↑ 1st Lok Sabha Assam (2012-08-13). Retrieved on 2012-08-13. பரணிடப்பட்டது 4 மார்ச்சு 2016 at the வந்தவழி இயந்திரம்
- ↑ India. Parliament. Lok Sabha (1957). A selection from questions and answers in Lok Sabha, first to fifteenth session (1952-1957). Lok Sabha Secretariat. p. 240.
- ↑ Lok Sabha Debates. Lok Sabha Secretariat. 1969. p. 29.