பெட்டகம்
பெட்டகம் ( கொள்கலன் அல்லது சரக்குப் பெட்டகம்) என்பது மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய சரக்குப்போக்குவரத்தில் பயன்படும் ஒரு சேமிப்பு மற்றும் போக்குவரத்துக் கலனாகும். இது கருவிகளையும் மூலப்பொருட்களையும் இரு இடங்கள், நாடுகளுக்கிடையே கொண்டுசெல்லப் பயன்படுத்தப்படுகிறது. தற்போது உலகில் ஏறத்தாழ 17 மில்லியன் பெட்டகங்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/d/df/Container_01_KMJ.jpg/220px-Container_01_KMJ.jpg)
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/1/13/Container_ship_Hanjin_Taipei.jpg/220px-Container_ship_Hanjin_Taipei.jpg)
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/4/43/Port_of_Singapore_Keppel_Terminal.jpg/220px-Port_of_Singapore_Keppel_Terminal.jpg)
முதலில் பெட்டகங்கள் 8 அடி கன அளவு கொண்டவையாக ஐக்கிய அமெரிக்காவின் ராணுவத் தேவைகளுக்காக உருவாக்கப்பட்டன. தற்போது 10, 20, 40 அடி பெட்டகங்கள் வரை உள்ளன. கொண்டு செல்லப்படும் சரக்கின் தன்மைக்கேற்ப பல்வேறு விதமான பெட்டகங்கள் உள்ளன.
பெட்டகங்கள் வெவ்வேறு போக்குவரத்து முறைகளில் கொண்டு செல்ல மிகவும் வசதியானவை. உறுதியான இரும்பினால் செய்யப்பட்ட சட்டங்களைக் கொண்டவை.