புகா தெமூர்
புகா தெமூர் என்பவர் சகதாயி கானரசின் கான் ஆவார். இவரது தந்தை பெயர் கதக்சி.
புகா தெமூர் | |
---|---|
சகதாயி கானரசின் கான் | |
ஆட்சிக்காலம் | 1272–1282 |
முன்னையவர் | நெகுபெயி |
பின்னையவர் | துவா |
பிறப்பு | தெரியவில்லை |
இறப்பு | 1282 |
மதம் | சன்னி இசுலாம் |
1272ஆம் ஆண்டு வாக்கில் புகா தெமூர் கய்டுவுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த நெகுபெயியைக் கொன்றார். புகா தெமூரை சகதாயி கானரசின் கானாகக் கய்டு நியமனம் செய்தார். இதற்கு அவர் நெகுபெயியைக் கொன்றதும் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆனால் சீக்கிரமே இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எஞ்சிய ஆட்சியை, முழுவதும், தன்னுடைய அதிகாரத்தை நிலைநாட்டுவதில் தோல்வி அடைந்ததிலேயே இவர் கழித்தார். அல்கு மற்றும் பரக்கின் மகன்கள், ஈல்கானரசின் படைகள் ஆகியவற்றின் திடீர்த் தாக்குதல்களுக்கு எதிராக இவர் தன்னை காத்துக் கொள்ள இயலாதவராக விளங்கினார். 1282ஆம் ஆண்டு இவருக்குப் பதிலாகத் துவா ஆட்சிக்கு வந்தார்.