பிரமிடு வடிவ மலை (சியரீசு)
பிரமிடு வடிவ மலை (pyramid-shaped mountain) அல்லது உயரமான கூம்பு மலை ("tall, conical mountain) என்பது[1]) சியரீசு (குறுங்கோள்) மீதுள்ள வெளிப்பக்கமாகப் புடைத்துள்ள வழவழப்பான தரைப்பகுதியைக் கொண்டுள்ள மிகப்பெரிய பெயரிடப்படாத மலையாகும். இதனுடைய இயற்கைத் தோற்றம் தொடர்பான செய்திகள் அறியப்படவில்லை. விண்கற்களின் தாக்கத்தால் இது தோற்றம் பெற்றிருக்கலாம் என்பதற்கான அடையாளங்களும் ஏதுமில்லை. சியரீசின் மீதுள்ள மலைகளில் இதுமட்டுமே இவ்வாறான மலையாகக் காணப்படுகிறது. மேலிருந்து கீழாக பிரகாசமான இழை வரிகள் சியரீசின் சரிவுகளில் காணப்படுகிறது.
![]() டோன் விண்கலம் சியரீசை நெருங்கி எடுத்த புகைப்படம். | |
அமைவிடம் | சியரீசு |
---|---|
ஆள்கூறுகள் | 11°S 316°E / 11°S 316°E |
உச்சி | 6 கி.மீ (4 மைல் அல்லது 20,000 அடி) உயரம் |
கண்டுபிடித்தவர் | டோன் விண்கலக் குழு 2015 |
2015 ஆம் ஆண்டில் டோன் விண்கலம் சியரீசை நெருங்கி எடுத்த புகைப்படங்களில் இருந்து இந்த பிரமிடு வடிவ மலை கண்டறியப்பட்டது. இம்மலை 6 கிலோ மீட்டர் உயரமும் (20000 அடிகள் அல்லது 4 மைல்) 15 கிலோ மீட்டர் அடிப்பகுதியும் கொண்ட மலையாக இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
படக்காட்சியகம்
தொகு-
டோன் விண்கலம் கண்ட சியரீசு குறுங்கோள். மலையின் வடக்கு முகம் மையத்தில் உள்ள புற உறுப்புக்கு மேலான முன்னீட்சியாக உள்ளது. வடக்கு கீழ்பகுதியாகும்.
-
சிறியதாக பள்ளமாக்கப்பட்ட நிலப்பரப்பால் சூழப்பட்ட மலைசூழல் பார்வை. சியரீசின் மீதுள்ள பிரகாசமான ஒளிர்புள்ளிகளை 11.00 மணியளவில் காணமுடியும். வடக்கு மேல்பக்கம்.
-
கணிப்பொறி உருவாக்கிய மலையின் வடக்கு முகம். செங்குத்து உயரம் ஐந்து மடங்கு பெரியதாக இருக்குமாறு கணக்கீடு.
-
மலையின் உயர வரைபடம் (சிவப்பு), மற்றும் ஒரு விண்கல்வீழ் பள்ளம் (நீலம்) மேற்புரம் வடக்கு.
இவற்றையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Dawn Sends Sharper Scenes from Ceres NASA Aug. 25, 2015