பாலத்தீன அரபு மகளிர் சங்கம்
அரபு மகளிர் சங்கம் என்றும் அழைக்கப்படும் பாலத்தீன அரபு மகளிர் சங்கம் (Arab Women's Association of Palestine) என்பது 1929 அக்டோபர் 26 அன்று பாலத்தீனத்தின் ஆணையின் கீழ் எருசலேமில் அரபு பெண்கள் நிர்வாகக் குழுவால் நிறுவப்பட்ட ஒரு பாலஸ்தீன பெண்கள் அமைப்பாகும்.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/5/58/Arab_women_union.jpg/220px-Arab_women_union.jpg)
1929 ஆம் ஆண்டில் எருசலேமில் முதல் பாலத்தீன அரபு மாநாட்டை அரபு பெண்கள் நிர்வாகக் குழு ஏற்பாடு செய்து நடத்தியது. இது அரபு மற்றும் இசுலாமிய உலகில் முதல் அனைத்துலக பெண்கள் மாநாடு மற்றும் முதல் கிழக்கு மகளிர் மாநாட்டின் முன்னோடியாகும்.
1929 இல் எருசலேமில் கூடிய மாநாட்டில் இருநூறு பாலத்தீனிய முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவப் பெண்கள் கூடினர். இம்மாநாட்டில் 1917 பால்போர் பிரகடனத்தை ரத்து செய்தல், விகிதாசாரமாக பிரதிநிதித்துவ தேசிய அரசாங்கத்திற்கான பாலத்தீனத்தின் உரிமையை அங்கீகரித்தல் மற்றும் பாலத்தீனிய தொழில்களின் வளர்ச்சி ஆகியவற்றைக் கோரி மூன்று தீர்மானங்களை நிறைவேற்றியது.[1]
அமைப்பு
தொகு19299ப் நடந்த பாலத்தீன கலவரம் ஒரு தேசிய பாலத்தீன அணிதிரட்டலுக்கு வழிவகுத்தது. இதன் விளைவாக அரபு மகளிர் நிர்வாகக் குழு நிறுவப்பட்டது. இது பாலத்தீனத்தில் முதல் பெண்கள் அமைப்பாகவும், பாலத்தீனிய பெண்கள் இயக்கத்தின் தொடக்க புள்ளியாகவும் இருந்தது.
1929 ஆம் ஆண்டில் எருசலேமில் முதல் பாலத்தீன அரபு மகளிர் மாநாட்டை அரபு மகளிர் நிர்வாகக் குழு ஏற்பாடு செய்து நடத்தியது. இந்த மாநாட்டின் போது, அரபு மகளிர் நிர்வாகக் குழு பாலத்தீனத்தின் அரபு பெண்கள் சங்கத்தை நிறுவியது.
அரபு மகளிர் நிர்வாகக் குழுவின் குறிக்கோள்கள் பின்வருமாறு கூறப்பட்டன:
பாலத்தீனத்தில் அரபு பெண்களின் சமூக மற்றும் பொருளாதார விவகாரங்களின் மேம்பாட்டிற்காக பாடுபடுதல், பெண்களுக்கான கல்வி வசதிகளை விரிவுபடுத்துவதை உறுதி செய்தல், [மற்றும்] பெண்களின் நிலையை உயர்த்த அனைத்து சாத்தியமான மற்றும் சட்டப்பூர்வமான வழிகளையும் பயன்படுத்துதல்.
பாலத்தீன பெண்கள் இயக்கத்தின் முன்னோடிகள் பொதுவாக மேற்கத்திய கல்வி கற்ற, மறைக்கப்பட்ட நவீனத்துவ நடுத்தர வர்க்கப் பெண்களின் சிறுபான்மையினரிடமிருந்து வந்தவர்கள், அவர்கள் எதிர்கால சுதந்திர பாலஸ்தீனத்தின் வெற்றிக்கு பங்களிக்கும் வகையில் பெண் விடுதலையை ஆதரித்தனர்..[2] அதன் உறுப்பினர்கள் பெண்கள் பாலினப் பாகுபாட்டை உடைத்து சமூகத்தில் பங்கேற்க ஊக்குவித்தனர்; குழுவின் ஒரு முக்கிய உறுப்பினரான, தாராப் அப்துல் ஹாடி, பாலத்தீன பெண்கள் தங்கள் முக்காடுகளை (ஹிஜாப்) அகற்ற ஊக்குவிக்கும் ஒரு முயற்சியான முக்காடுக்கு எதிரான பிரச்சாரத்தில் தீவிரமாக இருந்தார.[3]
செயல்பாடு
தொகுபல பாலத்தீனிய நகரங்களில் அரபு மகளிர் நிர்வாகக் குழு தனது கிளைகளை உருவாக்கி, பாலத்தீனிய பெண்கள் இயக்கத்தின் முன்னணி அமைப்பாக மாறியது.
பிரிட்டிஷ் ஆணைக்கு எதிரான அரபு போராட்டங்களில் இது தீவிரமாக இருந்தது: 1936 மற்றும் 1939 கிளர்ச்சிகளின் கைதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவை அளித்தது. பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், பாலத்தீனிய தேசிய இயக்கத்திற்கு சர்வதேச மற்றும் பிராந்திய ஆதரவைத் திரட்டியது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Eugene Rogan (2012). The Arabs: A History – Third Edition. Penguin. p. 251. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780718196837.
- ↑ Fleischmann, E. (2003). The Nation and Its "New" Women: The Palestinian Women's Movement, 1920-1948. Storbritannien: University of California Press.
- ↑ "Palestine Facts – Personalities: Chronological listing". Palestinian Academic Society for the Study of International Affairs (PASSIA). Archived from the original on December 3, 1998. பார்க்கப்பட்ட நாள் 2008-09-11.
- Fleischmann, Ellen L. "The Emergence of the Palestinian Women's Movement, 1929–1939." Journal of Palestine Studies 29, no. 3 (2000): 16–32.