பாரிஜாதம் (1950 திரைப்படம்)
பாரிஜாதம் (Parijatham) 1950 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் தேதியன்று வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும்.[2] கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், எம். வி. ராஜம்மா, பி. எஸ். சரோஜா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[3]
பாரிஜாதம் | |
---|---|
சுவரொட்டி | |
இயக்கம் | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
தயாரிப்பு | எஸ். கே. சுந்தரராம ஐயர் |
மூலக்கதை | நரகாசுரன் புராணக் கதை |
திரைக்கதை | இளங்கோவன் |
இசை | சி. ஆர். சுப்புராமன் எஸ். வி. வெங்கட்ராமன் |
நடிப்பு | டி. ஆர். மகாலிங்கம் பி. எஸ். சரோஜா எம். வி. ராஜம்மா என். எஸ். கிருஷ்ணன் டி. ஏ. மதுரம் |
ஒளிப்பதிவு | ஜித்தென் பானர்ஜி |
படத்தொகுப்பு | ஏ. வி. சுப்பா ராவ் |
கலையகம் | நியூடோன், வாகினி |
வெளியீடு | செப்டம்பர் 11, 1950(இந்தியா)[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
திரைக்கதைச் சுருக்கம்
தொகுஇத்திரைப்படத்தில் மூன்று கதைகள் உள்ளன. முதல் பகுதியில் நரகாசுரனின் கதை இடம்பெற்றுள்ளது. கடவுளர்களிடம் தான் பெற்ற வரங்களால் நரகாசுரன் அதிக வல்லமை உள்ளவனாகி பல அழிவுகளை ஏற்படுத்துகிறான். நரகாசுரனின் முந்தைய பிறப்பிலே அவனுக்குத் தாயாக இருந்த கிருஷ்ணரின் மனைவியாகிய சத்தியபாமாவினால்மட்டுமே நரகாசுரனை அழிக்க முடியும் என நாரதருக்குத் தெரிகிறது. நரகாசுரனை அழிப்பதற்கு ஒரு திட்டம் தயார் செய்கிறார் நாரதர். பாரிஜாத மலர் ஒன்றை கிருஷ்ணனிடம் கொடுத்து அதை அவனது முதல் மனைவியாகிய ருக்மிணியிடம் கொடுக்கும்படி சொல்கிறார். ஆனால் இதற்கிடையில் சத்தியபாமாவினால் நரகாசுரன் கொல்லப்பட்டு விட்டான். இரண்டாவது பகுதியில் கிருஷ்ணன் பாரிஜாத மலரை ருக்மிணிக்குக் கொடுத்ததால் பாமாவுக்கு கிருஷ்ணன் பேரில் கோபமேற்படுகிறது. நாரதரின் உதவியோடு கிருஷ்ணர் ஒரு திட்டம் வகுத்து ருக்மிணி தம்மீது எவ்வளவு பற்றுள்ளவாளாக இருக்கிறாள் என்பதை பாமாவுக்கு உணர்த்துகிறார். மூன்றாவது பகுதி தனிக்கதை. என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் இருவரும் சேர்ந்து மற்றக் கதைகளின் இடையே நகைச்சுவை விருந்தளிக்கிறார்கள். இவர்கள் இருவருடன் காகா ராதாகிருஷ்ணன், புளிமூட்டை ராமசாமி ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.[4]
நடிகர்கள்
தொகுஇந்தப் பட்டியல் அன்று கண்ட முகம் வலைப்பூவிலிருந்து தொகுக்கப்பட்டது.[4]
- டி. ஆர். மகாலிங்கம் - கிருஷ்ணன்
- பி. எஸ். சரோஜா - சத்தியபாமா
- எம். வி. ராஜம்மா - ருக்மிணி
- என். எஸ். கிருஷ்ணன் - ஸ்ரீகாமன்
- டி. ஏ. மதுரம் - செந்தாமரை
- காகா ராதாகிருஷ்ணன் - தம்பி
- சி. எஸ். பாண்டியன் - காக்கை
- நாகர்கோவில் கே. மகாதேவன் - நாரதர்
- சி. எஸ். டி. சிங் - முரண்
- டி. கே. சம்பங்கி - இந்திரன்
- புளிமூட்டை ராமசாமி - போலி நாரதர்
- பாப்பா நாராயண ஐயர் - காசியப்பன்
- டி. எஸ். ஜெயா - லலிதா
- பி. ஜி. பார்வதி - சியாமளா
- ஆர். பாலசுப்பிரமணியம் - நரகாசுரன்
- எஸ். மேனகா - கிருஷ்ணமணி
- சி. வேதவல்லி - இந்திராணி
நடனம்:
தயாரிப்புக்குழு
தொகுஇந்தப் பட்டியல் அன்று கண்ட முகம் வலைப்பூவிலிருந்து தொகுக்கப்பட்டது.[4]
- தயாரிப்பாளர் = எஸ். கே. சுந்தரராம ஐயர்
- இயக்குநர் = கே. எஸ். கோபாலகிருஷ்ணன் (பிற்காலத்தில் புகழ் பெற்ற கே. எஸ். கோபாலகிருஷ்ணன் (கே.எஸ்.ஜி.) அல்ல)
- திரைக்கதை வசனம் = இளங்கோவன்
- ஒளிப்பதிவு = ஜித்தேன் பானர்ஜி
- படப்பிடிப்பாளர் = குமாரதேவன்
- ஒலிப்பதிவு =தின்ஷா கே. தெஹ்ரானி
- கலை = எஃப். நாகூர்
- தொகுப்பு = ஏ. வி. சுப்பா ராவ்
- நடனப்பயிற்சி = ஹீராலால்
- கலையகம் = நியூடோன், வாகினி
தயாரிப்பு
தொகுலாவண்யா பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக எஸ். கே. சுந்தரராம ஐயர் இத்திரைப்படத்தைத் தயாரித்தார்.[1]
பாடல்கள்
தொகுதிரைப்படத்துக்கு சி. ஆர். சுப்புராமன், எஸ். வி. வெங்கட்ராமன் இருவரும் இசையமைத்தார்கள். பாடல்களை சந்தானகிருஷ்ண நாயுடு, பாபநாசம் சிவன், கம்பதாசன், உடுமலை நாராயண கவி, கே. டி. சந்தானம் ஆகியோர் இயற்றினார்கள்.[1] பாடியவர்: டி. ஆர். மகாலிங்கம். எம். எல். வசந்தகுமாரி, டி. வி. ரத்தினம், கே. வி. ஜானகி, பி. லீலா and ஜிக்கி ஆகியோர் பின்னணி பாடினர்.
வரிசை எண். |
பாடல் | பாடகர்/கள் | பாடலாசிரியர் | ராகம் | கால அளவு (m:ss) |
01 | எனதன்னை உன்னை | பி. லீலா | பாபநாசம் சிவன் | 01:40 | |
02 | இசை நடனம் | தாரா சௌத்ரி நடனம் | 03:31 | ||
03 | வான் நிலவே மன மோகனா | டி. ஆர். மகாலிங்கம் டி. வி. ரத்தினம் |
02:58 | ||
04 | தானே வருவாரடி | டி. வி. ரத்தினம் | 02:16 | ||
05 | முரளி கான விநோத முகுந்தா | கே. வி. ஜானகி | பாபநாசம் சிவன் | 01:22 | |
06 | இசை நாடகம் | கே. வி. ஜானகி, ஜிக்கி | 06:18 | ||
07 | துளசி ஜெகன் மாதா | எம். எல். வசந்தகுமாரி | தேஷ் | 02:37 | |
08 | நியாயம் அல்லடி பாமா | எம். எல். வசந்தகுமாரி, பி. லீலா | 02:37 | ||
09 | ஏழை என் மீது பாரா | சி. ஆர். சுப்புராமன் | 02:35 | ||
10 | பிராண நாதனே | எம். எல். வசந்தகுமாரி | 02:20 | ||
11 | உலகத்துக்கே உணவளிக்கும் | எஸ். வி. வெங்கட்ராமன் ஜிக்கி குழு |
02:54 | ||
12 | மதியா விதியா | சி. ஆர். சுப்புராமன் டி. வி. ரத்தினம் |
03:38 | ||
13 | மாயச் சிரிப்பிலே | டி. வி. ரத்தினம் | தேஷ் | 02:57 | |
14 | பொறுமையே இன்பம் தரும் | டி. ஆர். மகாலிங்கம் | 02:11 |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 13 செப்டம்பர் 2016.
{{cite book}}
: Check date values in:|archivedate=
(help) - ↑ "1950 – பாரிஜாதம் – லாவண்யா பிக்சர்ஸ்" [1950 – Parijatham – Lavanya Pictures]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 13 September 2016.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Paarijaatham (1950)". The Hindu (in Indian English). 2010-04-08. பார்க்கப்பட்ட நாள் 2024-12-16.
- ↑ 4.0 4.1 4.2 "Parijatham (1950)". antrukandamugam.wordpress.com. Archived from the original on 14 October 2016. பார்க்கப்பட்ட நாள் 4 December 2016.