பர் ஆறு (அருணாசலப் பிரதேசம்)
பர் ஆறு (Par River-Arunachal Pradesh) என்பது இந்தியாவின் வடகிழக்கில் உள்ள அருணாசலப் பிரதேசத்தில் ஓடும் ஆறாகும். இது 164,800 சதுர கிலோமீட்டர்கள் (63,600 sq mi) வடிநிலத்தைக் கொண்டது; இதில் 69,733 சதுர கிலோமீட்டர்கள் (26,924 sq mi) (42%) காடுகள் (2005 தரவு) உள்ளன. இதன் முக்கிய துணை ஆறுகள் பாங் மற்றும் நிம்டே ஆறுகள் ஆகும். இந்த ஆறு சுபன்சிரி ஆற்றுடன் இணைந்து இறுதியில் பிரம்மபுத்திரா ஆற்றுடன் இணைகிறது .