பரிசேயனும் பாவியும் உவமை

பரிசேயனும் பாவியும் அல்லது பரிசேயனும் வரிவசூலிப்பவனும் உவமை இயேசுவால் கூறப்பட்ட ஒரு உவமானக் கதையாகும். இது இயேசு தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்கள் இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து கூறினார். எப்படி கடவுளை தொழவேண்டும் என்பதற்கு உதாரணமாக இக்கதை தற்காலத்தில் கொள்ளப்படுகிறது. லூக்கா நற்செய்தியில் 18:9-14 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. "தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர் தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்" என்பது இவ்வுவமையின் மைய கருத்தாகும்.

பரிசேயன்

பின்னணி

தொகு

இயேசு இக்கதையை கூறும் பின்னணிய அறிவது இவ்வுவமையின் பொருளை விளங்குவதற்கு முக்கியமாகும். இயேசுவின் பல உவமைகளை அன்றைய யூதா நாட்டின் கலாச்சார பின்னணியோடு நோக்கும் போது கதையின் பொருள் வெளிப்படையாகும்.

பரிசேயர்

தொகு

பரிசேயர் எனப்படுபவர்கள் யூதமத ஒருசிறு குழுவை குறிக்கும். இது சமய மற்றும் அரசியல் நோக்கந்களை கொண்டிருந்தது. திருச்சடத்தை நன்கு படித்து தேர்ந்தவர்களாவார்கள். யூதரான யாரும் பரிசேயராக மாரலாம். இவர்கள் யூதமத கலாச்சாரங்களை காப்பதில் முன்னின்று செயற்பட்டு வந்தனர்.ஆனாலும் இயேசு வாழ்ந்த சமூகத்தில் பரிசேயரில் பெரும்பாலானோர் நீதிமான்கள் போல வேடமிட்டு திரிந்தனர். தங்களை உத்தமரென்று பரைசாற்றுவதில் முன்னின்று செயற்பட்டனர்.

வரிவசூலிப்பவர்

தொகு

வரிவசூலிப்பவர்களோ அப்போது யூதா நாட்டை ஆன்ட உரோமை அரசுக்கு பணியாற்றினார்கள். இவர்கள் தங்கள் தொழிலின் பொருட்டு பலரை வருத்தி வரி வசூலிப்பதால் சமுதாயத்தில் பாவிகளாக கொள்ளப்பட்டனர்.

உவமை

தொகு
 
பாவி

இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிவசூலிப்பவர்(வரிதண்டுபவர்). பரிசேயர் நின்று கொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்"கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரம் போன்ற மற்ற மக்களைப் போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன். வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன். என்வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்."

ஆனால் வரிவசூலிப்பவரோ தொலைவில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, "கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்" என்றார்.

பரிசேயரல்ல, வரிவசூலிப்பவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர் தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்.

கருத்து

தொகு

இங்கு பரிசேயன் கடவுள் சட்டத்தில் கூறிய அனைத்தையும் செய்த்தாக மற்றவர் முன் பரைசாற்றுவதில் கவனமிருந்த்தே தவிர கடவுளிடம் தன்னை தாழ்த்தவில்லை. அவன கடவுளிடம் தன் சுயத்தை மறைக்க என்னினான். இதனால் அவனது வேண்டுதலை கடவுள் புறக்கனித்தார்.

ஆனால் வரிவசூலிப்பவரோ கடவுள் முன்னதாக தன்னை தாழ்த்தினார். தன் பாவங்களை கூறினார். வெளிவேடமின்றி கடவுளிடம் சென்றார் இதனால் அவது வேண்டுதல் ஏற்கப்பட்டது. வெளிவேடமாக செபம் செய்வதை கடவுள் விரும்புவதில்லை. மேலும் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர் தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

உசாத்துணை

தொகு

வெளியிணப்புகள்

தொகு
"https://ta.wiki.x.io/w/index.php?title=பரிசேயனும்_பாவியும்_உவமை&oldid=3908902" இலிருந்து மீள்விக்கப்பட்டது