பரத கண்டம் (ஆங்கில மொழி: Bharata Khanda or Bharata Ksetra)[1] எனும் சொல் இந்திய துணைக்கண்டத்தை குறிப்பிட வேதங்கள், இராமாயணம், மகாபாரதம் மற்றும் புராணங்களில் உள்ளிட்ட இந்து நூல்களில் பயன்படுத்தப்படும் ஒரு சொல் எனப்படுகிறது. பரத கண்டம் என்பது இந்திய துணைக்கண்டத்தைக் குறிப்பிடும் சொல் அல்ல அது கங்கைச் சமவெளியைக் குறிக்க மட்டுமே பயன்படுத்தப்பட்ட சொல் என்ற கருத்தும் உள்ளது.[2]

மகாபாரத காலத்திய பரத கண்ட நாடுகள்

இந்து சாத்திரங்கள் மற்றும் இலக்கியவாதிகளின் கூற்றுப்படியும், இப்பூவுலகில் மக்கள் செழிப்புடன் வாழத் தக்க இடமாக பரத கண்டம் விளங்கியதாக தங்கள் நூல்களில் குறிப்பிடுகிறார்கள்.[3][4][5][6] இந்தியக் குடியரசை பாரத் (பரத கண்டம்) என இந்தி மொழியில் அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுவது, துஷ்யந்தன்சகுந்தலை இணையரின் மகன் பரதன் பெயரில்தான் என்று கூறுவோரும்,[7] பரதப் பழங்குடியினர் ஆண்ட நிலப்பரப்பைக் குறிப்பதும் என்று குறிப்பிடுவோரும் உள்ளனர்.[2]

பெயர் வரலாறு

தொகு

பாரத் அல்லது பாரதம் என்னும் பெயர்ச் சொல்லின் சமசுகிருத வேர்ச்சொலான பர், பாரா என்பதன் பொருள் சுமத்தல் அல்லது தாங்குதல் என்பதாகும். பாரத் என்னும் சொல் ஒரு சமசுகிருதச் சொல்லாகக் குறிப்பிடப்பட்டாலும் அந்தச் சொல் பிராகிருதம், புரோட்டோ இந்தோ ஈரானிய மொழிகளிலும் அதே பொருளை உணர்த்தும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. வேத காலத்தில் பரதர் என்னும் பழங்குடியினர் சரசுவதி எனும் புராண ஆற்றங்கரையில் வசித்து வந்தனர் என்று கூறப்படுகிறது. அந்த இடம் தற்காலத்தில் ஹரக்ஸ்வதி நதி அல்லது ஹெல்மான்ட்-அர்கன்டாப் என்னும் ஆப்கானித்தானத்தின் ஆற்றுப் பகுதியாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. இந்தப் பழங்குடியினர் பற்றிய பல குறிப்புகள் ரிக் வேதத்தின் முதல் மண்டலத்தில் காணப்படுகின்றது. இவர்கள் இந்துகுஷ் மலையில் அமைந்துள்ள கைபர், போலன் கணவாய் வழியாக பஞ்சாப் பகுதியைக் கடந்து இறுதியாகக் கங்கைச் சமவெளிப் பகுதியில் குடியேறினர். இவர்கள் இந்தோ ஆரியப் பண்பாட்டை மேற்கிலிருந்து கிழக்கே கொண்டு வந்ததால் பரதப் பழங்குடியினர் என அழைக்கபட்டனர். இந்தப் பழங்குடியின் தலைவர்களாக திவோதாசா, சுதாஸ் ஆகியோரின் பெயர்களும் இவர்களுக்கு உதவி செய்தவர்களாக பரத்வாஜா, விசுவாமித்ரா, வசிஷ்டா ஆகியோரின் பெயர்களும் ரிக் வேதத்தின் மூன்றாவது மண்டலத்தில் வருகின்ற காயத்ரி மந்திரத்தில் குறிப்பிடப்படுகிறன. யமுனை ஆற்றுப் பகுதிக்கு வந்து சேர்ந்த இந்தப் பரதப் பழங்குடியினர் அந்தப் பகுதியை ஆண்டு கொண்டிருந்த பேடா மன்னனைத் தோற்கடித்து, குரு இனத்தவரோடு சேர்ந்து குரு இராஜ்யத்தை நிறுவுகின்றனர். மகாபாரதத்தின் பீஷ்ம பார்வதத்தின் ஜம்பு கண்ட நிர்மாணப் பகுதி ஒன்பதில் பரதா என்னும் சொல் கையாளப்படுகின்றது. ஆனால், அது பரத மன்னனைக் குறிக்கவில்லை அது பரதப் பழங்குடியைக் குறித்தது. ஏனெனினல் இந்தப் பரதன் சந்திர வம்சத்தைத் தோற்றுவித்தவன் அல்லன். சந்திர மரபிலே இடையில் வந்த ஒரு மன்னன். அவன் பெயரால் அவன் மரபினர் ஆண்ட நாடு அழைக்கப்படுவது என்பது ஏற்புடைத்தன்று என்று பேராசிரியர் கண்ணபிரான் குறிப்பிடுகிறார்.[2] மேலும் பரதன் ஒரு வரலாற்று மன்னன் அல்லன். அதற்கு மாறாக மகாபாரதம் என்னும் இதிகாசக் கதையின் ஒரு பாத்திரமே ஆவான். பரதன் 27000 ஆண்டுகள் தன் நாட்டை ஆண்டான் என்றும், இந்தப் புவியில் அமைந்திருந்த எல்லா நாடுகளையும் தோற்கடித்துக் கைப்பற்றினான் என்பது போன்ற, கட்டுக்கதைகளால் வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரமாக பரதன் உள்ளான்.[2]

மகாபாரதத்தில் திருதுராட்டிரனை ‘ஓ பரதா’ என்று சஞ்சயன் அழைப்பதாக ஓர் இடத்தில் வருகின்றது. இது பரதப் பழங்குடியினரைப் பரதா என்றழைக்கும் வழக்கம் இருந்துள்ளதை இது காட்டுகின்றது. எனவே, பரத கண்டம் பரதவர்ஷா என்பது பரதப் பழங்குடியினர் ஆண்டிருந்த நிலப்பகுதியை மட்டுமே குறித்தது என்பது இதன் வழியாக தெரியவருகிறது.[2]

பரத கண்டத்தின் எல்லை

தொகு

மகாபாரதக் கதையின்படி, பரதநாடு அல்லது பரத கண்டம் என்பது பரத இனக்குழுவினர் ஆண்ட வட இந்தியாவை உள்ளடக்கிய ஒரு பகுதியே என்றும், அதில் தென்னிந்திய நிலப்பரப்பு இணையவில்லை. கங்கைச் சமவெளி முடிவுக்கு வரும் இடமே பரதநாட்டின் எல்லையாக மகாபாரதத்தில் காட்டப்பட்டுள்ளது என்கிறார் பேராசிரியர் கண்ணபிரான்.[2] மனுஸ்மிருதியில் (Manu 2-6-23) தென்னிந்திய நிலப்பரப்பு ‘பரத வர்ஷா’ என்ற நாட்டின் பகுதியாகக் குறிப்பிடப்பபடவில்லை. மேலும் இந்தத் தென்னிந்திய நாட்டினரை ‘மிலேச்ச தேசத்தினர்’ அதாவது காட்டுமிராண்டிகள், கீழ்நிலை ஜாதியினர், சமசுகிருதம் அறியாத அயலவர்கள் என்று குறிப்பிடுகின்றது.[2]

மகாபாரத இதிகாசத்தில் பீஷ்ம பருவத்தில், பரத கண்டத்தில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைகள்; ஆறுகள் மற்றும் நாடுகளின் பெயர்களை சஞ்சயன் திருதராட்டிரனிடத்தில் விளக்குவதாக உள்ளது. அது குறித்த பிற்கால விளக்கங்களில் தென்னிந்தியாவையும் பரத கண்டத்தில் சேர்த்து சிலர் குறிப்பிடுள்ளனர்.[8]

வட பரத கண்ட நாடுகள்

தொகு

வடமத்திய பரத கண்ட நாடுகள்

தொகு

வடமேற்கு பரத கண்ட நாடுகள்

தொகு

மேற்கு பரத கண்ட நாடுகள்

தொகு

மத்திய பரத கண்ட நாடுகள்

தொகு

கிழக்கு பரத கண்ட நாடுகள்

தொகு

தெற்கு பரத கண்ட நாடுகள்

தொகு

பரத கண்டத்தின் அண்டை நாடுகள்

தொகு

வடமேற்கில்

தொகு

தெற்கில்

தொகு
  1. இலங்கை நாடு
  2. சிங்கள நாடு

வடகிழக்கில்

தொகு
  1. சீனர்கள்

வடக்கு இமயமலை நாடுகள்

தொகு


மேற்கோள்கள்

தொகு
  1. Dikshitar, Ramachandra (1993-01-01). The Gupta Polity. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120810242.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 Unmai, உண்மை (2024-04-22). "இந்தியாவா? பாரதமா? - ஓர் ஆய்வு - பேராசிரியர் இரவிசங்கர் கண்ணபிரான் இணைப் பேராசிரியர், பாரிஸ் பல்கலைக்கழகம், பிரான்ஸ்". உண்மை இதழ் மாதமிருமுறை (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-12-13.
  3. Buchanan, Francis (1988) [1807], A journey from Madras through the countries of Mysore, Canara and Malabar, Volume 1, Asian Educational Services, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-206-0386-8
  4. Buchanan, Francis (1807), A Journey from Madras Through the Countries of Mysore, Canara and Malabar, Volume 2, T. Cadell and W. Davies
  5. Buchanan, Francis (1807), A Journey from Madras Through the Countries of Mysore, Canara and Malabar, Volume 3, T. Cadell and W. Davies
  6. Hamilton, Francis (1988). A journey from Madras through the countries of Mysore, Canara, and Malabar. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120603868.
  7. கால்டுவெல், ராபர்ட். பரதகண்ட புராதனம்.
  8. பாரதத்தின் ஆறுகள் மற்றும் நாடுகள்!- பீஷ்ம பர்வம் பகுதி - 009

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wiki.x.io/w/index.php?title=பரத_கண்டம்&oldid=4169066" இலிருந்து மீள்விக்கப்பட்டது