முதற்பக்க அறிமுகம்

தொகு

உங்களைப்பற்றிய அறிமுகத்தை இன்று முதற்பக்கத்தில் கண்டு மகிழ்ந்தேன். நீங்கள் பலருக்கும் முன்னோடியாக இருக்கும் வாய்ப்பு உள்ளவர்களாகவே எனக்குப் படுகின்றது. தமிழ் விக்கிப்பீடியாவில் நீங்கள் தொடர்ந்து நற்பங்கு ஆற்றுங்கள். உங்கள் நண்பர்களையும் ஊக்குவித்து ஈடுபடுத்துங்கள். தூள் கிளப்புங்கள் சூர்ய பிரகாசு! :) --செல்வா 03:00, 19 திசம்பர் 2010 (UTC)Reply

நன்றி செல்வா!
அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 11:09, 19 திசம்பர் 2010 (UTC)Reply
  • இங்கு முதற்பக்கத்திலும், மின்னஞ்சலும் கண்டேன். மகிழ்ந்தேன். நான் ஆத்தூர். விரைவில் நேரில் சந்திப்போம். வணக்கம். --த* உழவன் 07:36, 29 திசம்பர் 2010 (UTC)Reply

2010 ஆண்டு அறிக்கை, 2011 திட்டமிடல்

தொகு

வணக்கம் Surya Prakash.S.A./தொகுப்பு03:

தமிழ் விக்கிப்பீடியா மற்றும் விக்கியூடகங்களுக்கான தங்களின் தொடர் பங்களிப்புகளுக்கு நன்றி. நமது 2010ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கிப்பீடியா அறிக்கை வெளியாகி உள்ளது. இந்த அறிக்கையில் விடுபட்டதாகக் கருதும் கருத்துக்களைத் தாங்கள் சேர்க்கலாம். மேலும் அதன் பேச்சுப் பக்கத்தில் தமிழ் விக்கிப்பீடியா மற்றும் விக்கியூடகத் திட்டங்கள் 2011 ஆம் ஆண்டு முன்னெடுக்கக் கூடிய செயற்பாடுகள் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் நம் திட்டங்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். தமிழ் விக்கிப்பீடியாவின் குறைகளையும், தடைகளையும் சுட்டிக் காட்டிக் கூட உங்கள் கருத்துக்கள் இருக்கலாம். நன்றி.

--Natkeeran 17:24, 8 சனவரி 2011 (UTC)Reply

விக்கி 10 படிமம்

தொகு

10piece-tamil-L k.svg என்ற படிமத்தில் விக்கிப்பீடியா என்றிருக்க வேண்டும். மாற்றுங்கள்.--Kanags \உரையாடுக 06:25, 14 சனவரி 2011 (UTC)Reply

படிமம் நான் உருவாக்கியது அன்று. 10விக்கியிலிருந்துப் பதிவேற்றினேன். இந்தக் கணினியில் படிமத் தொகுப்பு மென்பொருள் இல்லை. எனவேதான் அப்படியே விட்டுவிட்டேன். யாரேனும் தொகுத்துத் தந்தால் பரவாயில்லை! --சூர்ய பிரகாசு.ச.அ. 06:28, 14 சனவரி 2011 (UTC)Reply

பகுப்புகள் உருவாக்கம்

தொகு

சூரியப் பிரகாசு, புதிய பகுப்புகளை உருவாக்கும் போது அப்பகுப்பு இன்னும் ஒரு தாய்ப்பகுப்புக்குள் க்ட்டாயம் உள்ளிடப்பட வேண்டும். அதுவே விக்கியின் பலம். காந்தியம் பகுப்பை வேறு பகுப்பு அல்லது பகுப்புகளுக்குள் சேர்த்து விடுங்கள். குறைந்தது எதிர்ப்புப் போராட்டம், இந்திய விடுதலைப் போராட்டம் போன்ற பகுப்புகளினுள் சேர்க்கலாம்.--Kanags \உரையாடுக 05:43, 17 சனவரி 2011 (UTC)Reply

நீங்கள் கூறுவதற்கு முன்பாகவே செய்துவிட்டேன் கனக்சு. பார்க்கவும் http://ultrafilter.org/r/ta/21bp இதனை வேறு இரு பகுப்புகளில் சேர்த்துள்ளேன். தங்கள் ஆலோசனைக்கு நன்றி. --சூர்ய பிரகாசு.ச.அ. 05:47, 17 சனவரி 2011 (UTC)Reply

இந்திய சுதந்திரப் போராட்டம் என்ற பகுப்பில் உள்ளவை இந்திய விடுதலைப் போராட்டம் பகுப்பினுள் சேர்க்கப்பட்டு அப்பகுப்பு நீக்கப்படவிருக்கிறது.--Kanags \உரையாடுக 05:53, 17 சனவரி 2011 (UTC)Reply


அந்த வேலையை நானே செய்கிறேன். துப்புரவுப் பணி மிகவும் பிடித்துள்ளது.

--சூர்ய பிரகாசு.ச.அ. 06:00, 17 சனவரி 2011 (UTC)Reply

ஆண்டுகள்

தொகு

சூரியப் பிரகாசு. ஆண்டுகள் பக்கங்கள் எழுதும் போது அவற்றை ஓரளவு முழுமையானதாக அமையுங்கள். வெறுமனே வார்ப்புருக்கள் மட்டும் போதாது. முழுமையாக அமையாத பக்கங்கள் நீக்கப்படலாம்.--Kanags \உரையாடுக 12:41, 12 பெப்ரவரி 2011 (UTC)

எழுதிக் கொண்டுதான் உள்ளேன். எதையும் அழிக்க வேண்டாம். மொழிபெயர்ப்பதினால் தான் கால தாமதம் ஆகிறது. --சூர்ய பிரகாசு.ச.அ. 12:43, 12 பெப்ரவரி 2011 (UTC)

ஒவ்வொன்றாக எழுதலாமே?--Kanags \உரையாடுக 12:44, 12 பெப்ரவரி 2011 (UTC)
இன்றைக்கே முடித்துவிடின் ஒரு வேலை மிச்சம். நாளை விக்கிநூல்கள் தளத்தில் யுனிக்சு இயக்க அமைப்பு குறித்த ஒரு நூலைப் பதிவேற்ற வேண்டிய வேலை உள்ளது. அதனால் தான் பக்கங்களை உருவாக்கி வைத்துக் கொண்டேன்.

நான் செய்தது தவறு எனில், அவற்றைத் தாராளமாக நீக்கலாம். 2025 வரை உருவாக்கியுள்ளேன். நான் மறுப்பேதும் கூறவில்லை. --சூர்ய பிரகாசு.ச.அ. 12:53, 12 பெப்ரவரி 2011 (UTC)

நமது விக்கி நண்பர்

தொகு

சூரியா! இவ்வேறுபாட்டினை(மயூரநாதன், மயூரன், மயூநாதன்,மயூர் ) அறியவும். மேலும், ஒரு சில விடுபட்டிருக்கலாம்.அதனை இங்கு அறியலாம்.--த* உழவன் 09:36, 13 பெப்ரவரி 2011 (UTC)

திடீரென்று ஏன் இதனை என்னிடம் கூறுகிறீர் தகவலுழவன்? --சூர்ய பிரகாசு.ச.அ. 09:39, 13 பெப்ரவரி 2011 (UTC)

  • இங்கு மயூரன் என்று கண்டதால் தெரிவித்தேன். நீங்களும் உணர்ந்ததை, இப்பொழுதே பார்த்தேன். நமது சேலம் மாவட்டம் குறித்த படங்களை இணைக்கலாமென எண்ணுகிறேன். உங்களிடம் நிழற்படக் கருவி உள்ளதா?

மேட்டூர் அணையின் மேன்மை பற்றியும் விரிவாக்க வேண்டும் என்பதால் கேட்கிறேன்.--த* உழவன் 07:34, 15 பெப்ரவரி 2011 (UTC)

TUSC token 9b89a6a6a3b2e2ae810ae4bd61260527

தொகு

I am now proud owner of a TUSC account!

பார்க்கவும்

தொகு

என்னால் வடிவமைக்கப்பட்டுள்ள [பேச்சு பகுதியில்] கருத்திட்டு பின்னர் அழித்துள்ளீர்கள். இருப்பினும் விக்கிவாசல் என பெயரிட்டத்தற்கான காரணம் இங்கே பார்க்கவும். அல்லது இது தொடர்பில் ஆழமரத்தடியில் உரையாடலாம். --HK Arun 00:19, 28 பெப்ரவரி 2011 (UTC)

பதக்கம்

தொகு
  அரிய பணிகள் பதக்கம்
தமிழ் விக்கிப்பீடியா சின்னத்தினை இற்றைப்படுத்துவதில் உங்கள் பெரும்பணியைப் பாராட்டி இப்பதக்கத்தை தங்களுக்கு வழங்குகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:40, 7 மார்ச் 2011 (UTC)

நன்றி சோடாபாட்டில். --சூர்ய பிரகாசு.ச.அ. 09:58, 7 மார்ச் 2011 (UTC)

வழிமாற்று

தொகு

ஆங்கிலப் பெயர்களில் வழிமாற்று இடுவதில்லை.--Kanags \உரையாடுக 10:13, 7 மார்ச் 2011 (UTC)

Return to the user page of "Surya Prakash.S.A./தொகுப்பு03".