பயனர் பேச்சு:Fathima rinosa
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer in topic வேங்கைத்திட்டப் பயிற்சி 2022
வேங்கைத்திட்டப் பயிற்சி 2022
தொகுவணக்கம்.
இந்த கருவியின் தரவுபடி, நீங்கள் வேங்கைத்திட்டம் 2.0 போட்டியின் தமிழ்ப் பிரிவில் பங்கு பெற்று, பெண்களில் முதலாவதாக தமிழிலும், இந்திய மொழிகளிலும் முதலிடம் பெற்றமைக்கு அகமகிழ்கிறேன். எனவே, விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டப் பயிற்சி 2022 என்ற பக்கத்தில், அப்போட்டியின் நடுவராக இருந்த காரணத்தால், உங்கள் வழிகாட்டல்களை அறிந்து கொள்ள விரும்புகிறேன். அடுத்து வரவிருக்கும் போட்டி சிறப்பாக திகழவும் உங்கள் எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள். --த♥உழவன் (உரை) 11:03, 9 சூன் 2022 (UTC)
வேங்கைத்திட்டப் பயிற்சியில் கலந்து கொள்ள அழைப்பு
தொகு
வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 போட்டியில் இந்திய அளவில் தமிழ் விக்கிப்பீடியா சமூகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அளிக்கப்படவுள்ள மூன்று நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சியானது பெரும்பான்மையோரின் கருத்துகளின் படி சனவரி 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கோவை அருகே உள்ள ஆனைக்கட்டியில் நடைபெற உள்ளது. கலந்து கொள்ள பயனர்களுக்கான நிதிநல்கைப் படிவம் திறக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஏற்கெனவே வேங்கைத்திட்டம் கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்றதன் காரணமாக இந்த அழைப்பு விடுக்கப்படுகிறது. நிதிநல்கைப் படிவமானது நவம்பர் 15 முதல் நவம்பர் 30 வரை மட்டுமே திறந்திருக்கும். நீங்கள் இந்தப் பக்கத்திற்குச் சென்று விண்ணப்பித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - ஒருங்கிணைப்பாளர்கள்