பன்கு
பன்கு அல்லது பான்கு (சீனம்: 盤古, PAN-koo) சீன தொன்மவியல் மற்றும் தாவோயிசத்தில் ஒரு ஆதி உயிரினமாகவும் படைப்புக் கதாபாத்திரமாகவும் விளங்குகிறார். புராணக்கதைகளின்படி, பான்கு வானத்தையும் பூமியையும் பிரித்தார். பின்னர், அவரது உடல் மலைகள், ஒலி எழுப்பும் நீரோடைகள் போன்ற புவியியல் அம்சங்களாக மாறியது என கூறப்படுகிறது.

புராணக்கதை
தொகுபன்குவின் புராணக்கதையை முதன்முதலில் பதிவு செய்தவர் மூன்று இராசியங்கள் காலத்தின் சூ செங் என்று நம்பப்படுகிறது. எனினும், மூன்று இராசியங்கள் காலத்திற்கு முன்பே ஒரு கல்லறையில் அவரது பெயர் கண்டுபிடிக்கப்பட்டதற்கான ஆதாரமும் உள்ளது.[1]
தொடக்கத்தில், எதுவும் தோன்றாத நிலையில் பிரபஞ்சம் ஒரு அம்சமற்ற, வடிவமற்ற ஆதிநிலையில் இருந்தது. இந்த ஆதிநிலை சுமார் 18,000 ஆண்டுகளுக்கு ஒரு பிரபஞ்ச முட்டையாக ஒன்றிணைந்தது. அதற்குள், யின் மற்றும் யாங் என்ற இரு முற்றிலும் எதிர்மறையான தத்துவங்கள் சமநிலை பெற்றன, அந்நேரத்தில் பன்கு முட்டையிலிருந்து வெளிப்பட்டார் (அல்லது விழித்தெழுந்தார்). பிரபஞ்ச முட்டைக்குள் பன்குவின் இருப்பு தைஜியைக் குறிக்கிறது.[2] பன்கு பொதுவாக ஒரு பழமையான, முடிநிறைந்த ராட்சதனாக தலையில் கொம்புகளுடன் சித்தரிக்கப்படுகிறார். பன்கு உலகை உருவாக்கத் தொடங்குகிறார் அப்பொழுது அவர் தனது பிரம்மாண்டமான கோடரியால் யினை யாங்கிலிருந்து பிரிக்கிறார், இதனால் பூமி (மங்கலான யின்) மற்றும் வானம் (தெளிவான யாங்) ஆக உருவாகிறது. அவற்றைப் பிரித்து வைக்க, பன்கு அவற்றிற்கு இடையே நின்று வானத்தை மேலே தள்ள ஒவ்வொரு நாளும், வானம் பத்து அடி (3 மீட்டர்) உயரமாக வளர்ந்தது, பூமி பத்து அடி தடிமனாகிறது, மேலும் பன்கு பத்து அடி உயரமாகவும் வளர்ச்சி அடைகிறார். இந்த செயல்பாடானது மேலும் 18,000 ஆண்டுகள் நடந்திருக்கிறது.
சில கதைப் பதிப்புகளில், பன்குவுக்கு இந்தப் பணியில் நான்கு புனித மிருகங்கள் (四靈獸), கறுப்பு ஆமை, கிலின், பீனிக்ஸ், மற்றும் சீன டிராகன் ஆகியவை உதவியதாகக் கூறப்படுகிறது. வேறு சில கதைகளில், பன்கு தனது கோடரியால் ஏற்கனவே யின் மற்றும் யாங் ஆக இருந்த வானத்தையும் பூமியையும் பிரித்ததாகவும் கூறப்படுகிறது .[3]
18,000 ஆண்டுகள் கடந்த பிறகு, பன்கு இறந்தார். அவரது மூச்சு காற்று, மூடுபனி மற்றும் மேகங்களாக மாறியது; அவரது குரல் இடிமுழக்கமாக மாறியது; அவரது இடது கண் சூரியனாகவும், வலது கண் சந்திரனாகவும் மாறியது; அவரது தலை மலைகளாகவும், உலகின் தீவுகளாகவும் மாறியது; அவரது இரத்தம் நதிகளாக மாறியது; அவரது தசை வளமான நிலமாக மாறியது; அவரது முகத் தாடி நட்சத்திரங்களாகவும் பால்வெளியாகவும் மாறியது; அவரது முடி புதர்களாகவும் காடுகளாகவும் மாறியது; அவரது எலும்புகள் மதிப்புமிக்க கனிமங்களாக மாறியது; அவரது எலும்பு மஜ்ஜை விலைமதிப்பற்ற இரத்தினங்களாக மாறியது; அவரது வியர்வை மழையாக மாறியது; மேலும் அவரது முடியில் இருந்த பேன்கள் காற்றில் பறந்து விலங்குகளாக மாறின.
சில கதைப் பதிப்புகளில், அவரது உடல் மலைகளாக மாறியதாகவும் கூறப்படுகிறது.[3]
- ↑ 盘古探源:让你了解古老神秘的盘古. Archived from the original on 2013-12-18.
- ↑ I. Robinet, Paula A. Wissing : The Place and Meaning of the Notion of Taiji in Taoist Sources Prior to the Ming Dynasty, History of Religions Vol. 29, No. 4 (May 1990), pp. 373-411
- ↑ 3.0 3.1 Dell, Christopher (2012). Mythology: The Complete Guide to our Imagined Worlds. New York: Thames & Hudson. pp. 90. ISBN 978-0-500-51615-7.