பதர்

தானியங்களின் பாதுகாப்பு உறைகள்

பதர் (Chaff, (/æf/; also UK: /ɑːf/)[1] என்பது தானியங்களைப் பாதுகாக்க உள்ள விதை உறைகள், பூக்களின் செதில் போன்ற பாகங்கள் அல்லது அறுவடைக்குப் பின் தானியத்தில் கலந்துள்ள வைக்கோல் போன்ற போன்ற தாவரப் பொருளின் துண்டுகளாகும். மனிதர்களால் பதரை செரிக்க முடியாது, ஆனால் இது கால்நடைகளுக்கு உணவாக இட்டோ, மண்ணில் இட்டு உழுதோ, அல்லது எரிக்கப்பட்டோ அழிக்கப்படுகின்றது.

நெற்பதர்

தானியப் பதர்

தொகு

புற்களில் ( நெல், பார்லி, ஓட்ஸ், கோதுமை போன்ற தானியங்கள் உட்பட) முற்றிய விதைகள் மெல்லிய, உலர்ந்த, செதில்கள் ( க்ளூம்ஸ், லெம்மாஸ் மற்றும் பேலியாஸ் என அழைக்கப்படுகின்றன), தானியத்தைச் சுற்றி உலர்ந்த உமியாக (அல்லது மேலோடு) உருவாகின்றன. அறுவடைக்குப் பின் அவை அகற்றப்பட்டவுடன், பெரும்பாலும் பதர் என்று குறிப்பிடப்படுகிறன.

காட்டு தானியங்களிலும், ஈன்கார்ன், எம்மர், [2] ஸ்பெல்ட் [3] கோதுமை, நெல் போன்ற பயிர்களின் உமிகள் ஒவ்வொரு விதையையும் இறுக்கமாக உமி மூடியதாக இருக்கின்றன. தானியத்தைப் பயன்படுத்துவதற்கு முன், உமிகளை அகற்ற வேண்டியது அவசியம்.

தானியத்தை கதிரடித்த பின்னர் அதில் உள்ள பதரை தூற்றி அகற்றப்படுகிறது. பாரம்பரியமாக தானியத்தை முறத்தைக் கொண்டு கொட்டி லேசான காற்றில் பதர் அடித்துச் செல்லப்பட்டு எட்ட அடித்துச் செல்லப்படுகிறது. அப்போது காலுக்கு அடியில் விழும் தானியங்கள் சேகரிக்கப்படுகின்றன. [4]

தானியத்தின் ஒரு பகுதியாக இருக்கும் மெல்லிய, செதில் போன்ற பொருளான தவிட்டுடன் பதரைச் சேர்த்துக் குழப்பிக் கொள்ளக்கூடாது.

பயன்

தொகு

பதர் அடிப்படையிலான வடிகட்டிகளைப் பயன்படுத்துவது தண்ணீரில் உள்ள ஆர்சனிக்கு உள்ளடக்கத்தை லிட்டருக்கு 3 மைக்ரோகிராமாக குறைக்கும் என்று ஹங்கேரிய பொறியாளர் லாஸ்லோ ஷ்ரெம்மர் கண்டுபிடித்துள்ளார். நிலத்தடி நீர்நிலையிலிருந்து எடுக்கப்படும் நீரை இதன் வழியாக வடிகட்டி குடிநீர் வழங்கப்படும் பகுதிகளில் இது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Daniel Jones (2006). Peter Roach; James Hartman; Jane Setter (eds.). Cambridge Pronouncing Dictionary. Cambridge University Press.
  2. Nevo, Eviatar & A. B. Korol & A. Beiles & T. Fahima. (2002) Evolution of Wild Emmer and Wheat Improvement: Population Genetics, Genetic Resources, and Genome.... Springer. p. 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-41750-8.
  3. Vaughan, J. G. & P. A. Judd. (2003) The Oxford Book of Health Foods. Oxford University Press. p. 35. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-850459-4.
  4. "What Is Chaff: Learn How To Winnow Seeds From Chaff". Gardening Know How (in ஆங்கிலம்). 7 September 2019. பார்க்கப்பட்ட நாள் 2022-10-07.
"https://ta.wiki.x.io/w/index.php?title=பதர்&oldid=4202283" இலிருந்து மீள்விக்கப்பட்டது