பணி விலங்கு
பணி விலங்கு என்பது மனிதனால் தனக்கோ தனது வேலைக்கு உதவுவதற்காக பழக்கப்படுத்தப்பட்ட விலங்கினைக் குறிக்கும். வீட்டுவிலங்குகளாக மாற்றப்பட்ட நாய்கள், காட்டில் மரங்களை எடுத்துச் செல்ல உதவும் யானைகள் முதலானவை இவற்றுள் அடங்கும்.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/e/e6/10seppalasleddogs.jpg/250px-10seppalasleddogs.jpg)
பொதுவாக விலங்குகள் அவற்றின் உடல் ஆற்றலுக்காகவோ மோப்பம் போன்ற உள்ளுணர்வுகளுக்காகவோ பழக்கப்படுத்தப்படுகின்றன. யானை அதன் வலிமை காரணமாக காடுகளில் வெட்டப்படும் மரங்களைத் தூக்கிச் செல்லப் பயன்படுகிறது. சில நாய்கள் அவற்றின் மோப்ப உணர்வுக்காக வளர்க்கப்படுகின்றன.[1][2][3]
கழுதைகள், லாமாக்கள் முதலானவை பொதிசுமக்க வளர்க்கப்படுகின்றன. நாய்கள் வீட்டுக்காவலுக்கும் மோப்பத்தைக் கொண்டு மனிதர்களைக் கண்டுபிடிக்கவும் ஆட்டு மந்தை முதலானவற்றைக் கட்டுப்படுத்தவும் இழுநாய்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
மாடுகள், குதிரைகள் முதலானவை வண்டி இழுக்கவும் ஏர் உழவும் பயன்படுகின்றன.
வெளி இணைப்புகள்
தொகு- Working Goats பரணிடப்பட்டது 2016-06-04 at the வந்தவழி இயந்திரம் Documentary produced by Oregon Field Guide
மேற்கோள்கள்
தொகு- ↑ Андрей Зайцев (8 May 2013). Оленьи батальоны на Мурманском рубеже (in ரஷியன்). Мурман. Archived from the original on 8 August 2014. பார்க்கப்பட்ட நாள் 5 August 2014.
- ↑ "Russian soldiers train in sub-zero temperatures with reindeer". BBC. 4 February 2016 இம் மூலத்தில் இருந்து 4 February 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160204005002/http://www.bbc.co.uk/news/world-europe-35487449.
- ↑ Juan Bautista Ignacio Molina (1808). The Geographical, Natural and Civil History of Chili. Vol. II. pp. 15 & 16.