பக்தபூர் மாவட்டம்
பக்தபூர் மாவட்டம் (Bhaktapur district) (நேபாளி: भक्तपुर जिल्लाⓘ; நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இது காத்மாண்டு சமவெளியில் பாக்மதி மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் ஒன்றாகும். நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் இது மிகவும் சிறிய மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகம் பக்தபூர் நகரம் ஆகும்.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/7/7f/Bagmati_districts.png/220px-Bagmati_districts.png)
பக்தபூர் மாவட்டம் 119 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 3,04,651 ஆகும்.[1] எழுத்தறிவு விகிதம் 81.68% ஆக உள்ளது.
புவியியல் மற்றும் தட்ப வெப்பம்
தொகுநேபாளப் புவியியல்#தட்ப வெப்பம்[2] | உயரம் | பரப்பளவு % |
---|---|---|
Subtropics | 1,000 - 2,000 மீட்டர்கள் | 99.4% |
Temperate climate | 2,000 - 3,000 மீட்டர்கள் | 0.6% |
நகராட்சிகள்
தொகு- ஆனந்தலிங்கேஷ்வர் நகராட்சி
- பக்தபூர் நகராட்சி
- சங்குநாராயணன் நகராட்சி
- மத்தியப்பூர் திமி நகராட்சி
- மகாமஞ்சுஸ்ரீ – நாகர்கோட் நகராட்சி
- சூரியவிநாயக் நகராட்சி
மாவட்டப் புள்ளி விவரங்கள்
தொகுசுற்றுலா மற்றும் ஆன்மிக தலங்கள்
தொகு- பக்தபூர் நகர சதுக்கம்
- சங்கு நாராயணன் கோயில்
- கயிலாசநாத மகாதேவர் சிலை
- தௌமதி
- நாகர்கோட்
- சித்தா பொகாரி
- கைலாஷ்நாத் மகாதேவர் சிலை
- தோலேஷ்வர் மகாதேவர்
- பைலட் பாபா ஆசிரமம்
- காத்மாண்டு கேளிக்கை சமவெளி
- ஆனந்தலிங்கேஷ்வர் மகாதேவர்
படக்காட்சிகள்
தொகு-
பைவரவர் கோயில், பக்தபூர் நகர சதுக்கம்
-
தௌமதி சதுக்கம், பக்தபூர் நகர சதுக்கம்
-
தத்தாத்திரேயர் கோயில், பக்தபூர் நகர சதுக்கம்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "National Population and Housing Census 2011(National Report)". Government of Nepal. Central Bureau of Statistics. November 2012 இம் மூலத்தில் இருந்து 2013-04-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130418000000/http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/National%20Report.pdf. பார்த்த நாள்: November 2012.
- ↑ The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), . Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013
- ↑ http://unstats.un.org/unsd/demographic/sources/census/2010_PHC/Nepal/Nepal-Census-2011-Vol1.pdf பரணிடப்பட்டது 2019-01-07 at the வந்தவழி இயந்திரம் page no 52