பகுப்பு பேச்சு:சான்று எதுவும் தரப்படாத கட்டுரைகள்

சந்தேகம்: இங்குள்ள கட்டுரைகளான யூரியா, மலேரியாவை எடுத்துப்பார்த்தபோது மேற்கோள்கள் இருக்கின்றனவே. ஆனால் மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள் என்ற பகுப்பில் இவை உள்ளனவே. இப்பகுப்பைச் சரிசெய்ய இயலுமா?--Nan (பேச்சு) 09:03, 15 செப்டெம்பர் 2012 (UTC)Reply

இக்கட்டுரைகள் இரண்டும் கூகுள் மொழிபெயர்ப்பாளர்களால் ஆங்கில விக்கியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டவை. ஆங்கில விக்கியில் சான்று தேவை எனக் குறிப்பிட்டிருப்பார்கள். அது இங்கேயும் வந்து விட்டது.--Kanags \உரையாடுக 09:23, 15 செப்டெம்பர் 2012 (UTC)Reply
புரிந்து கொண்டேன் கனக்ஸ். நன்றி --Nan (பேச்சு) 13:12, 15 செப்டெம்பர் 2012 (UTC)Reply

துறை சார்ந்து பிரிப்பது எப்படி?

தொகு

நான் உயிரியல் குறிப்பாக தாவரவியல் சாரந்த கட்டுரைகளில் மட்டும் மேற்கோள்களை இட விரும்புகிறேன். அது போல, பலர் ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும் கவனம் செலுத்துவர். அவர்களுக்கு வசதியாக துறைசார்ந்து, வசதியாக பங்களிப்புகளைச் செய்ய, இப்பகுப்பில் உட்பகுப்புகளை ஏற்படுத்துவது எப்படி?--உழவன் (உரை) 05:51, 29 நவம்பர் 2015 (UTC)Reply

தானியக்க மேற்கோள் சேர்த்தல்

தொகு

மேற்கோள்களே இல்லாத கட்டுரைகளின் பட்டியல் அதிகமாகவுள்ளதாக நினைக்கிறேன். பெரும்பாலான ஆங்கிலக் கட்டுரைகளை ஒட்டி எழுதப்பட்ட கட்டுரைகளுக்கு ஆங்கில மேற்கோள்களை வெட்டி ஒட்டலாம் என நினைக்கிறேன். அதாவது ஆ.வி.யின் முதல் மூன்று மேற்கோள்களை த.வி.யின் முதல் பத்திக்குக் கொண்டு வரலாம். கணிசமான கட்டுரைகளில் மேற்கோள்கள் கிடைக்கலாம் என நினைக்கிறேன். மாதிரி 1, 2, 3 இந்தப் பணிக்கு NeechalBOT கணக்கின் வழித் தானியக்கத்தை இயக்க இயலும். இதைச் செய்யலாமா? மற்றவர்களின் கருத்து/ஆதரிவினை அறிய விரும்புகிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 13:48, 13 மே 2023 (UTC)Reply

  ஆதரவு மேற்கோள்களே இல்லாத கட்டுரைகளின் எண்ணிக்கை, மொத்தமுள்ள கட்டுரைகளில் 4.93% என்பதாக உள்ளது (7,585/1,53,927). எனவே, தரத்தினை உயர்த்துவதற்கு இப்பணி மிகவும் முக்கியமானதாகும். ஆங்கிலக் கட்டுரைகளில் காணப்படும் 3 மேற்கோள்களை இங்கு கொண்டுவருவது நன்று. இம்முறையில் செயல்பட்டு, கட்டுரைகளின் எண்ணிக்கை குறையும்போது, மீதமிருக்கும் கட்டுரைகளில் மேற்கோள் சேர்ப்பது எளிதாக இருக்கும். குறிப்பாக, மலைப்பு குறையும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:26, 13 மே 2023 (UTC)Reply
மாற்றுக் கருத்தில்லாததால், முதல் கட்டமாக சுமார் 150 கட்டுரைகளைத் தானியங்கி வாயிலாக மேற்கோள்கள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆ.வி. மேற்கோள் கடத்தல் என்ற குறிப்புரையுடன் திருத்தங்கள் சேமிக்கப்படுகின்றன. ஏதேனும் பரிந்துரைகள், சிக்கல்களைக் கண்டால் சுட்டிக் காட்டலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 10:24, 24 மே 2023 (UTC)Reply
இன்று மேலும் சுமார் 300 கட்டுரைகளில் இத்தானியக்கத்தை இயக்கியுள்ளேன். ஏதேனும் பரிந்துரைகள், சிக்கல்களைக் கண்டால் சுட்டிக் காட்டலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 06:13, 9 சூலை 2023 (UTC)Reply
இன்று மேலும் சுமார் 700 கட்டுரைகளில் இத்தானியக்கத்தால் மேற்கோள்கள் சேர்க்கப்பட்டு, கட்டுரை எண்ணிக்கை 6,540 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.-நீச்சல்காரன் (பேச்சு) 04:28, 5 ஆகத்து 2023 (UTC)Reply
  விருப்பம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:41, 5 ஆகத்து 2023 (UTC)Reply
இன்று மேலும் சுமார் 800 கட்டுரைகளில் இத்தானியக்கத்தை இயக்கி, கட்டுரை எண்ணிக்கை 6,213 அகக் குறைக்கப்பட்டுள்ளது. பயனர்:Sridhar G கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அனைத்துக் கட்டுரைகளையும் அலசி மேற்கோள் இல்லாத சுமார் 25 ஆயிரம் கட்டுரைகளை இங்கே திரட்டியுள்ளேன். அவற்றில் இந்தப் பகுப்பினைத் தானியங்கி கொண்டு இடுவதால் துப்புரவுப் பணி அதிகரிக்கும் என எண்ணிப் பகுப்பிடாமல் பட்டியலாகக் கொடுத்துள்ளேன். ஒரு சில கட்டுரைகளில் கருவி நூல், வெளியிணைப்பு போன்ற வேறு வழியில் சான்றுகள் இணைக்கப்பட்டிருக்கலாம் எனவே வாய்ப்புள்ளவர்கள் சரிசெய்தோ தவிர்த்தோ பயன்படுத்திக்கொள்ள பரிந்துரைக்கிறேன். கட்டுரைப் பட்டியல் -நீச்சல்காரன் (பேச்சு) 14:44, 15 பெப்பிரவரி 2024 (UTC)Reply
நன்றி நீச்சல்காரன். எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகத் தோன்றினாலும் துப்புரவு செய்வதற்கு நமக்கு முழுமையான பட்டியல் கிடைத்துள்ளது. ஸ்ரீதர். ஞா (✉) 15:35, 15 பெப்பிரவரி 2024 (UTC)Reply
கடந்த சில நாட்களில் 3000 கட்டுரைகளில் தானியங்கிக் கணக்கு மேற்கோள்களைச் சேர்த்துள்ளது. -நீச்சல்காரன் (பேச்சு) 15:30, 1 அக்டோபர் 2024 (UTC)Reply
  விருப்பம்-- சா. அருணாசலம் (உரையாடல்) 16:28, 1 அக்டோபர் 2024 (UTC)Reply
  விருப்பம் சிறப்பான பணி. பாராட்டுகளும், நன்றிகளும்! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:35, 6 அக்டோபர் 2024 (UTC)Reply

பரிந்துரை

தொகு

இந்தப் பகுப்பினை 'சான்று எதுவும் தரப்படாத கட்டுரைகள்' என நகர்த்துவதற்குப் பரிந்துரைக்கிறேன். காரணம்: பொருத்தமான உசாத்துணை இருந்தால், அதனை சான்று உள்ள கட்டுரையாகக் கருதலாம். பொருத்தமான உசாத்துணை இருந்தாலும், மேற்கோள்கள் கண்டிப்பாக இருக்கவேண்டுமென சில நேரங்களில் தவறாக எண்ணப்படுகிறது. இந்தக் குழப்பத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக பகுப்பின் பெயரை மாற்றப் பரிந்துரைக்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:41, 7 ஏப்பிரல் 2024 (UTC)Reply

  விருப்பம் -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 09:43, 7 ஏப்பிரல் 2024 (UTC)Reply
மாற்றலாம்.--Kanags \உரையாடுக 10:56, 7 ஏப்பிரல் 2024 (UTC)Reply

சான்றில்லை வார்ப்புருவில் மாற்றம் செய்துள்ளேன். கட்டுரைகளில் இற்றையாக நேரம் எடுக்கிறது போன்று தெரிகிறது. கண்காணித்துக் கொண்டிருக்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:44, 7 ஏப்பிரல் 2024 (UTC)Reply

@Sridhar G and Kanags: உங்களின் உடனடியான ஒப்புதலுக்கு மிக்க நன்றி. இந்தப் பகுப்பானது சான்றில்லை வார்ப்புருவில் உள்ளடங்கியிருந்ததால், வார்ப்புருவில் மாற்றம் செய்ததும் சுமார் 6,000 கட்டுரைகள் தானாகவே இற்றையாகிக் கொண்டன. 35 கட்டுரைகளில் மட்டும் இப்பகுப்பானது நேரடியாக இடப்பட்டிருந்ததால் அவற்றை மட்டும் தனித்தனியே கையாண்டு துப்புரவு செய்தேன். குறிப்பு: இந்தப் பரிந்துரையை வைப்பது குறித்து ஒரு மாதமாக யோசித்து வந்தேன். எப்படி விளக்குவது என்பதிலேயே தயக்கம் இருந்து வந்தது. நீங்கள் இருவரும் துல்லியமாகப் புரிந்துகொண்டது நிம்மதியைத் தந்தது. வேலையும் எளிதில் முடிந்தது, கூடுதல் நிம்மதி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:40, 7 ஏப்பிரல் 2024 (UTC)Reply

தானியக்கமாக மேற்கோள் சேர்க்கும் பணியும், கவனிக்க வேண்டியவையும்

தொகு

@Neechalkaran: வணக்கம். உங்களின் சிறப்பான பணியால் மேற்கோள்களைப் பெற்றுக்கொள்ளும் கட்டுரைகளை தொடர்ந்து கவனிக்கிறேன். அவற்றில் தேவைப்படும் முன்னேற்றங்களை நடைமுறைப்படுத்த சில குறிப்புகளை இங்கு இடுகிறேன். கவனித்து உரியன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!

 Y ஆயிற்று. ஆமாம். அதே மாதிரியான 240 கட்டுரைகளும் இப்போது சரியாகிவிட்டது. நன்றி. நீச்சல்காரன் (பேச்சு) 02:05, 10 அக்டோபர் 2024 (UTC)Reply

தானியக்கமாக 'சான்றில்லை வார்ப்புரு' சேர்க்கும் பணியும், கவனிக்க வேண்டியவையும்

தொகு

@Neechalkaran: இந்தப் புதிய முயற்சியை செயல்படுத்தும்போது தேவைப்படும் முன்னேற்றங்களுக்காகவும் சில குறிப்புகளை இடுகிறேன். கவனித்து உரியன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:47, 9 அக்டோபர் 2024 (UTC)Reply

நல்லது. சில கட்டுரைக்கு இப்பணியை இயக்கிப் பார்த்துள்ளேன். பின்னூட்டங்களை இடுங்கள். படிப்படியாக எண்ணிக்கையை அதிகரிக்கிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 02:07, 10 அக்டோபர் 2024 (UTC)Reply
0கள் போன்ற கட்டுரைகளில் உள்ளடக்கங்கள் தெரியவில்லை. @Aswn: இவற்றைக் கவனியுங்கள். இல்லையேல் இக்கட்டுரைகள் முழுமையாகத் திருத்தப்பட வேண்டும். உள்ளடக்கம் திருத்தப்பட்டால் மேற்கோள் வார்ப்புரு தேவைப்படாது என நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 21:05, 11 அக்டோபர் 2024 (UTC)Reply
தானியங்கி இத்தலைப்புகளை மேற்கோள்கள் என மாற்றினால் நல்லது. நன்றி. --சத்திரத்தான் (பேச்சு) 12:26, 11 அக்டோபர் 2024 (UTC)Reply

Reflist வார்ப்புரு இடப்பட்டுள்ள துணைத் தலைப்புகள் மேற்கோள்கள் என இருக்குமாறு தானியங்கி உறுதிசெய்து, செயல்பட்டால் நன்மைபயக்கும் என நினைக்கிறேன். இதனை முதலில் செய்துமுடிப்பது சரியாக இருக்கும் என நம்புகிறேன். ஒன்றன்பின் ஒன்றாக செய்வதா [(1) உசாத்துணைகள், ஆதாரங்கள், குறிப்புகள் இவற்றை மேற்கோள்கள் என மாற்றுதல் (2) சான்றில்லை வார்ப்புரு சேர்த்தல்] அல்லது இரண்டையும் ஒரே நேரத்தில் செய்வதா என்பதனை @Neechalkaran: முடிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:09, 12 அக்டோபர் 2024 (UTC)Reply

இரண்டின் தன்மையும் வேறுவேறு என்பதால் இரண்டையும் தனித்தனியாகச் செய்யலாம் என நினைக்கிறேன். ஏற்கனவே தயாராக உள்ள தானியங்கி என்பதால் வார்ப்புரு சேர்க்கும் பணி முதலில் தொடரட்டும். வெறும் பெயரை மட்டும் மாற்றாமல் உசாத்துணையையும் மேற்கோள்களையும் ஒன்றிணைக்க வேண்டிய இடங்களும் உள்ளன. குறிப்பிட்ட வரிக்குச் சுட்டாமல் பொதுவாக மேற்பார்வை செய்த இணைப்புகளை உசாத்துணை அல்லது அடிக்குறிப்பு போல வேறு தலைப்பில் இட்டுள்ளனர். எப்படிச் செய்யலாமென ஆய்வு செய்து பார்க்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 04:12, 13 அக்டோபர் 2024 (UTC)Reply

ஆ.வி.-இலிருந்து மேற்கோள்கள் இறக்குமதியில் தவறு

தொகு

@Neechalkaran: உங்கள் தானியங்கி எவ்வாறு வேலை செய்கிறது என எனக்குத் தெரியவில்லை. ஆனால், மேற்கோள்கள் கட்டுரைகளில் தவறான இடங்களில் பதியப்படுகின்றன. உ+ம்: 1803 இல் இடப்பட்ட மேற்கோள்களைப் பாருங்கள். அந்த இடத்திற்குப் பொருத்தமான மேற்கோள்கள் அல்ல அவை. இதுபோன்றே அனேகமான கட்டுரைகளில் உங்கள் தானியங்கி இடுகிறது. இவற்றைத் திருத்துவதற்கு மேலதிக நேரம் தேவை.--Kanags \உரையாடுக 09:33, 13 அக்டோபர் 2024 (UTC)Reply

இந்தச் சிக்கல் ஆண்டுகள் கட்டுரைகளில் வருகின்றது. மேற்கோளாக எதுவே இல்லாமல் இருப்பதற்கு சிலவற்றை இறக்குகிறது ஆனால் சரியான இடத்தில் இடுவது கடினம். எனவே ஆண்டுகள் கட்டுரையை விதிவிலக்காக்கியுள்ளேன். இனி தவிர்க்கப்படும். -நீச்சல்காரன் (பேச்சு) 09:51, 13 அக்டோபர் 2024 (UTC)Reply

இற்றை

தொகு

இன்று நம்முடைய கட்டுரைகளின் அகர வரிசைப்படி "!" முதல் "ஆங்" வரை சுமார் 18000 கட்டுரைகளை அலசி சுமார் 600 கட்டுரைகளில் சான்றில்லை வார்ப்புரு சேர்க்கப்பட்டுள்ளது. இணையாக ஆங்கில விக்கியிலிருந்து மேற்கோள் இறக்குமதி தானியக்கமும் முடுக்கப்பட்டு, சுமார் 360 கட்டுரைகளில் அவை சரி செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான கட்டுரைகளில் இவை சரியாக உள்ளன. மேலே குறிப்பிட்டவாறு ஆண்டு/நாட்கள் தொடர்புடைய கட்டுரைகளில் மேற்கோள்கள் இறக்குமதியை நிறுத்தியுள்ளேன். வேறு இது போன்ற மேற்கோள்கள் தேவையில்லாத கட்டுரைகள் உள்ளனவா? அவற்றைச் சுட்டிக் காட்டினால் விதி விலக்கில் சேர்த்துக் கொள்கிறேன். இதர திருத்தங்களைச் சுட்டிக் காட்ட வேண்டுகிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 10:31, 13 அக்டோபர் 2024 (UTC)Reply

  விருப்பம். சுமார் 11% கட்டுரைகள் அலசப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; பாராட்டுகள்! பங்களிப்பாளர்களுக்கு ஒரு வாரம் நேரம் கொடுத்து, இதுவரை செய்தவற்றை ஓரளவு அலசிய பிறகு, தானியங்கியின் இயக்கத்தைத் தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:41, 13 அக்டோபர் 2024 (UTC)Reply
@Neechalkaran: நான் கவனித்தவற்றை இங்கு இட்டு வருகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:17, 13 அக்டோபர் 2024 (UTC)Reply
@கி.மூர்த்தி, சத்திரத்தான், Arularasan. G, Balu1967, TNSE Mahalingam VNR, Sridhar G, Balajijagadesh, சா அருணாசலம், and Kanags: இந்தத் துணைத் தலைப்பின் தொடக்கத்தில் நீச்சல்காரன் குறிப்பிட்டுள்ளவாறு, சோதனை முயற்சியாக சுமார் 18,000 கட்டுரைகளை அலசி நடவடிக்கை எடுத்துள்ளார். விவரங்களை இங்கு காணலாம். இந்தக் கட்டுரைகளை பார்வையிட்டு, முன்னேற்றங்களுக்கான பரிந்துரைகளை குறிப்புகள் எனும் பக்கத்தில் இடுமாறு கேட்டுக்கொள்கிறேன். மீதமிருக்கும் 1,50,000 கட்டுரைகளை அலசி, வார்ப்புரு இடுதல் / மேற்கோள்களைக் கொணர்தல் ஆகியப் பணிகளை இன்னமும் சிறப்பாக செய்வதற்கு உதவிகரமாக இருக்கும்! @Neechalkaran: எனது மணல்தொட்டியை குறிப்புகள் எனும் பக்கமாக நகர்த்தியுள்ளேன்; நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:30, 14 அக்டோபர் 2024 (UTC)Reply
தானியங்கியின் செயல்பாட்டில் பிழையைக் கண்டறிந்தாலும், அதனைத் திருத்தாது அப்படியே சுட்டிக்காட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்; புரிந்துகொள்ள எளிதாக இருக்கும் எனும் காரணத்திற்காக. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:37, 14 அக்டோபர் 2024 (UTC)Reply
@Sivakosaran and Nan: உங்களின் கவனத்திற்காகவும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:00, 14 அக்டோபர் 2024 (UTC)Reply
@Neechalkaran: வணக்கம். பயனர்கள் தாம் கவனித்தவற்றை இங்கு இட்டுள்ளனர். இக்குறிப்புகள் உங்களின் அடுத்த தானியங்கி இயக்கத்திற்கு உதவும் என நம்புகிறோம்; நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:34, 19 அக்டோபர் 2024 (UTC)Reply

இற்றை

தொகு

இன்று அடுத்த 18000 கட்டுரைகளை அலசி, 816 கட்டுரைகளில் சான்றில்லை வார்ப்புரு சேர்க்கப்பட்டு, அதில் சுமார் 380 கட்டுரைகளில் ஆங்கில விக்கியிலிருந்து மேற்கோள்கள் இறக்குமதியும் செய்யப்பட்டன. மேலே குறிப்பிட்ட குறிப்புகளில் பெரும்பாலானவை தானியக்க வழியிலேயே சரி செய்யப்பட்டுவிட்டன. சீரான ஒழுங்கமைவு இல்லாத சில கட்டுரைகள்(அன்னா (புதிய ஏற்பாட்டு நபர்), வெண்ணெய், இலங்கையின் அரசியல்) தானியக்கத்தில் சரிசெய்வது கடினமென்பதால் நான் சரிசெய்துள்ளேன். இதுபோல வேறு கட்டுரைகளைக் கண்டால் பயனர்களே திருத்திக் கொள்ளலாம். இதர திருத்தங்களைச் சுட்டிக் காட்ட வேண்டுகிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 17:47, 31 அக்டோபர் 2024 (UTC)Reply

@Neechalkaran சுமார் 50 கட்டுரைகளை திறந்து பார்த்தேன். ஒரேயொரு கட்டுரையில் மட்டும் கட்டுரைக்குரிய வார்ப்புருவிற்கு அடுத்தபடியாக இறுதியில் மேற்கோள்கள் சேர்ந்திருந்தன. அக்கட்டுரையை திருத்தினேன். மற்ற 49 கட்டுரைகள் நன்று. (திறந்து பார்த்ததால் கிடைத்த இன்னொரு பலன்: இந்தத் தானியக்கத்திற்குத் தொடர்பற்ற இன்ன பிற துப்புரவுப் பணிகளை சில கட்டுரைகளில் செய்ய இயன்றது.) எனவே இப்பணியை சிறுகச் சிறுக தொடர்ந்து செய்யலாம் எனக் கருதுகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:36, 9 நவம்பர் 2024 (UTC)Reply

இற்றை டிசம்பர்

தொகு

இன்றைக்கு மேலும் 23000 கட்டுரைகளை அலசி, சுமார் 1200 கட்டுரைகளில் சான்றில்லை வார்ப்புரு சேர்க்கப்பட்டு, அதில் 507 கட்டுரைகளில் ஆங்கில விக்கியிலிருந்து மேற்கோள்கள் இறக்குமதியும் செய்யப்பட்டன. -நீச்சல்காரன் (பேச்சு) 07:42, 13 திசம்பர் 2024 (UTC)Reply

Return to "சான்று எதுவும் தரப்படாத கட்டுரைகள்" page.