நிகாத் தாடு

பாக்கித்தானிய வழக்கறிஞர் மற்றும் செயல்பாட்டாளர்

நிகாத் தாடு (Nighat Dad) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞரும் இணைய ஆர்வலரும் ஆவார். இலாப நோக்கற்ற அமைப்பான எண்ணிலக்க உரிமைகள் அறக்கட்டளையை நடத்துகிறார். தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்புத் துறையில் செய்த பணிகளுக்காக இவருக்கு பல பன்னாட்டு விருதுகள் கிடைத்துள்ளன.

நிகாத் தாடு
Nighat Dad
2016 திசம்பரில் நிகாத் தாடு
பிறப்பு1981 (அகவை 43–44)
இலாகூர், பஞ்சாப், பாக்கித்தான்
தேசியம்பாக்கித்தானியர்
கல்விஇளங்கலைச் சட்டம் முதுநிலை சட்டம்
படித்த கல்வி நிறுவனங்கள்பஞ்சாப் பல்கலைக்கழகம்
பணிவழக்கறிஞர்
செயற்பாட்டுக்
காலம்
2012
பிள்ளைகள்1

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

நிகாத் தாடு 1981 ஆம் ஆண்டில் லாகூரில் பிறந்தார்.[1] இவர் பஞ்சாபின் இயாங் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். லாகூரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் தனது கல்வியைப் பெற்றார். அங்கு இவர் சட்ட முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.[1] இவரது திருமணம் 18 மாதங்கள் மட்டுமே நீடித்தது, ஓர் ஒற்றைத் தாயாக, இவர் தனது குழந்தையின் பாதுகாப்பிற்காக சட்டப் போரை நடத்த வேண்டியிருந்தது. நீதிமன்ற நடவடிக்கைகளின் போது, தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக விட்டுச் செல்வதற்கான சட்டப் போரில் ஈடுபட்ட பல ஒற்றைத் தாய்மார்களை இவர் சந்தித்தார், மேலும் இவர் அத்தகைய பெண்களுக்கு உதவி செய்தும் வருகிறார்.[2]

நிகாத் தாடு தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞர் ஆவார். குற்றவியல் மற்றும் குடும்ப சட்டத்தில் பயிற்சி பெறுகிறார்.[3][4]

2012 ஆம் ஆண்டில், இவர் எண்ணிலக்க உரிமைகள் அறக்கட்டளையை நிறுவினார், அங்கு இவர் நிர்வாக இயக்குநராக இருந்தார். பாக்கித்தான் இணைய பயனர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு இணையவழி துன்புறுத்தல் இடர்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கல்வி கற்பித்தார்.[4]</ref> பெண் கல்விக்கான பாக்கித்தான் ஆர்வலர் மற்றும் இளைய நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் அக்டோபர் 2012 ஆம் ஆண்டு தலிபான்களால் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு நிகாத் தாடு பட்டறைகளில் கலந்து கொண்டார்.[5]

பாக்கித்தானில் இணையவழி பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான பிரச்சாரங்களை நிகாத் தாடு வழிநடத்தினார். அதே போல் இணைய வழியில் கண்காணிப்பதற்கான அரசாங்கத்திற்கு பரந்த அதிகாரங்களை வழங்கும் சட்டத்திற்கு எதிரான பிரச்சாரங்களில் பங்கெடுத்தார். அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று சர்ச்சைக்குரிய மின்னணு குற்றங்கள் தடுப்பு மசோதா 2015 ஆகும்.[6][7] அமிலத் தடுப்புச் சட்டம் 2010 மற்றும் பாக்கித்தானின் குடும்ப வன்முறை மசோதாவின் வரைவிலும் இவர் பங்களித்தார்.[8]

 
2017 ஆம் ஆண்டு நவம்பரில் திறந்த உரிமைகள் குழு மாநாட்டில். குழு உறுப்பினர்கள் நிகாத் தாடு மற்றும் மரியா ஃபரெல் ஆகியோர் ஆர்வமுள்ள குழு உறுப்பினரான அசுமினா துரோடியாவுடன் உள்ளனர்

2015 ஆம் ஆண்டில், பாக்கித்தான் பெண்களுக்கு இணையவழி துன்புறுத்தல்களை எதிர்த்துப் போராட உதவியதற்காக, டைம் பத்திரிகையின் அடுத்த தலைமுறை தலைவர்களின் பட்டியலில் இவர் பெயரிடப்பட்டார்.

2016 ஆம் ஆண்டில், இவருக்கு அட்லாண்டிக் கவுன்சில் எண்ணிலக்க சுதந்திர விருது மற்றும் டச்சு அரசாங்கத்தின் மனித உரிமைகள் துலிப் விருது ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. எல்லைகளற்ற நிருபர்களால் தொடங்கப்பட்ட தகவல் மற்றும் சனநாயக ஆணையத்தின் 25 முன்னணி நபர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.[9]

நவம்பர் 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இவர் கல்வி ஆராய்ச்சிக்கான தி டோர் திட்டத்தின் இயக்குநர்கள் குழுவில் சேர்ந்தார்.[10]

6 மே 2020 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் தேதியன்று , முகநூல் தனது உள்ளடக்க மேற்பார்வை குழுவில் இவரை நியமித்தது.[11]

2023 ஆம் ஆண்டில், நிகாத் தாடு ஐக்கிய நாடுகள் அவையின் புதிய செயற்கை நுண்ணறிவின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[12]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Vrouwen zijn online vogelvrij - OneWorld". OneWorld. 10 December 2016. பார்க்கப்பட்ட நாள் 23 January 2018.
  2. "Tech in Asia - Connecting Asia's startup ecosystem". www.techinasia.com.
  3. "Nighat Dad's award" (in en). DAWN.COM. 8 November 2016. https://www.dawn.com/news/1294848. பார்த்த நாள்: 19 April 2017. 
  4. 4.0 4.1 "Nighat Dad named TIME's next generation leader" (in en). DAWN.COM. 29 May 2015. https://www.dawn.com/news/1184978. பார்த்த நாள்: 19 April 2017. "Nighat Dad named TIME's next generation leader". DAWN.COM. 29 May 2015. Retrieved 19 April 2017.
  5. "Pakistani Nighat Dad featured in Time's list of Next Generation Leaders". 2 June 2015. http://arynews.tv/en/pakistani-nighat-dad-featured-in-times-list-of-next-generation-leaders. பார்த்த நாள்: 6 June 2015. 
  6. "Pak activist among Time's Next Generation Leaders". 31 May 2015. http://nation.com.pk/national/31-May-2015/pak-activist-among-time-s-next-generation-leaders. பார்த்த நாள்: 6 June 2015. 
  7. "Pakistani digital rights activist Nighat Dad among Time's Next Generation Leaders". 30 May 2015. http://tribune.com.pk/story/894519/pakistani-digital-rights-activist-nighat-dad-among-times-next-generation-leaders/. பார்த்த நாள்: 6 June 2015. "Pakistani digital rights activist Nighat Dad among Time's Next Generation Leaders". Express Tribune. 30 May 2015. Retrieved 6 June 2015.
  8. "Nighat Dad". The News International. பார்க்கப்பட்ட நாள் 6 June 2015.
  9. "Nighat Dad | Reporters without borders". RSF. September 9, 2018.
  10. "Strength in Numbers: Growing Our Board of Directors". The Tor Project. November 13, 2018.
  11. "Facebook names first members of oversight board that can overrule Zuckerberg". 7 May 2020. https://www.reuters.com/article/us-facebook-oversight/facebook-names-first-members-of-oversight-board-that-can-overrule-zuckerberg-idUSKBN22I2LQ. பார்த்த நாள்: 8 May 2020. 
  12. "Secretary-General Announces Creation of New Artificial Intelligence Advisory Board". UN Press. 26 October 2023. https://press.un.org/en/2023/sga2236.doc.htm. பார்த்த நாள்: 22 May 2024. 

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
நிகாத் தாடு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wiki.x.io/w/index.php?title=நிகாத்_தாடு&oldid=4203387" இலிருந்து மீள்விக்கப்பட்டது