நாட் டர்னர்

நாட் டர்னர் (Nat Turner, அக்டோபர் 2, 1800-நவம்பர் 11, 1831) ஐக்கிய அமெரிக்காவின் உள்நாட்டுப் போருக்கு முன் அடிமை கிளர்ச்சி செய்தவர் ஆவார். பல அமெரிக்க அடிமைக் கிளர்ச்சிகளில் இக்கிளர்ச்சியில் மிக அடிமை அதிபர்கள் உயிரிழந்தனர்.

நாட் டர்னர்
பிறப்பு1 அக்டோபர் 1800
Southampton County
இறப்பு11 நவம்பர் 1831 (அகவை 31)
Courtland

வர்ஜீனியாவில் பிறந்த நாட் டர்னர் சிறுவராக இருக்கும் பொழுது அமெரிக்காவின் அடிமை சட்டங்களுக்கு எதிராக எழுதப்படிக்க கற்றுக்கொண்டார். பாப்டிஸ்ட் கிறிஸ்தவ சமயத்தை நம்பிக்கை கொண்ட டர்னர் மற்ற அடிமைகளுக்கு பாப்டிஸ்ட் சமயத்தை பற்றி அறவுரை கூறியுள்ளார். பெப்ரவரி 12, 1831 இவர் ஒரு சூரிய ஒளிமரப்பை பார்த்துக்கொண்டு இதை கடவுளின் அடையாளம் என்று நம்பி விட்டு அடிமை கிளர்ச்சியை திட்டமிட்டார். அதே ஆண்டில் ஆகஸ்ட் 21 கிளர்ச்சியை தொடங்கியுள்ளார்.

நாட் டர்னரும் அவரின் துணைவர்களும் வீடு வீடாக சென்று அடிமைகளை விடுதலை செய்து வெள்ளைகாரர்களை கொலை செய்தனர். மொத்தத்தில் 57 வெள்ளைக்காரர்கள் கொல்லப்பட்டனர். 48 மணி நேரத்தில் ஒரு வெள்ளைக்காரர் படை கிளர்ச்சியாளர்களை கைது செய்யப்பட்டனர். நாட் டர்னர் அக்டோபர் 30 வரை கைது செய்யப்படாமல் ஒளித்து கொண்டிருந்தார். நவம்பர் 5 நீதிமன்றத்தில் இவரை தீர்ப்பு குற்றவாளி என்று கூறி நவம்பர் 11 இவர் தொங்கிவிட்டு கொல்லப்பட்டார்.

இக்கிளர்ச்சியை சேர்ந்த 55 அடிமைகளை வர்ஜீனியா மாநிலம் கொலை செய்துள்ளது. மேலும் 200 அடிமைகளை வெள்ளைக்காரர் படைகள் கொலை செய்துள்ளன. இதுக்கு விளைவாக அடிமைகளுக்கு எதிராக இருந்த சட்டங்கள் மேலும் கண்டிப்பான மாற்றப்பட்டன. ஆனால் இன்று வரை பல ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இவரை கதாநாயகனாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


"https://ta.wiki.x.io/w/index.php?title=நாட்_டர்னர்&oldid=2769810" இலிருந்து மீள்விக்கப்பட்டது