நாஞ்சில் நாடு
நாஞ்சில் நாடு அல்லது நாஞ்சிநாடு (Nanjinad, மலையாளம்: നാഞ്ചിനാട്) என்பது 17-ம் நூற்றாண்டு வரை வேணாட்டிற்கு உட்பட்ட பகுதியாகவும், அதன் பின் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட பகுதியாகவும், தற்போதய தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியாகவும் இருக்கிறது.
எல்கைகள்
தொகுநாஞ்சில் நாட்டின் எல்கைகளாக கிழக்கே ஆரல்வாய்மொழி, மேற்கே ஆளூர் பன்றி வாய்க்கால், வடக்கே கடுக்கரை மலை, தெற்கே மணக்குடி காயல் ஆகியன அமைந்திருந்தன.[1]
வரலாறு
தொகுகி.பி 9ம் நூற்றாண்டில் சேர பேரரசர் சேரமான் பெருமாள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டதும் சேரப் பேரரசின் மைய அரசு வலுவிழந்த நிலையில், பிற்காலச் சோழர்களின் தொடர் படையெடுப்பை எதிர்கொள்ளவியலா நிலையிலும், வாரிசில்லா நிலையிலும் ஆய்நாடு வேணாட்டுடன் இணைந்தது. இப்படியாக வேணாடு, தற்போதைய இந்தியாவில் தமிழ் நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தையும், கேரள மாநிலத்தின் கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களையும் உள்ளடக்கியிருந்தது. தொடக்கத்தில் திருவிதாங்கோடும் பின்பு கல்குளமும் வேணாட்டின் தலைநகராக இருந்தன.
பெயர்க்காரணம்
தொகுநாஞ்சில் என்னும் சொல் கலப்பை எனவும், நாடு என்பது மலையாளத்தில் ஊர் எனவும் பொருள்படும்.
நிலப்பரப்பு
தொகுநாஞ்சில் நாட்டில் இருந்த தற்போதைய அகத்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, கிள்ளியூர், திருவட்டார் எனும் 6 வருவாய் வட்டங்கள் ஆகும்.