நல்ல தண்ணி தீவு

தமிழ்நாட்டின் ஒரு தீவு

நல்ல தண்ணி தீவு (Nalla Thanni Theevu) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டத்தின் மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவாகும்.[1] இந்தத் தீவு இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்திற்கு உட்பட்டது.

நல்ல தண்ணி தீவு
புவியியல்
ஆள்கூறுகள்9°06′24″N 78°34′44″E / 9.10667°N 78.57885°E / 9.10667; 78.57885
பரப்பளவு1.01 km2 (0.39 sq mi)
உயர்ந்த ஏற்றம்11.9 m (39 ft)
நிர்வாகம்
India

விளக்கம்

தொகு

இத்தீவானது வாலிநோக்கத்திலிருந்து ஐந்து மைல் தொலைவிலும்,[2] தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 56 கி.மீ தொலைவிலும், வேம்பாரில் இருந்து 24 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இத்தீவில் ஐந்து மீட்டர் தோண்டினாலே நன்நீர் கிடைக்கும். இங்கு சவுக்குத் தோப்புகள் உள்ளன. தமிழ் நாட்டார் தெய்வமான முனீசுவரருக்கு கட்டப்பட்ட ஒரு கோயில் இந்தத் தீவிற்குள் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மாதத்தில், கோயில் திருவிழா நடக்கிறது. அருகிலுள்ள மீன்பிடி கிராமங்களிலிருந்து சுமார் 200-300 பக்தர்கள் விழாவில் கலந்து கொள்கின்றனர்.

மனிதர் யாரும் வாழாக இத்தீவானது மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்காவின் ஒரு பகுதியாகும். இது தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. துறையினரின் அனுமதி இன்றி இங்கு யாரும் செல்லக்கூடாது. இத்தீவின் ஆக்கிரமிப்பு இனமான சீமைக் கருவேலம் மரங்கள் உள்ளன. அவற்றை வனத்துறை அகற்றி அதற்கு பதிலாக உள்ளூர் தாவர இனமான பூவரசு போன்றவற்றை நடும் பணியில் ஈடுபட்டு வருகிறது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழகத்தில் மூழ்கிய தீவுகள் குறித்து நீங்கள் அறிவீர்களா? - சூழும் மற்றுமோர் ஆபத்து". BBC News தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2025-01-21.
  2. சோமலெ, இராமநாதபுரம் மாவட்டம், 1972, பக்கம் 300
  3. Nalla Tanni Tivu / Nallathanni Island / Fresh water Island
"https://ta.wiki.x.io/w/index.php?title=நல்ல_தண்ணி_தீவு&oldid=4195004" இலிருந்து மீள்விக்கப்பட்டது