நடராசர் அபிசேகங்கள்

நடராசர் அபிசேகங்கள் என்பது சிவன் கொண்டிருக்கும் 64 மூர்த்தி வடிவங்களில் முக்கியமான ஒன்றான நடராசர் குடிகொண்டுள்ள சிவன் கோயில்களில் ஆண்டு ஒன்றுக்கு ஆறு அபிசேகங்கள் நடத்தப்படுவதாகும்.[1][2]

நடராசர் அபிசேகங்கள்
நாட்கள்சித்திரை திருவோணம், ஆனி உத்தரம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை, மாசி சதுர்த்தி
காலப்பகுதிஆண்டுக்கு ஆறு நாட்கள்
நிகழ்விடம்சிவன் கோயில்கள்

தமிழ் ஆண்டின் மூன்று நட்சத்திர நாட்களிலும், மூன்று திதி நாட்களிலும் நடராசர் அபிசேகங்கள் செய்யப்படுகின்றன.[3] தமிழ் மாதங்களில் நட்சத்திரங்களின் அடிப்படையில், சித்திரை திருவோணம், ஆனி உத்தரம், மார்கழி திருவாதிரை ஆகிய மூன்று நாட்களிலும், திதி அடிப்படையில், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசிசதுர்த்தி ஆகிய மூன்று நாட்களிலும் ஆக மொத்தம் வருடத்தில் ஆறு நாட்கள் மட்டுமே சிவாலயங்களில் நடராசருக்கு அபிசேகங்கள் நடைபெறுகின்றன.[4]

ஆனித் திருமஞ்சனம் என்றழைக்கப்படும் ஆனி உத்தரம் மற்றும் மார்கழி திருவாதிரை ஆகிய இரண்டு நாட்களும் சூரிய உதயத்திற்கு முன்பே நடராசருக்கு அபிசேகங்கள் நடைபெறுகின்றன.[5]

நடராசர் அபிசேகங்கள் நடக்கும் நாட்களில் முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவன் சன்னதிகளில் ஆராதனைகள் செய்வதாக ஐதீகம் நிலவுகிறது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "ஆனி திருமஞ்சனம் 2024 : ஆனி உத்திரத்தில் நடராஜருக்கு அபிஷேகம் நடப்பது ஏன் ?". Samayam Tamil. பார்க்கப்பட்ட நாள் 2024-09-16.
  2. நன்மையே தரும் மரம். Bharathi Puthakalayam. 2009.
  3. "நடராஜர் அபிஷேகம்". shaivam.org. பார்க்கப்பட்ட நாள் 2024-09-16.
  4. மாலை மலர் (2020-06-03). "ஓர் ஆண்டில் நடராஜருக்கு ஆறு அபிஷேகங்கள்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2024-09-16.
  5. "நடராஜர் அபிஷேகங்கள்!". Dinamalar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-16.
  6. இல.சைலபதி (2020-01-10). "5 சபைகள், 6 அபிஷேகங்கள், 9 தாண்டவங்கள்... ஆருத்ராநாளில் அறிந்துகொள்ள வேண்டிய அற்புத தகவல்கள்!". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 2024-09-16.
"https://ta.wiki.x.io/w/index.php?title=நடராசர்_அபிசேகங்கள்&oldid=4090701" இலிருந்து மீள்விக்கப்பட்டது