தோரிசு விக்கர்சு
தோரிசு விக்கர்சு (Doris Vickers) (born 1980) ஓர் ஆத்திரிய தொல்வானியலாளர் ஆவார். இவர் யுனெசுகோவின் வானியல் மரபுக்கான வலைவாசலின் உள்ளடக்க மேலாளர் ஆவார்.[1]
இவர் உருவேடிகருடன் இணைந்து செயல்படும் தொன்மை வானங்கள் திட்டத்தின் உலகநிலை ஒருங்கிணைப்பாளர் ஆவார்.[2] இது 2006 இல் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் மாந்தப் பண்பாடுகளின் அறிவு அடித்தளத்தை உருவாக்கி அவற்றின் வானியல் அறிவு விரிவைப் பதிவு செய்து "ஒருகோள் – ஒருமாந்தரினம் – ஒருவானம் – ஓர் அறிவு அடித்தளம்" என்பதை விளக்குவதாகும், இந்தத் திட்ட அன்மைய முயற்சி, 2016 இல் இருந்து "முழுத் திட்டத்தையும் புதிய சூழலுக்கு மாற்றுவதே" ஆகும்.[3]
இவர் 2016 பிப்ரவரியில் [[பிபிசி வானொலி அலைவரிசை 4 இல் ஆர்வத்தின் அருங்காட்சியகம் எனும் நிகழ்ச்சியில் தோன்றினார். இந்தக் கற்பனை அருங்காட்சியகத்துக்கு விண்மீன் கடிகாரத்தைக் கருதுகோள்நிலைக் கொடையாக வழங்கினார்.[4]
வெளியீடுகள்
தொகு- Schultz, Rüdiger; Vickers, Doris (26 July 2011). "The ‘Ancient Skies’ project—human cultures and their skies". Proceedings of the International Astronomical Union 7 (S278): 397–403. doi:10.1017/S1743921311012853. http://journals.cambridge.org/download.php?file=%2FIAU%2FIAU7_S278%2FS1743921311012853a.pdf&code=eff06ec06b8d048067d2aaa56a4c8e16. பார்த்த நாள்: 29 July 2016.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Web portal project - core team". Portal to the Heritage of Astronomy. யுனெசுகோ. பார்க்கப்பட்ட நாள் 29 July 2016.
- ↑ "About us". Ancient-Skies: Human Cultures and Their Skies. பார்க்கப்பட்ட நாள் 29 July 2016.
- ↑ "Home page". Ancient-Skies: Human Cultures and Their Skies. பார்க்கப்பட்ட நாள் 29 July 2016.
- ↑ "Series 8: Hound, Vickers, Smit". The Museum of Curiosity. பிபிசி. பார்க்கப்பட்ட நாள் 29 July 2016.