தேஷ்ராஜ் படேரியா

இந்திய நாட்டுப்புறப் பாடகர் (1953-2020)

தேஷ்ராஜ் படேரியா இந்திய நாட்டுப்புற இசைப்பாடகர் ஆவார். இவர் இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தின் புந்தேல்கண்ட் என்னும் பகுதியைச் சேர்ந்தவர்.இவர் புந்தேலி மொழியி்ன் நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் இந்திய அளவிலும் உலக அளவிலும் அறியப்படுகிறார்.

தொடக்க கால வாழ்க்கை

தொகு

தேஷ்ராஜ் படேரியா, இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தில் சத்தர்பூர் மாவட்டத்தின் திந்தானி என்னும் ஊரில் 1953ஆம் ஆண்டில் ஜூலை 25ம் நாள் பிறந்தார். பள்ளிக்கல்வியை முடித்தபிறகு இசைத்துறையில் பட்டயப்படிப்பை நிறைவு செய்தார். சுகாதாரத் துறையில் பணியிலமர்ந்த பின் மாலை நேர விழாக்களில் பாடல்கள் பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இசை வாழ்க்கை

தொகு

1972ஆம் ஆண்டில் தேஷ்ராஜ் மேடை பாடகராகத் தன் இசைவாழ்வைத் தொடங்கினார். அத்துடன் சத்தர்பூர் வானொலியிலும் பாடத்தொடங்கினார். தொடர்ந்து 1980களில் நாட்டுப்புற இசைத்தட்டுகள் பரவலாக வெளிவரத் தொடங்கியபின் படேரியா நாட்டுப்புறப் பாடகராக பிரபலமானார்.

இறப்பு

தொகு

தேஷ்ராஜ் படேரியா தனது 67வது வயதில் 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள் அன்று மாரடைப்பால் மரணமடைந்தார்.[1][2][3][4] படேரியா கடந்த 50 ஆண்டுகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி சாதனை புரிந்துள்ளார்.[5]

இசைப்பணிகளின் பட்டியல்

தொகு
Year Album/Single Track Record Label
1994 மோரோ காண்டோ நிக்காரோ தொகுதி-1 டி- சீரிஸ் (நிறுவனம்)
ராதா பித்தியா தொகுதி -2 டி- சீரிஸ் (நிறுவனம்)
1995 மேலா கோன் மச்சல் காயி டி- சீரிஸ் (நிறுவனம்)
ராதே ஷ்யாம் ராமாயண்(ஸ்ரீ ராமர் பிறப்பு) டி- சீரிஸ் (நிறுவனம்)
மேலா கோன் மச்சல் காயி டி- சீரிஸ் (நிறுவனம்)
1996 மோசே வியாஹ் கரலே ப்யாரி டி- சீரிஸ் (நிறுவனம்)
பனாரஸ் கேந்தியா நா காலோ விவாஹ் கீத் (பன்னா கீத்) டி- சீரிஸ் (நிறுவனம்)
லல்லா ஹர்தோல் கா ஜனம் டி- சீரிஸ் (நிறுவனம்)
ஜே தின் காத்தத் நஹின் காத்தே டி- சீரிஸ் (நிறுவனம்)
மொரோ பியாவ் ஏவ் ந பாஹோ டி- சீரிஸ் (நிறுவனம்)
லாலா ஹொர்தால் கா பாத் டி- சீரிஸ் (நிறுவனம்)
தாரு பீ கே ஆ பயே சயன் டி- சீரிஸ் (நிறுவனம்)
மையின் டூ ஏசே குன்வாரோ ராவ் டி- சீரிஸ் (நிறுவனம்)
பனாரஸ் கேந்திய நா காலோ விவாஹ் கீத் (பன்னா கீத்) டி- சீரிஸ் (நிறுவனம்)
கீல் காதி சே திலி குமையோ டி- சீரிஸ் (நிறுவனம்)
1997 ராதே ஷ்யாம் ராமாயண் (கேக்கே கா கோப்) தொகுதமி டி- சீரிஸ் (நிறுவனம்)
ராம் விவாஹ் தொகுதி -5 டி- சீரிஸ் (நிறுவனம்)
தனுஷ் யக்யம் டி- சீரிஸ் (நிறுவனம்)

மேற்கோள்கள்

தொகு
  1. India Today (5 September 2020). "Bundelkhand folk singer Deshraj Pateriya dies at 67". www.indiatoday.in (in English).{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Shri Deshraj Pateriya enriched regional folk music CM Shri Chouhan expresses grief over demise of Shri Pateria". mpinfo.org. 5 September 2020.
  3. School Hos (5 September 2020). "Bundelkhand Folk Singer Deshraj Pateriya Died". schoolhos.com. Archived from the original on 13 May 2021. Retrieved 13 May 2021.
  4. msn News (5 September 2020). "Bundelkhand folksinger Deshraj Pateriya dies at 67". msn.com/.
  5. The Asian Age (6 September 2020). "Famous Bundeli Folk Singer Dies" – via PressReader.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wiki.x.io/w/index.php?title=தேஷ்ராஜ்_படேரியா&oldid=4209300" இலிருந்து மீள்விக்கப்பட்டது