தெற்கு ஆத்திரேலியா
தெற்கு ஆத்திரேலியா (South Australia, SA) என்பது ஆத்திரேலியாவின் தென்-நடுப் பகுதியில் உள்ள ஓர் மாநிலம் ஆகும். இதன் மொத்த நிலப்பரப்பு 984,321 சதுர கிலோமீட்டர்கள் (380,048 சதுர மைல்).[6] இது ஆத்திரேலிய மாநிலங்களில் நான்காவது பெரியது ஆகும். ஆத்திரேலியக் கண்டத்தின் மிகவும் வறண்ட பகுதிகளைக் கொண்ட இம்மாநிலம் 1.8 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டுள்ளது.[3] மக்கள்தொகை அடிப்படையில் இது ஐந்தாவது பெரிய மாநிலம் ஆகும். 77% க்கும் அதிகமான தெற்கு ஆத்திரேலியர்கள் தலைநகர் அடிலெய்டில் அல்லது அதன் சுற்றுப்புறங்களில் வாழ்கின்றனர். மாநிலத்தில் உள்ள பிற மக்கள்தொகை மையங்கள் ஒப்பீட்டளவில் சிறியவை; இரண்டாவது பெரிய மையமான மவுண்ட் காம்பியர், 26,878 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.[7]
தெற்கு ஆத்திரேலியா South Australia | |
---|---|
அடைபெயர்(கள்):
| |
நாடு | ஆத்திரேலியா |
கூட்டமைப்புக்கு முன் | தெற்கு ஆத்திரேலிய மாகாணம் |
குடியேற்றம் | 15 ஆகத்து 1834 |
மாகாணமாக அறிவிப்பு | 19 பெப்ரவரி 1836 |
பொறுப்புள்ள அரசு | 22 ஏப்பிரல் 1857 |
கூட்டமைப்பு | 1 சனவரி 1901 |
தலைநகர் | அடிலெயிட் |
நிர்வாகம் | 74 உள்ளாட்சி சபைகள் |
பெரிய நகரம் | தலைநகர் |
இடப்பெயரர் |
|
அரசு | |
• மன்னர் | சார்லசு III |
• ஆளுநர் | பிரான்செசு அடம்சன் |
• முதலமைச்சர் | பீட்டர் மலினாசுக்கசு (தொ.க) |
கிறிசு குராக்கிசு | |
சட்டமன்றம் | தெற்கு ஆத்திரேலிய நாடாளுமன்றம் |
• மேலவை | சட்டமன்ற மேலவை |
• கீழவை | கீழவை |
நீதித்துறை | மீஉயர் நீதிமன்றம் |
ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் | |
• மேலவை | 12 உறுப்பினர்கள் (76 இல்) |
10 இருக்கைகள் (151 இல்) | |
பரப்பளவு | |
• நிலம் | 984,321[2] km2 (380,048 sq mi) |
உயர் ஏற்றம் (ஊட்ரொஃப் குன்று) | 1,435 m (4,708 ft) |
குறைந்த ஏற்றம் (ஐர் ஏரி) | −16 m (−52 ft) |
மக்கள்தொகை | |
• மார்ச் 2022 மதிப்பு | 1,815,485[3] (5-ஆவது) |
• அடர்த்தி | 1.84/km2 (4.8/sq mi) (6-ஆவது) |
மொத்த மாநில உற்பத்தி | 2020 மதிப்பு |
• மொத்தம் | AU$108.334 பில்.[4] (5-ஆவது) |
• தலைக்கு | AU$61,582 (7-ஆவது) |
ம.மே.சு (2021) | ![]() very high · 7-ஆவது |
நேர வலயம் |
|
• கோடை (பசேநே) | UTC+10:30 (ACDT) |
அஞ்சல் குறியீடு | SA |
ISO 3166 குறியீடு | AU–SA |
சின்னங்கள் | |
பறவை | பைப்பிங் ஷ்ரைக் (ஆத்திரேலிய மேக்பை) |
மீன் | கடல் வேதாளம் (Phycodurus eques) |
மலர் | பாலைவனப் பட்டாணி (Swainsona formosa) |
நிறம் | சிவப்பு, நீலம், தங்கம் |
இணையதளம் | sa |
தெற்கு ஆத்திரேலியா தசுமேனியா தவிந்த ஏனைய அனைத்து மாநிலங்களுடனும் எல்லைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளது. இதன் எல்லைகளாக மேற்கே மேற்கு ஆத்திரேலியா, வடக்கே வட ஆள்புலம், வடகிழக்கில் குயின்ஸ்லாந்து, கிழக்கே நியூ சவுத் வேல்ஸ், தென்கிழக்கே விக்டோரியா, தெற்கே பெரும் ஆஸ்திரேலிய விரிகுடா ஆகியன உள்ளன.[8] இந்த மாநிலம் ஆத்திரேலிய மக்கள்தொகையில் 8% க்கும் குறைவாக உள்ளது, ஆறு மாநிலங்கள் மற்றும் இரண்டு ஆள்புலங்களில் மக்கள்தொகையில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதன் பெரும்பான்மையான மக்கள் பெருநகர அடிலெய்டில் வசிக்கின்றனர். எஞ்சிய பெரும்பாலானோர் தென்கிழக்கு கடற்கரைப் பகுதியிலும், முர்ரே ஆற்றின் வளமான பகுதிகளிலும் குடியேறியுள்ளனர். மாநிலத்தின் ஐரோப்பியக் குடியேற்றத் தோற்றம் ஆத்திரேலியாவில் ஒரு குற்றவாளிக் குடியேற்றமாக இல்லாமல், சுதந்திரமாக குடியேறிய, திட்டமிடப்பட்ட பிரித்தானிய மாகாணமாகத் தனித்துவமானது.[9] 1836 திசம்பர் 28 ஆம் நாள் குடியேற்றக் கால அரசாங்கம் இயங்கத் தொடங்கியது.[10]
கண்டத்தின் ஏனைய பகுதிகளைப் போலவே, இப்பகுதியும் பல தொல்குடியினர்களாலும் பழங்குடி மொழிகளாலும் மனித ஆக்கிரமிப்பின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. தலைநகர் அடிலெய்டு நிறுவப்படுவதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு, 1836 சூலை 26 அன்று, தெற்கு ஆத்திரேலியக் கம்பனி, கங்காரு தீவின் கிங்சுகோட் என்ற இடத்தில் ஒரு தற்காலிகக் குடியேற்றத்தை நிறுவியது.[11] குடியேற்றத்திற்குப் பின்னால் உள்ள வழிகாட்டும் கொள்கை "திட்டமிடப்பட்ட குடியேற்ற" ஆகும், இது எட்வர்ட் வேக்ஃபீல்டு என்பவரால் முன்வைக்கப்பட்ட கோட்பாடு.[12] சுதந்திரமான குடியேற்றவாசிகளுக்கான நாகரிகத்தின் மையமாக மாகாணத்தை நிறுவுவது, குடிசார் உரிமைகள், மத சகிப்புத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்வதே இலக்காக இருந்தது. இன்று, இது அதன் சிறந்த ஒயின், கலாச்சார விழாக்களுக்காக அறியப்படுகிறது. மாநிலத்தின் பொருளாதாரம் வேளாண்மை, உற்பத்தி, சுரங்கத் தொழில்களால் ஆதிக்கம் செலுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Wordwatch: Croweater". ABC NewsRadio. Archived from the original on 15 September 2005. பார்க்கப்பட்ட நாள் 11 October 2011.
- ↑ "Area of Australia - States and Territories". 27 June 2014.
- ↑ 3.0 3.1 "National, state and territory population – March 2021". Australian Bureau of Statistics. 26 September 2022. Archived from the original on 21 November 2022. பார்க்கப்பட்ட நாள் 27 November 2022.
- ↑ "5220.0 – Australian National Accounts: State Accounts, 2019–20". Australian Bureau of Statistics. 20 November 2020. பார்க்கப்பட்ட நாள் 20 January 2021.
- ↑ "Sub-national HDI - Area Database". Global Data Lab (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 18 February 2023.
- ↑ Area of Australia - States and Territories Geoscience Australia. Retrieved 9 January 2022.
- ↑ "2021 Mount Gambier, Census All persons QuickStats | Australian Bureau of Statistics". abs.gov.au. பார்க்கப்பட்ட நாள் 2024-01-01.
- ↑ பெரும்பாலான ஆத்திரேலியர்கள், பன்னாட்டு நீர்ப்பரப்பு அமைப்பு (IHO) மூலம் அதிகாரப்பூர்வமாக வரையறுக்கப்பட்ட இந்தியப் பெருங்கடலைக் காட்டிலும், கண்டத்தின் தெற்கே உள்ள நீர்நிலையை தெற்குப் பெருங்கடல் என்கின்றனர். 2000 ஆம் ஆண்டில், IHO உறுப்பு நாடுகளின் வாக்கெடுப்பில், "தெற்குப் பெருங்கடல்" என்பது அந்தாட்டிக்காவிற்கும் 60 பாகை தெற்கு அட்சக்கோட்டிற்கும் இடைப்பட்ட நீருக்கு மட்டுமே பொருந்தும் என வரையறுத்தது.
- ↑ South Australian Police Historical Society Inc. பரணிடப்பட்டது 1 அக்டோபர் 2011 at the வந்தவழி இயந்திரம் Accessed 13 September 2011.
- ↑ Anderson, Margaret. "The first reading of the proclamation". SA History Hub. History Trust of South Australia. பார்க்கப்பட்ட நாள் 5 September 2021.
- ↑ "Kangaroo Island Council – Welcome". Kangaroo Island Council. Archived from the original on 9 August 2010. பார்க்கப்பட்ட நாள் 10 August 2010.
- ↑ "The Wakefield Model of Systematic Colonisation in South Australia". தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம். 2008.[தொடர்பிழந்த இணைப்பு]
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் தெற்கு ஆத்திரேலியா பற்றிய ஊடகங்கள்
- Geographic data related to தெற்கு ஆத்திரேலியா at OpenStreetMap
- sa.gov.au
- Official Insignia and Emblems Page
- South Australia's greenhouse (climate change) strategy (2007–2020)
- Ground Truth – towards an Environmental History of South Australia. பரணிடப்பட்டது 7 அக்டோபர் 2001 at the வந்தவழி இயந்திரம்.