துளஜா குகைகள்
துளஜா குகைகள் (Tulja Caves), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தின் ஜூன்னாரிலிருந்து மேற்கே 4 கிமீ தொலைவில் உள்ள சிவனேரி மலையில் உள்ள பௌத்தக் குடைவரைகள் ஆகும்.[1] துளஜா குகை அருகே அமைந்த பிற குடைவரைகள் மன்மோடி குகைகள், சிவனேரி குகைகள் மற்றும் லெண்யாத்திரி ஆகும். துளஜா குகைகள், புனே நகரத்திலிருந்து 95 கிமீ தொலைவில் உள்ளது.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/2/21/Tulja_lena_caves_group.jpg/350px-Tulja_lena_caves_group.jpg)
துளஜா குகைகளில் குடைவரை ஒன்றில், வட்ட வடிவ சைத்திய மண்டபத்தில் உள்ள தூபியைச் சுற்றிலும் 12 எண்கோண வடிவ தூண்களைக் கொண்டது.[2]
கிமு 50ல் நிறுவப்பட்ட துளஜா குகைகள், 11 பௌத்தக் குடைவரைகளைக் கொண்டது. தற்போது குடைவரை எண் 4ல் துளஜா தேவியின் சிலை நிறுவப்பட்டு, இந்துக்களின் குகையாக மாற்றப்பட்டுள்ளது.[1][3]
படக்காட்சிகள்
தொகு-
தொலைநோக்குப் பார்வையில் துளஜா குகைகள்
-
சைத்தியத்தின் சிதிலமடைந்த பகுதிகள்.
-
சைத்தியத்தின் அலங்கார வேலைப்பாடுகள்
-
துளஜா குகையின் சைத்தியத்தின் வரைபடம்
-
துளஜா குகைகளின் சாளரத்தின் சிற்ப வேலைப்பாடுகள்
-
குடைவரை முகப்பு அலங்கார வளைவுகள்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Ahir, D. C. (2003). Buddhist sites and shrines in India : history, art, and architecture (1. ed.). Delhi: Sri Satguru Publ. p. 192. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8170307740.
- ↑ Dalal, Roshen (2010). The religions of India : a concise guide to nine major faiths (Rev. ed.). New Delhi: Penguin Books. p. 177. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0143415174.
- ↑ Fergusson, James; Burgess, James (1880). The cave temples of India. London : Allen.
வெளி இணைப்புகள்
தொகு- Kevin Standage, An Indian Travel Photography Blog (Tulja Lena caves)
- துளஜா குடைவரைகளின் காணொளி
- துளஜா குடைவரைகளின் காணொளி
19°12′30″N 73°50′08″E / 19.2083°N 73.8356°E
வார்ப்புரு:புனே மாவட்டம்