துர்க்கானா ஏரி
துர்க்கானா (Lake Turkana) என்பது கென்யாவின் பிளவுப் பள்ளத்தாக்கில், வடக்கு கென்யாவில் உள்ள ஒரு உவர்நீர் ஏரியாகும். இதன் வடக்கு முனை எத்தியோப்பியாவிற்குள் செல்கிறது. [2] இது உலகின் மிகப்பெரிய நிரந்தர பாலைவன ஏரியும் உலகின் மிகப்பெரிய உவர்கார ஏரியும் ஆகும். இது காசுப்பியன் கடல், இசிக்-குல் ஏரி, வான் ஏரி (சுருங்கி வரும் தெற்கு ஆரல் கடலை கடந்து) ஆகியவற்றுக்கு அடுத்து உலகின் நான்காவது பெரிய உப்பு ஏரியாகும். [3] மேலும் உலகின் அனைத்து ஏரிகளிலும் பரப்பளவில் இது 24 வது இடத்தில் உள்ளது.
துர்க்கானா ஏரி | |
---|---|
ஜேட் கடல் | |
![]() | |
![]() | |
அமைவிடம் | வடமேற்கு கென்யா மற்றும் தென்மேற்கு எத்தியோப்பியாவுடன் சேர்ந்துள்ளது |
ஆள்கூறுகள் | 3°35′N 36°7′E / 3.583°N 36.117°E |
ஏரி வகை | உவர்ப்பு, மோனோமிக்டிக், நீர்க்காரம், எண்டோர்ஹீக் |
முதன்மை வரத்து | ஓமோ ஆறு, துர்க்வெல் ஆறு, கெரியோ ஆறு |
முதன்மை வெளியேற்றம் | ஆவியாதல் |
வடிநிலப் பரப்பு | 130,860 km2 (50,530 sq mi) |
வடிநில நாடுகள் | எத்தியோப்பியா, கென்யா, தெற்கு சூடான் |
அதிகபட்ச நீளம் | 290 km (180 mi) |
அதிகபட்ச அகலம் | 32 km (20 mi) |
மேற்பரப்பளவு | 6,405 km2 (2,473 sq mi) |
சராசரி ஆழம் | 30.2 m (99 அடி) |
அதிகபட்ச ஆழம் | 109 m (358 அடி) |
நீர்க் கனவளவு | 193 km3 (46 cu mi) |
உவர்ப்புத் தன்மை | 0.244%[1] |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 360.4 m (1,182 அடி) |
Islands | வடக்குத் தீவு, நடுத் தீவு, தெற்குத் தீவு (எரிமலை) |
குடியேற்றங்கள் | எல் மோலோ, லோயங்கலானி, கலோகோல், எலியே ஸ்பிரிங்ஸ், இலெரெட், ஃபோர்ட் பன்யா. |
மேற்கோள்கள் | |
யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களம் | |
அலுவல்முறைப் பெயர் | துர்க்கானா ஏரி தேசியப் பூங்கா |
கட்டளை விதி | Natural: viii, x |
உசாத்துணை | 801 |
பதிவு | 1997 (21-ஆம் அமர்வு) |
விரிவுகள் | 2001 |
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
![]() |
துர்கானா ஏரிக்கு பெருமளவிலான நீரை கொண்டு சேர்க்கும் ஓமோ ஆற்றின் குறுக்கே எத்தியோப்பியாவில் கில்கெல் கிப் III அணை கட்டப்படுவதால், ஏரி பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. [4]
இந்த ஏரி பொதுவாக குடிநீருக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், இதன் உப்புத்தன்மை (சற்று உவர் நீர் ) மற்றும் மிக அதிக அளவான புளோரைடு (சாதாரணமாக நீரில் புரோடைடு இருக்கவேண்டியதைக் காட்டிலும் அதிகம்) ஆகியவை பொதுவாக இந்த ஏரிநீரை நேரடியாகக் குடிப்பதற்குத் தகுதியற்றதாக ஆக்குகிறன. இது அசுத்தமான நீரால் பரவும் நோய்களின் ஆதாரமாகவும் உள்ளது. ஏரியின் கரையில் உள்ள பெரும்பாலான மக்கள் குடிநீருக்காக நிலத்தடி நீரூற்றுகளை நம்பியுள்ளனர். [5] குடிப்பதற்குப் பொருந்த இயலாத அதே பண்புகள், பாசனத்துக்கு இதன் நீரை பயன்படுத்த போதுமான தகுதி இல்லாத்தாக்குகின்றன. [6] இப்பகுதியின் காலநிலை வெப்பமாகவும் மிகவும் வறண்டதாகவும் உள்ளது.
சுற்றியுள்ள பகுதிகளின் பாறைகள் பெரும்பாலும் எரிமலைகளாகும். ஏரியில் உள்ள நடுத் தீவு என்பது ஒரு உயிருள்ள எரிமலையாகும், அது நீராவியை வெளியிடுகிறது. ஏரியின் கிழக்கு மற்றும் தெற்குக் கரையில் பாறைக் கரைகள் காணப்படுகின்றன, ஆனால் மேற்கு மற்றும் வடக்கில் குன்றுகள், நீரடி மணற்கரைகள், ஆழமற்ற நீர்நிலைப்பகுதி போன்றவை குறைந்த உயரத்தில் உள்ளன.
பகலில் வெப்பமடையும் ஏரி நிலத்தை விட மெதுவாக குளிர்ச்சியடைவதால், கரையோரக் காற்று மிகவும் வலுவாக இருக்கும். திடீரென, கடுமையான புயல்கள் அடிக்கடி வீசுகின்றன. இந்த ஏரியில் மூன்று ஆறுகள் ( ஓமோ, துர்க்வெல் மற்றும் கெரியோ ) வந்து கலக்கின்றன. ஆனால் ஏரியில் நீர் வெளியேற்றம் இல்லாததால், இதன் ஒரே நீர் இழப்பு ஆவியாதல் மட்டுமே ஆகும். ஏரியின் அளவு மாறுபடுவதாக உள்ளது. எடுத்துக்காட்டாக, அதன் நிலை 1975 மற்றும் 1993 க்கு இடையில் 10 மீ (33 அடி) குறைந்துள்ளது. [7] ஏரியிலிருந்து நீர் வெளியேற்றம் தற்போது இல்லாத போதிலும், சூழலிலில் இது நைல் ஆற்றின் ஒரு பகுதியாக அல்லது குறைந்த பட்சம் தொடர்புடையதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த ஏரி அமைப்புடன் வரலாற்றுக்கு முந்தைய கால தொடர்பை, அவற்றின் நீர்வாழ் விலங்கினங்களில் உள்ள ஒற்றுமைகள் காட்டுவதாக உள்ளன. [6]
உள்ளூர் வெப்பநிலை (இதன் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை பொதுவாக 27–31 இருக்கும். மேலும் இப்பகுதியின் காற்றின் சராசரி வெப்பநிலை பொதுவாக இதை ஒத்ததாகவோ அல்லது சற்று அதிகமாகவோ இருக்கும்), வறட்சி மற்றும் புவியியல் ரீதியாக அணுக முடியாத தன்மை காரணமாக, ஏரி அதன் இயற்கைத் தன்மையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. [6] நைல் முதலைகள் இதன் கரையோர சமதள பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகின்றன. பாறைகள் நிறைந்த கடற்கரைகளானது தேள், கம்பள விரியன் பாம்புகளின் இருப்பிடமாகுமாக உள்ளது. இந்த ஏரி மீன் வளம் கொண்டதாக உள்ளது. ஏரியில் மீன்பிடித்தல் உள்ளூர் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. ஆனால் இது நீர் மட்டம் குறைதல், அதிகப்படியான மீன்பிடித்தல் ஆகியவற்றால் இதன் மீன் வளம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
துர்க்கானா ஏரி தேசியப் பூங்கா இப்போது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக பட்டியலிடப்பட்டுள்ளது. சிபிலோய் தேசிய பூங்கா ஏரியின் கிழக்கு கரையில் அமைந்துள்ளது, அதே சமயம் நடுத் தீவு தேசிய பூங்கா, தெற்கு தீவு தேசிய பூங்கா ஆகியவை ஏரியில் உள்ளன. இரண்டுமே நைல் முதலைகளுக்கு பெயர் பெற்றவை.
துர்கானா ஏரியைச் சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான ஹோமினிட் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. [4]
நைரோபியில் இருந்து இரண்டு நாட்கள் பயணத் தொலைவில் இப்பகுதி உள்ளது. இப்பகுதி முதன்மையாக களிமண் நிறைந்ததாகும். இது கடல்நீரை விட அதிக காரத்தன்மை கொண்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Hydrological Impacts of Ethiopia’s Omo Basin On Kenya’s Lake Turkana Water Levels & Fisheries (2010), page 2-65
- ↑ The boundary between Ethiopia and Kenya has been a contentious matter. A brief consideration of the topic can be found in the State Department document, Ethiopia – Kenya Boundary பரணிடப்பட்டது 18 மார்ச்சு 2009 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Lake Turkana in Kenya - The Jade Sea". www.kenyasafari.com. பார்க்கப்பட்ட நாள் 2020-05-25.
- ↑ 4.0 4.1 Moran, B. (23 May 2017). "A way of life under threat in Kenya as Lake Turkana shrinks". The New Humanitarian. http://www.thenewhumanitarian.org/feature/2017/05/23/way-life-under-threat-kenya-lake-turkana-shrinks.
- ↑ Serem, B.. "For villages in Turkana, Kenya, a new initiative that brings clean water to the community is life-changing". UNICEF.
- ↑ 6.0 6.1 6.2 Johnson, T.C.; J.O. Malala (2009). "Lake Turkana and its connection to the Nile". In H.J. Dumont (ed.). The Nile. Monographiae Biologicae. Vol. 89. Springer Science + Business Media B.V. pp. 287–306. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4020-9725-6.
- ↑ Historic lake levels are graphed in the World Lakes Database பரணிடப்பட்டது 18 சனவரி 2006 at the வந்தவழி இயந்திரம்.