தும்பூர்
தும்பூர் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தின் தும்பூர் ஊராட்சிக்குட்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]
தும்பூர் | |
---|---|
தும்பூர், விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: 12°01′15″N 79°28′37″E / 12.0208°N 79.4770°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | விழுப்புரம் |
ஏற்றம் | 65.25 m (214.07 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 3,408 |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 605203 |
புறநகர்ப் பகுதிகள் | விழுப்புரம், ஒரத்தூர், முண்டியம்பாக்கம், தென்னமாதேவி ஊராட்சி, திருவாமாத்தூர் |
மக்களவைத் தொகுதி | விழுப்புரம் |
சட்டமன்றத் தொகுதி | விக்கிரவாண்டி |
அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து சுமார் 65.25 மீ. உயரத்தில், (12°01′15″N 79°28′37″E / 12.0208°N 79.4770°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு தும்பூர் அமையப் பெற்றுள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், தும்பூர் ஊரின் மொத்த மக்கள்தொகை 3,408 பேர் ஆகும். இதில் 1,794 பேர் ஆண்கள் மற்றும் 1,614 பேர் பெண்கள் ஆவர்.[2]
சமயம்
தொகுஇந்துக் கோயில்கள்
தொகுதிருவாலீசுவரர் கோயில்[3] என்ற சிவன் கோயில், அம்மச்சாரம்மன் கோயில்[4] மற்றும் பிடாரியம்மன் கோயில்[5] என்ற கிராமக் கோயில்கள் ஆகியவை தும்பூர் பகுதியில் அமைந்துள்ளன. இக்கோயில்கள், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகின்றன.
அரசியல்
தொகுதும்பூர் பகுதியானது, விக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, விழுப்புரம் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Gram Panchayat (ग्राम पंचायत): THUMBUR (தும்பூர் )". localbodydata.com. பார்க்கப்பட்ட நாள் 2025-01-24.
- ↑ "Thumbur Village Population - Viluppuram - Viluppuram, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2025-01-24.
- ↑ "Arulmigu Thiruvaleeswarar Temple, Thumbur - 605203, Viluppuram District [TM022771].,THIRUVALEESWARAR,THIRUVALEESWARAR". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2025-01-24.
- ↑ "Arulmigu Ammachaaramman Temple, Thumbur - 605203, Viluppuram District [TM022776].,AMMACHAR AMMAN,AMMACHAR AMMAN". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2025-01-24.
- ↑ "Arulmigu Pidariyamman Temple, Thumbur - 605203, Viluppuram District [TM022775].,PIDARIAMMAN". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2025-01-24.
- ↑ "Thumbur Village , Vikravandi Block , Villupuram District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2025-01-24.