திருப்பாதிரிப்புலியூர் தொடருந்து நிலையம்
திருப்பாதிரிப்புலியூர் தொடருந்து நிலையம் (Thirupadiripuliyur railway station, நிலையக் குறியீடு:TDPR) ஆனது இந்தியாவின், தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டத்தின் தலைமையகமான, கடலூர் நகரில் அமைந்துள்ளது இரண்டு தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். மற்றொன்று கடலூர் துறைமுகம் சந்திப்பு தொடருந்து நிலையம் ஆகும். இது தென்னக இரயில்வேயின், திருச்சிராப்பள்ளி கோட்டத்துக்கு உட்பட்டது. இது சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் முதன்மை வழித்தடத்தில் அமைந்துள்ளது.
திருப்பாதிரிப்புலியூர் | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
![]() | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | திருப்பாதிரிப்புலியூர், கடலூர் மாவட்டம், தமிழ்நாடு இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 11°45′N 79°45′E / 11.75°N 79.75°E | ||||
ஏற்றம் | 10 m (33 அடி)[1] | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
தடங்கள் | சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் முதன்மை வழித்தடம் | ||||
நடைமேடை | 2 | ||||
இருப்புப் பாதைகள் | 2, அகலப்பாதை | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயங்குகிறது | ||||
நிலையக் குறியீடு | TDPR | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | திருச்சிராப்பள்ளி | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | ஆம் | ||||
|
அமைவிடம்
தொகுஇந்த தொடருந்து நிலையம் கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூர், சுப்ராயலு நகரில் அமைந்துள்ளது. இதன் அருகிலுள்ள வானூர்தி நிலையம் புதுச்சேரியில் 23 கிலோமீட்டர் (14 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.
வழித்தடம்
தொகுஇந்த நிலையம் சென்னையை, நாகப்பட்டினம், காரைக்குடி, திருவாரூர், இராமேஸ்வரம் போன்ற இடங்களுடன் இணைக்கும் முக்கிய பாதையில் அமைந்துள்ளது.
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
தொகுஇந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.[2][3][4]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி தொடருந்து கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, திருப்பாதிரிப்புலியூர் தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 6.38 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[5][6][7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Station Info". India Rail Info. பார்க்கப்பட்ட நாள் 14 November 2015.
- ↑ "AMRIT BHARAT STATIONS". Press Information Bureau (New Delhi). 10 Feb 2023. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897980.
- ↑ https://sansad.in/getFile/annex/262/AU1585.pdf?source=pqars
- ↑ https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1941449
- ↑ https://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/thanjavur-mayiladuthurai-and-karur-railway-junctions-set-to-witness-transformation-under-amrit-bharat-station-scheme/article67165108.ece/amp/
- ↑ https://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/15-railway-stations-in-tiruchi-division-chosen-for-amrit-bharat-station-scheme/article66450874.ece/amp/
- ↑ https://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/tirupadirippuliyur-railway-station-to-get-a-makeover-under-amrit-bharat-station-scheme/article67438035.ece
வெளி இணைப்புகள்
தொகு