திருக்குறள் நுண்பொருள்மாலை

திருக்குறள் நுண்பொருள்மாலை [1] என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காரி இரத்தினக் கவிராயர் என்பவரால் எழுதப்பட்ட உரைநூல் குறிப்பு. இது திருக்குறள் பரிமேலழகர் உரைக்குத் தரும் சிறப்பு விளக்கமாகத் திகழ்கிறது. இது தனி நூலாக வெளிவரவில்லை. எனினும், 'திருக்குறள் உரைவளம்' [2] என்னும் நூலில் இவரது உரை இணைக்கப்பட்டுள்ளது. [3]

திருக்குறள் நுண்பொருள்மாலையில் காணப்படும் குறிப்புகளில் சில

  • அவாய்நிலை, புணர்ச்சி விகாரம், எச்சம், அன்மொழித்தொகை [4] முதலான இலக்கணப் பகுதிகளுக்கு இவர் விளக்கம் அளித்துள்ளார்.
  • தோணி தரை தட்டிற்று என்பதைச் 'சில்லம் தட்டிற்று' என்கிறார்.
  • திருக்குறள் அறத்துப்பால் உரையில் இவரது குறிப்புகள் மிகுதி.

அடிக்குறிப்புகள்

தொகு
  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
  2. தண்டபாணி தேசிகர் தொகுப்பு, தரும்புர ஆதீனப் பதிப்பு
  3. "அறத்துப்பால் பரிமேலழகர் ஐயன் உரையுள் இரத்தினக் கவிராயன் எடுத்துச் சேர்த்த நுண்பொருள்மாலை முற்றிற்று" என்னும் குறிப்புடன் இவரது உரை இணைக்கப்பட்டுள்ளது.
  4. 15, 25, 113, 380 திருக்குறள் பகுதி விளக்கங்கள்