தானியங்கி தொடருந்து
தானியங்கி தொடருந்து இயக்கம் அல்லது தானியங்கி தொடருந்து (ஆங்கிலம்: Automatic Train Operation அல்லது Automatic Train) (ATO) என்பது மனித உள்ளீடு இல்லாமல் தானாக இயங்கும் தானியங்கி தொடருந்து அமைப்பைக் கொண்ட ஒரு தொடருந்து இயக்கம் ஆகும்.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/8/8e/Cab_of_T251_set_2037.jpg/320px-Cab_of_T251_set_2037.jpg)
இந்த வகைத் தொடருந்துகளை இயக்கவும் அல்லது கண்காணிக்கவும் மனித உள்ளீடுகள் தேவை இல்லை. அவை மின்னியல் முறைமையில் தன்னியக்கமாகவே செயல்படுகின்றன.[1]
இந்த வகை தானியங்கி தொடருந்துகள் திட்டமிடப்பட்டபடி நிறுத்துவது; வேகத்தைக் கட்டுப்படுத்துவது; கதவுகளைத் திறப்பது அல்லது மூடுவது போன்ற செயல்பாடுகளை, மனித வழிக்காட்டல்கள் இல்லாமலேயே நிறைவேற்றுகின்றன.[2]
பொது
தொகுதானியக்கத்தின் அளவு தானியக்கத் தரத்தால் குறிக்கப்படுகிறது (ஆங்கிலம்: Grade of Automation) (GoA). மேலும், தானியக்கத்தின் தரங்கள் ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டு, தரம் 1-இல் இருந்து தரம் 5 வரை என வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்தத் தானியக்கத் தரத்தில் தரம் 4 (GoA4) வரையிலான தொடருந்துகளில், ஊழியர்கள் எவரும் இல்லாமல் அவை தாமாகவே செயல்படுத்திக் கொள்கின்றன.[3]
தரம் 1-இல் இருந்து தரம் 5 வரையிலான குறைந்த தர தானியக்கத்திற்கான செயல்பாடுகளில், அவசரநிலை இடர்பாடுகளைக் கண்காணிக்க ஓர் ஓட்டுநர் இருப்பது வழக்கம்.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "IEC 60050 - International Electrotechnical Vocabulary - Details for IEV number 821-09-01: "automatic train operation"". www.electropedia.org. பார்க்கப்பட்ட நாள் 23 January 2024.
- ↑ IEEE Standard for Communications-Based Train Control (CBTC) Performance and Functional Requirements. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1109/IEEESTD.2004.95746. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7381-4487-8. பார்க்கப்பட்ட நாள் 28 January 2024.
- ↑ "Thales and Knorr-Bremse will jointly develop ATO for freight trains". RailTech.com. 4 November 2022. https://www.railtech.com/rolling-stock/2022/11/04/thales-and-knorr-bremse-will-jointly-develop-ato-for-freight-trains/.
வெளி இணைப்புகள்
தொகு- Tests of train obstacle detection system, project Robotrain.