தாணு பத்மநாபன்
பேராசிரியர் தாணு பத்மநாபன் (Thanu Padmanabhan, 10 மார்ச் 1957 – 17 செப்டம்பர் 2021) இந்தியக் கோட்பாட்டு இயற்பியலாளரும், அண்டவியலாளரும் ஆவார். இவர் அண்டம், குவைய ஈர்ப்பு ஆகிய துறைகளில் ஈர்ப்பு விசை, கட்டமைப்பு உருவாக்கம் ஆகியவற்றில் பெரும் பங்காற்றியுள்ளார். இவரது 300 இற்கும் அதிகமான ஆய்வுக் கட்டுரைகள் பன்னாட்டு ஆய்விதழ்களில் வெளிவந்துள்ளன. 10 நூல்களை எழுதியுள்ளார். அண்டவெளியில் கருப்பு ஆற்றலின் பகுப்பாய்வு, புவியீர்ப்பை ஓர் எழுச்சி நிகழ்வாக விளக்குவது போன்றவற்றிலும் பல பங்களிப்புகளை வழங்கியுள்ளார். இவர் புனேயில் உள்ள வானியல், வானியற்பியலுக்கான பல்கலைக்கழக மையத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்.[3] 2007 இல் இவருக்குப் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.
தாணு பத்மநாபன் Thanu Padmanabhan | |
---|---|
![]() | |
பிறப்பு | 10 மார்ச் 1957[1] திருவனந்தபுரம், கேரளம் |
இறப்பு | 17 செப்டம்பர் 2021 புனே, இந்தியா | (அகவை 64)
தேசியம் | இந்தியர் |
துறை | இயற்பியல், வானியல் |
பணியிடங்கள் | பல்கலைக்கழகங்களுக்கான வானியல், வானியற்பியல் மையம்[2] |
கல்வி கற்ற இடங்கள் | கேரளப் பல்கலைக்கழகம், டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம் |
ஆய்வு நெறியாளர் | ஜயந்த் நாரளீக்கர் |
விருதுகள் | பத்மசிறீ |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுபத்மநாபன் திருவனந்தபுரத்தில் 1957 மார்ச் 10 இல் தாணு ஐயருக்கும் இலட்சுமி அம்மாளுக்கும் பிறந்தார். கேரளப் பல்கலைக்கழகத்தின் கீழுள்ள திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் இயற்பியலில் இளம் அறிவியல் (1977), முது அறிவியல் (1979) பட்டங்களைப்[ பெற்றார்.[4] தனது முதலாவது ஆய்வுக் கட்டுரையை பொதுச் சார்புக் கோட்பாட்டில் தனது 20-வது அகவையில் எழுதினார்.[5] 1979 இல் மும்பை, டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகத்தில் முனைவர் பட்டத்திற்காக இணைந்தார்.[6] அங்கு அவர் 1980 முதல் 1992 வரை பல பணிகளில் செயலாற்றினார், 1986–87 இல் கேம்பிரிட்ச் வானியல் ஆய்வுக் கழகத்தில் பணியாற்றினார். 1992 இல் |வானியல், வானியற்பியலுக்கான பல்கலைக்கழக மையத்தில் இணைந்து முக்கிய கல்வித் திட்டப் பீடத்தின் தலைவராக 18 ஆண்டுகள் (1997–2015) பணியாற்றினார்.
தாணு பத்மநாபன் 2021 செப்டம்பர் 17 இல் புனேயில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் தனது 64 வது வயதில் காலமானார்.[7] இவருடைய மனைவி வசந்தி பத்மநாபன் (முனைவர், வானியற்பியல்), மகள் அம்சா பத்மநாபன் (முனைவர், வானியற்பியல்) ஆவர்.
எழுதிய நூல்கள்
தொகுஇவர் எழுதிய இயற்பியல் நூல்கள்:
- The Dawn of Science: Glimpses from History for the Curious Mind (2019)
- Quantum Field Theory: The Why, What and How (2016)
- Sleeping Beauties in Theoretical Physics: 26 Surprising Insights (2015)
- Gravitation: Foundations and Frontiers, கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம் (2010)
- An Invitation to Astrophysics (2006)
- Theoretical Astrophysics - Volume III : Galaxies and Cosmology, கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம் (2002)
- Theoretical Astrophysics - Volume II : Stars and Stellar Systems, கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம் (2001)
- Theoretical Astrophysics - Volume I : Astrophysical Processes, கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம் (2000) - முன்னோட்டம்
- Cosmology and Astrophysics through Problems, கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம் (1996) முன்னோட்டம்
- Structure Formation in the Universe, கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம் (1993) - முன்னோட்டம்
- Gravity, Gauge Theories and Quantum Cosmology, (ஜயந்த் நாரளீக்கர் உடன் இணைந்து), (1986)
- Quantum Themes: The Charms of the Microworld (2009)
- After the First Three Minutes - The Story of Our Universe, கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம் (1998)
முக்கிய விருதுகள்
தொகுபதமநாபன் பல முக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார்:[8]
- கேரள சாத்திர புரசுக்கரம், 2021[9]
- எம். பி. பிர்லா நினைவு விருது, 2019[10]
- IoP-IPA விருது, 2014[11]
- இயற்பியலில் TWAS பரிசு (2011)[12]
- இயற்பியல் அறிவியலுக்கான இன்ஃபோசிஸ் அறிவியல் அறக்கட்டளை பரிசு (2009)[13]
- J.C.Bose National Fellowship (DST) (2008)
- இதேஅக வைணு பாப்பு தங்கப் பதக்கம் (2007)[14]
- பத்மசிறீ (இந்தியக் குடியரசுத் தலைவர் விருது, 2007)[15]
- மைகுனா விருது (மெல்பேர்ண் பல்கலைக்கழகம், ஆத்திரேலியா, 2004)
- ஓமி பாபா ஆய்வு நிதி (2003)
- பிர்லா விருது (2003)
- அல்-குவாரிசுமி பன்னாட்டு விருது (2002)
- மிலேனியம் பதக்கம் (CSIR, 2000)
- சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது (1996)[16]
- The Birla Science Prize (1991)[17]
- இளம் அறிவியலாளர் விருது, (இந்திய தேசிய அறிவியல் கழகம்) (1984)[18]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Homepage of Padmanabhan".
- ↑ "Homepage of Padmanabhan". www.iucaa.in. Archived from the original on 24 October 2020. பார்க்கப்பட்ட நாள் 19 September 2020.
- ↑ "IUCAA - People". IUCAA. Archived from the original on 11 January 2020. பார்க்கப்பட்ட நாள் 8 September 2019.
- ↑ "Homepage of Padmanabhan". www.iucaa.in. Archived from the original on 24 October 2020. பார்க்கப்பட்ட நாள் 19 September 2020.
- ↑ "T.Padmanabhan, Solutions of scalar and electromagnetic wave equations in the field of gravitational and electromagnetic waves, Pramana , (1977), 9 , 371". Archived from the original on 3 June 2018. பார்க்கப்பட்ட நாள் 2 December 2020.
- ↑ "Homepage of Padmanabhan". www.iucaa.in. Archived from the original on 24 October 2020. பார்க்கப்பட்ட நாள் 19 September 2020.
- ↑ "Renowned astrophysicist Thanu Padmanabhan passes away" (in en-IN). The Hindu. 2021-09-17. https://www.thehindu.com/sci-tech/science/renowned-astrophysicist-thanu-padmanabhan-passes-away/article36513555.ece.
- ↑ "padmanabhan_cv.dvi" (PDF). Archived (PDF) from the original on 9 October 2018. பார்க்கப்பட்ட நாள் 17 September 2021.
- ↑ "Kerala's prestigious science honor for M S Swaminathan and Thanu Padmanabhan - Times of India". The Times of India. Archived from the original on 27 August 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-09-17.
- ↑ "Archived copy". Archived from the original on 17 October 2019. பார்க்கப்பட்ட நாள் 17 January 2020.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Archived copy". Archived from the original on 27 January 2020. பார்க்கப்பட்ட நாள் 17 January 2020.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Announcement of TWAS Prize in Physics (2011)". Archived from the original on 10 November 2015. பார்க்கப்பட்ட நாள் 4 February 2016.
- ↑ "List of Laureates - Infosys Prize 2009". Archived from the original on 15 March 2016. பார்க்கப்பட்ட நாள் 4 February 2016.
- ↑ List of Recipients of INSA Medals பரணிடப்பட்டது 4 ஏப்பிரல் 2014 at Archive.today
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived (PDF) from the original on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
- ↑ Shanti Swarup Bhatnagar Prize: Profile of the Awardee
- ↑ "List of B. M. Birla Science Prizes". Archived from the original on 28 January 2018. பார்க்கப்பட்ட நாள் 4 February 2016.
- ↑ "List of recipients of INSA medal for young scientists 1974-2014". Archived from the original on 11 October 2013. பார்க்கப்பட்ட நாள் 4 February 2016.
வெளி இணைப்புகள்
தொகு- A 50-hour course by Padmanabhan on Quantum Field Theory, (available on YouTube).
- A one-semester course of lectures on பொதுச் சார்புக் கோட்பாடு by Padmanabhan.
- Another set of lectures பரணிடப்பட்டது 2018-01-10 at the வந்தவழி இயந்திரம் (15 hours) by Padmanabhan on Advanced Topics in பொதுச் சார்புக் கோட்பாடு at the 'troisieme cycle de la physique en suisse romande' course (Geneva, Switzerland).
- Thanu Padmanabhan's Home page