தமிழீழத் திரைப்படத்துறை

தமிழீழத் திரைப்படத்துறை (Cinema of Tamil Eelam) தமிழீழத்தில் படமாக்கப்பட்ட திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைப்படத்துறை ஆகும்.

தற்போது தமிழீழ விடுதலைப்புலிகளால் நிர்வகிக்கப்பட்டுவரும் பிரதேசங்களிலிருந்து இத்திரைப்படங்கள் வெளிவருகின்றன. தமிழீழத் தேசிய எழுச்சி திரட்சியடைந்ததன் பிற்பாடு, தேசிய உணர்வின் அடிப்படையில் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து வெளிவரும் திரைப்படங்கள் கூட தமிழீழ திரைப்படங்களாகவே ஒரு சாரரால் வகைப்படுத்தப்படுகின்றன.

தமிழீழ திரைப்பட வகைகள்

தொகு

போர்க்களப் பதிவுகள்

தொகு

இவை தமிழீழ விடுதலைப்புலிகளின் போர்க்களப் படப்பிடிப்பு பிரிவினால் நேரடிக் காட்சிகளைப் பதிவு செய்யும் நிகழ்படங்களாகும் இவ்வாறான பல நேரடிக் காட்சிகள் அமையப்பெற்று பின்னர் கோப்புக் காட்சிகளுடன் விடுதலைப் புலிகளால் திரைப்படமான பாணியில் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் தத்ரூபக் காட்சியமைப்புகளைக் கொண்ட இத்திரைப்படங்கள் தமிழீழ மக்களால் ஈழத்திலும், வெளி நாடுகளிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றவையாகும்.

ஆவணப்படங்கள்

தொகு

ஒரு உண்மை நிகழ்வை ஆவணப்படுத்தி தயாரிக்கப்படும் திரைப்பட வகை ஆகும்.

குறும்படங்கள்

தொகு

யுத்தகாலத்தில் ஒரு நிகழ்வை, கருத்தை, கதையை குறுகிய நேரத்தில் அழுத்தமாக தொழில்நுட்ப நேர்த்தியுடன் படக்காட்சியாக வெளிப்படுத்தும் நோக்கத்தில் தயாரிக்கப்படுகின்றது.

முழு நீளத் திரைப்படங்கள்

தொகு

முழுமையான திரைப்படத்துக்குரிய இலக்கணங்களுடன் அமைக்கப்பட்டு திரையிடப்படும் திரைப்படங்கள் இந்த வகையை சேரும். அண்மையில் தென்னிந்திய கலைஞர்களையும் உள்ளடக்கி முழுநீள தமிழீழ திரைப்படங்கள் வெளிவரும் செல்நெறி இனங்காணப்படுகிறது. ஆணிவேர், எல்லாளன் ஆகியவை இவ்வாறான திரைப்படங்களுக்கு எடுத்துக்காட்டாகும்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wiki.x.io/w/index.php?title=தமிழீழத்_திரைப்படத்துறை&oldid=4178810" இலிருந்து மீள்விக்கப்பட்டது