தன்னார்வலர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தன்னார்வலர் என்பவர் தனது சொந்த விருப்பின் பேரில் சமுதாயத்துக்காக அல்லது இயற்கைச் சூழலைப் பாதுகாப்பது போன்றவற்றுக்காக ஊதியம் எதிர்பாராமல் உழைப்பவர் ஆவார். பல தன்னார்வலர்கள் அரச சார்பற்ற அமைப்புக்கள் மூலம் சேவை செய்கின்றனர். இவர்கள் சில வேளைகளில் முறைசார்ந்த தன்னார்வலர்கள் எனப்படுகின்றனர். பல தன்னார்வலர்கள் இவ்வாறன்றித் தனிப்பட்ட முறையிலோ அல்லது சிறு குழுக்களாகவோ சேவை செய்கின்றனர். வரைவிலக்கணப்படி, தன்னார்வலர்கள் தம் சொந்தப் பணத்தில் செலவு செய்ததைத் திரும்பப் பெறுவதன்றித் தாம் செய்யும் வேலைகளுக்காக எவ்வித கொடுப்பனவுகளையும் பெறமாட்டார்கள்.
![](http://up.wiki.x.io/wikipedia/ta/thumb/2/25/Sumac_01.jpg/180px-Sumac_01.jpg)
தன்னார்வலர் மேலாண்மை
தொகுமருத்துவ நிலையங்கள் போன்ற பல அமைப்புக்களுக்குத் தொடர்ச்சியாகத் தன்னார்வலர்கள் தேவைப்படுகின்றனர். பெரிய அளவில் நடைபெறும் விளையாட்டு நிகழ்வுகள் போன்றவற்றுக்கு நூற்றுக்கணக்கில் அல்லது சில வேளை ஆயிரக் கணக்கில் கூடத் தன்னார்வலர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் இத் தேவை தொடர்ச்சியானதாக அன்றி ஒரு தடவையோ ஆண்டுக்கு ஒருமுறையோ சில ஆண்டுகளுக்கு ஒருமுறையோ மட்டுமே வேண்டியிருக்கும். இத்தகைய நிகழ்வுகளின் வெற்றி உள்ளூர்ப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதால், தன்னார்வலர் தொடர்பான பொருளியல் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.
இந்தியாவில் தன்னார்வலர்கள்
தொகுஇந்தியாவில் தன்னார்வலர்களின் போக்கில் மாற்றம் உள்ளதால் பல தொண்டு நிறுவனங்கள் தடை செய்யப்பட்டுள்ளார்கள். [1]
மேற்கோள்
தொகு- ↑ தன்னார்வக்குழுக்களின் உரிமங்கள் ரத்து: இந்திய அரசு நடவடிக்கை பிபிசி தமிழ் 29. ஏப்ரல் 2015