தத்தல்
தத்தல் என்பது ஒரு வரைகலை பயனர் இடைமுக கூறாகும். உலாவியில் அல்லது ஒரு செயலியில் பல ஆவணங்களை ஒருங்கே திறந்து பயன்படுத்த இது உதவுகிறது. ஒரு ஆவணத்தில் இருந்து இன்னொரு ஆவணத்துக்கு தாவ தத்தல் பயன்படுகிறது. பொதுவாக செவ்வக வடிவில், ஆவணப் பெயரோடு மேல் கட்டகத்தில் இது இருக்கும்.
யேகுவெரி போன்ற நிரல் நூலகங்களைப் பயன்படுத்து இதை இலகுவாக நிறைவேற்றலாம்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Khola, Vivek (2023-02-17). "Tab (interface)". www.blogger.com.
- ↑ Elliott, Matt (2014-01-28). "How to manipulate multiple tabs in Chrome or Firefox". CNET (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 29 October 2021.
- ↑ Hopkins, Don (October 1989). "The Shape of PSIBER Space: PostScript Interactive Bug Eradication Routines". Don Hopkins' Web Site. பார்க்கப்பட்ட நாள் 2010-03-01.