தொரெசு நீரிணை

(டொரெஸ் நீரிணை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தொரெசு நீரிணை (Torres Strait) என்பது ஆத்திரேலியாவுக்கும், மெலனீசியத் தீவான நியூ கினிக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு நீரிணை ஆகும். இது கிட்டத்தட்ட 150 கிமீ அகலமானது. இதன் தெற்கே ஆத்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் தூர வடக்கில் அமைந்துள்ள கேப் யோர்க் மூவலந்தீவும், வடக்கே பப்புவா நியூ கினியின் மேற்கு மாகாணமும் அமைந்துள்ளன. 1606 ஆம் ஆண்டு இந்நீரிணை வழியாகப் பயணம் செய்த எசுப்பானிய மாலுமி லூயிசு வாஸ் டி தொரெசின் நினைவாக இது பெயரிடப்பட்டது.[1]

தொரெசு நீரிணை
Torres Strait
சினாத் கெஸ்
தொரெசு நீரிணை Torres Strait is located in ஓசியானியா
தொரெசு நீரிணை Torres Strait
தொரெசு நீரிணை
Torres Strait
தொரெசு நீரிணையும் அதன் தீவுகளும்
அமைவிடம்இந்தியப் பெருங்கடல்
அமைதிப் பெருங்கடல்
ஆள்கூறுகள்9°50′S 142°30′E / 9.833°S 142.500°E / -9.833; 142.500
வகைநீரிணை
வடிநில நாடுகள்ஆத்திரேலியா
பப்புவா நியூ கினி
டொரெஸ் நீரிணை - கேப் யோர்க் தீபகற்பம் கீழே உள்ளது; டொரெஸ் நீரிணைத் தீவுகள் பல வடக்கே காணப்படுகின்றன.

புவியியல்

தொகு

டொரெஸ் நீரிணை பவளக் கடலை கிழக்கே அரபூரா கடலுடன் இணைக்கிறது. இது ஒரு பன்னாட்டு முக்கியத்துவம் வாய்ந்த கடற் பாதை ஆயினும், இங்குள்ள கற்பாறைகளும், சிறு தீவுகளும் கடற்பயணம் மேற்கொள்வோரைப் பெரும் சிரமத்துக்குள்ளாக்கும். இதன் தெற்கே உள்ள எண்டெவர் நீரிணை, வேல்ஸ் இளவரசர் தீவிற்கும் ஆஸ்திரேலியாவின் பெருந்தரைப் பகுதிக்கும் இடையில் உள்ளது.

இந்நீரிணையில் டொரெஸ் நீரிணைத் தீவுகள் எனப்படும் பல தீவுக்கூட்டங்கள் காணப்படுகின்றன. குறைந்தது 274 தீவுகள் இக்கூட்டத்தில் உள்ளன. இவற்றில் 17 தீவுகளில் தற்போது மக்கள் குடியிருப்புக்கள் உள்ளன. 6,800 இற்கும் அதிகமான டொரெஸ் நீரிணைத் தீவு மக்கள் (ஆஸ்திரேலியப் பழங்குடிகள்) இந்தத் தீவுகளில் வாழ்கின்றனர். மேலும் 42,000 பேர் இடம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவின் பெருந்தரைப் பகுதியில் வாழ்கின்றனர்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Hilder, Brett (1980). The voyage of Torres: the discovery of the southern coastline of New Guinea and Torres Strait by Captain Luis Baez de Torres in 1606 (PDF). St. Lucia, Queensland: University of Queensland Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 070221275X. இணையக் கணினி நூலக மைய எண் 911315041. பார்க்கப்பட்ட நாள் 2021-01-31.
"https://ta.wiki.x.io/w/index.php?title=தொரெசு_நீரிணை&oldid=4198657" இலிருந்து மீள்விக்கப்பட்டது