டையாக்சின்
டையாக்சின் (Dioxin, Polychlorinated dibenzodioxins) என்பது குளோரின் முதலான ஆலசன் சேர்ந்த கரிம வேதிப்பொருள் குழுவைக் குறிக்கும் பரவலாக அறியப்பட்ட பொதுப் பெயர் ஆகும். பரவலாக அறியப்பட்ட டையாக்சின்களில் பலகுளோரின் சேர்ந்த டைபென்சோபியூரான்கள் (polychlorinated dibenzofurans, PCDFs) ) மற்றும் பலகுளோரின் சேர்ந்த டைபென்சோடையாக்சின்கள் (polychlorinated dibenzodioxins, PCDDs) முக்கியமானவை. பலகுளோரின் சேர்ந்த டைபென்சோபியூரான்கள் (PCDD/Fs) உயிரனங்களில் சேர்வடைந்து மாந்தர்களுக்கும் காட்டு விலங்குகளுக்கும் பெருங்கேடு விளைவிக்கின்றது என அறிந்துள்ளனர். இவ் வேதிப்பொருட்கள் உயிரினங்களின் கொழுப்பில் ஈர்ப்புத்தன்மை உடையவை ஆகும்.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/1/16/Dioxin-3D-vdW.png/250px-Dioxin-3D-vdW.png)
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/8/84/2%2C3%2C7%2C8-TCDD-2D-skeletal.png/220px-2%2C3%2C7%2C8-TCDD-2D-skeletal.png)