டேன்டைட்டு
டேன்டைட்டு (Tantite) என்பது Ta2O5. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் தாண்டலம் தனிமத்தின் ஓர் அரிய கனிமமாகும். ஒளிபுகும் தன்மையுடன் நுண்ணோக்கியளவில் நிறமற்று சமச்சீரற்று விடாப்பிடியான பளபளப்புடன் முச்சாய்வு திட்டப் படிகங்களாக இக்கனிமம் உருவாகிறது. மோவின் அளவுகோளில் இதன் கடினத்தன்மை மதிப்பு 7 என்றும் மற்றும் ஒப்படர்த்தி மதிப்பு 8.45 என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. டேன்டைட்டு கனிமத்தில் 1.3% நையோபியம் ஆக்சைடு கலந்துள்ளதாக வேதியியல் பகுப்பாய்வு தெரிவிக்கிறது. உருசியாவில் உள்ள கோலா தீபகற்பத்தின் பெக்மாடைட்டு தீப்பாறைகளில் முதன்முதலாக இக்கனிமம் கண்டறியப்பட்டது. அமெரிக்காவின் புளோரன்சு மாகாணம் விசுகோன்சின்னிலும் இதேவகைப் பாறைகளில் காணப்படுகிறது. எலாபைட்டு, லெபிடோலைட்டு, சிபாடுமென், கூலும்பைட்டு, டேன்டலைட்டு, வோடுகினைட்டு மற்றும் மைக்ரோலைட்டு போன்ற கனிமங்களும் இதனுடன் கலந்து காணப்படுகின்றன.
டேன்டைட்டு Tantite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | ஆக்சைடு கனிமங்கள் |
வேதி வாய்பாடு | Ta2O5 |
இனங்காணல் | |
மோலார் நிறை | 441.89 கி/மோல் |
நிறம் | நிரமற்றது |
படிக அமைப்பு | முச்சாய்வு |
பிளப்பு | இல்லை |
மோவின் அளவுகோல் வலிமை | 7 |
மிளிர்வு | விடாப்பிடியான பளபளப்பு |
கீற்றுவண்ணம் | வெண்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் |
ஒப்படர்த்தி | 8.55 |
அடர்த்தி | 8.45 [[கி/செ.மீ3]] |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு |
மேற்கோள்கள் | [1][2] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Tantite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
- ↑ "Tantite Mineral Data". Webmineral.com. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
- Wisconsin minerals Accessed March 31, 2006.
- American Mineralogist data sheet PDF Accessed March 31, 2006.