ஜனனி ஐயர்
இந்திய நடிகை; உருமாதிரிக் கலைஞர்
ஜனனி ஐயர் (Janani Iyer) என்பவர் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை. பல்வேறு தமிழ் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ள இவர், அவன் இவன் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.[1]
ஜனனி ஐயர் | |
---|---|
![]() 2019இல் ஜனனி | |
பிறப்பு | ஜனனி மார்ச்சு 31, 1987 கத்திவாக்கம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2011–முதல் |
ஆரம்ப வாழ்க்கை
தொகுஜனனி ஐயர் சென்னையில் உள்ள ஓர் தமிழ்க் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தார். சென்னை கோபாலபுரத்திலுள்ள தயானந்த ஆங்கிலோ வேதப்பாடசாலையில் பள்ளிப்படிப்பை படித்து முடித்தார். பின்னர் சென்னையில் உள்ள சவீதா பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் பாடத்தினைப் படித்து முடித்தார்.[2]
தொழில்
தொகுஜனனி படிப்பிற்கு பின்னர் வடிவழகில் கவனம் செலுத்தினார். சுமார் 150-க்கும் மேற்பட்ட பிராந்திய விளம்பரங்களில் வடிவழகியாகத் தோன்றியிருக்கிறார்.[3] எனினும் எப்போதும் நடிகையாக கனவு கண்டதாகவும் நடிப்பினை வாழ்வின் பேரார்வமாக கருதுவதாகவும் அவர் கூறினார்.[4]
திரைப்படங்கள்
தொகு- திரு திரு துரு துரு (துணை நடிகை)
- விண்ணைத்தாண்டி வருவாயா (துணை நடிகை)
- அவன் இவன் (முதல் படம்)
- பாகன்
- தெகிடி
- அதே கண்கள்
- முப்பரிமாணம்
- பலூன்
- விதி மதி உல்டா
- தர்மபிரபு
- கூர்மன்
- வேழம்
- பகீரா
- கருங்காப்பியம்
- இப்படிக்கு காதல்
- ஹாட் ஸ்பாட்
- தொல்லைக்காட்சி
- யாக்கைத்திரி (படப்பிடிப்பில்)
- முன்னறிவான் (படப்பிடிப்பில்)
தொலைக்காட்சி
தொகு- பிக்பாஸ் 2 (2018)
- பிக்பாஸ் 3 (2019, சிறப்பு விருந்தினர்)
- ஆனந்த விகடன் சினிமா விருதுகள் (2020, தொகுப்பாளர்)
- சூப்பர் சிங்கர் (2024, சிறப்பு விருந்தினர்)
வலைத் தொடர்
தொகு- மைத்ரி (2023, டிஸ்னி ஹாட்ஸ்டார்)
மேற்கோள்கள்
தொகு- ↑ "I'm God's favourite child: Janani Iyer". The Times Of India. 25 February 2011. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Im-Gods-favourite-child-Janani-Iyer/articleshow/7562938.cms.
- ↑ http://www.indiaglitz.com/channels/tamil/article/54271.html
- ↑ "A dream start for Janani Iyer". The Times Of India. 4 February 2010. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/A-dream-start-for-Janani-Iyer/articleshow/5531433.cms.
- ↑ "சிஃபி இணையதளம்".