சௌகார்பேட்டை 8585
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி சௌகார்பேட்டை கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
சௌகார்பேட்டை (சவுகார்பேட்டை) இந்தியாவின் சென்னையின் வடக்கு பகுதியில் உள்ளது. சௌகார்பேட்டையில் உள்ள வீதிகள் மிகக் குறுகியதாக உள்ளன. இங்கு பழைமையான கட்டிடங்கள் அதிகம் காணப்படுகின்றன. கொண்ட நகரத்தின் பழமையான. இது சென்னை நகரின் மிகப் பரபரப்பான வணிகப் நடைபெறும் பகுதியாகும். மொத்த வியாபாரப் பொருட்களான சீன இறக்குமதி பிளாஸ்டிக் பொம்மை பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், தோல் பொருட்கள், துணிகள் போன்றவற்றிற்கான தமிழகத்தின் மொத்த விற்பனை சந்தையாக சௌகார்பேட்டை விளங்குகிறது. இங்கு அமைந்துள்ளன.[1]
Sowcarpet | |
---|---|
neighbourhood | |
![]() Shri Chandraprabhu Jain temple, George Town | |
ஆள்கூறுகள்: 13°05′22″N 80°16′44″E / 13.08950°N 80.27897°E | |
Country | India |
State | தமிழ்நாடு |
District | Chennai |
Metro | Chennai |
Zone | Basin Bridge |
Ward | 30 |
அரசு | |
• நிர்வாகம் | CMDA |
Languages | |
• Official | Tamil |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 600079 |
மக்களவை (இந்தியா) constituency | Chennai North |
Vidhan Sabha constituency | Harbour |
Planning agency | CMDA |
விளக்கம்
தொகுசௌகார்பேட்டையில் உள்ள பெரும்பாலான வீதிகள் குறுகலானவை, தங்கசாலை தெரு (மின்ட் வீதி) [2] போன்ற சில வீதிகள் விதிவிலக்காக சற்று பெரியவையாகவே உள்ளன.[3] தெருக்களில் உள்ள கட்டிடங்கள் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாக இருப்பதால் அக்கட்டிடங்கள் பொதுவான சுவரைப் பகிர்ந்து கொள்வது போல் இருக்கின்றன. இந்த நிலையானது இந்திய நகரங்களின் நெரிசலான வர்த்தக பஜாரில் பொதுவாகக் காணக்கூடியதே. பல பொருட்களுக்கான மொத்த சந்தைகளாக சௌகார்பேட்டையில் உள்ள நாராயண முதலி தெரு, கோவிந்தப்ப நாயக்கன் தெரு மற்றும் ரத்தன் பஜார் ஆகிய இடங்கள் உள்ளன. காசி செட்டி தெரு மற்றும் தங்கசாலை தெருவைச் சுற்றியுள்ள பகுதி ஷாப்பிங்கிற்கு பிரபலமானது, மேலும் வட இந்திய சாட் மற்றும் பிற சுவையான வகைகளைக் காணலாம். பட்னி பிளாசா மற்றும் நாயுடு பிளாசா ஆகியவை இப்பகுதியில் உள்ள பிரபலமான வணிக வளாகங்கள்.
சௌகார்பேட்டை முழுவதும் பெரும்பான்மை சமூகமாக வடஹிந்தியர்களான ராஜஸ்தானிகளும், குஜராத்திகளும், மராட்டியர்களு வாழ்ந்து கொண்டு வியாபாரம் செய்து வருகின்றனர். தெலுங்கர்களும் வாழ்ந்து வருகின்றனர்.
- ↑ "Shopping in Sowcarpet: Chennai’s clothing bazaar". The Hindu. RoofandFloor. 2 September 2017. https://www.thehindu.com/real-estate/shopping-in-sowcarpet-chennais-clothing-bazaar/article19575621.ece. பார்த்த நாள்: 20 April 2019.
- ↑ Todhunter, Colin (14 February 2013). "Hot mint in Chennai: welcome to India". TravelMag. பார்க்கப்பட்ட நாள் 29 October 2018.
- ↑ Todhunter, Colin (17 October 2013). "Keeping it Clean on Mint Street, Chennai". TravelMag. பார்க்கப்பட்ட நாள் 29 October 2018.