சையது ஐதர் ராசா
எஸ்.எச். ரசா (S. H. Raza) அல்லது சையது ஹைதர் ராஃசா (பிறப்பு 22 பெப்ரவரி, 1922- 23 சூலை, 2016), பிரான்சில் 1950 ஆம் ஆண்டு முதல் வாழ்ந்து வந்தாலும் வலுவான இந்திய பிணைப்புகளைப் பராமரிக்கும் ஓர் இந்திய ஓவியர் ஆவார்.
S.H. Raza | |
---|---|
சையது ஐதர் ரசா | |
தேசியம் | இந்தியன் |
அறியப்படுவது | ஓவியர் |
விருதுகள் | பத்ம பூசண் 2007 லலித் கலா அகாடெமி ஃபெல்லோ, 1981 |
அவரது ஓவியங்கள் பெரும்பாலும் எண்ணெய் அல்லது அக்ரிலிக் வண்ணங்களால் இந்திய பிரபஞ்சவியல் மற்றும் மெய்யியல் படிமங்களைக் கொண்ட நாயகரில்லா (abstracts) ஓவியங்களாகும்.[1][2] அவருக்கு 1981 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ மற்றும் லலித்கலா அகாடெமியின் ஆய்வாளர் விருதுகள் வழங்கப்பட்டன.[3] பின்னர் 2007 ஆம் ஆண்டு பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.[4].
அவரது ஓவியம் ஒன்று திசம்பர் 2006 ஏலமொன்றில் $1.4 மில்லியனுக்கு விற்கப்பட்டதாக பதிவாகியுள்ளது.[5].
இளமை வாழ்வும் கல்வியும்
தொகுசையது ஐதர் ரசா பெப்ரவரி 22,[6], 1922 அன்று பபாரியா[7], மத்தியப்பிரதேச மாநிலத்தில் வனத்துறை அதிகாரி சையது மொகமது ராஃசி மற்றும் தஹிரா பேகம் தம்பதியினருக்கு பிறந்தார்.[8][9] தமது 12ஆவது அகவையிலேயே ஓவியம் வரைவதில் ஆர்வம் காட்டினார். தமது 13வது அகவையில் மத்தியப்பிரதேசத்தில் உள்ள தமோ என்னும் நகருக்கு இடம் பெயர்ந்து அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.[10][11].
பள்ளிப்படிப்பைத் தொடர்ந்து நாக்பூர் நகரில் உள்ள நாக்பூர் கலைப் பள்ளியிலும், (1939-43) பின்னர் மும்பையிலுள்ள சர் ஜே.ஜே கலைப் பள்ளியிலும் (1943-47) ஓவியம் பயின்றார்.[12] பிரான்சின் தலைநகர் பாரிசிலுள்ள இகோல் நேசனெல் சுப்பீரியர் தே ப்யூசார்ட்ஸ் கலைப்பள்ளியில் 1950-1953 ஆண்டுகளில் பிரான்சு அரசு உதவித்தொகையில் பயின்றார்.[13] ஐரோப்பாவில் மிகுதியாக பயணம் செய்து தமது படைப்புகளை காட்சிப்படுத்தினார். 1956 ஆம் ஆண்டு பிரீ டி லா கிரிடிக் (Prix de la critique) என்னும் விருதினை முதல் பிரெஞ்சல்லாதவராகப் பெறும் பேறு பெற்றார்.[11].[14].
மணவாழ்வு
தொகுஅவருடன் இகோல் தே ப்யூசார்ட்சில் கூடப் படித்த ஜானைன் மொங்கில்லத் என்ற ஓவியர் மற்றும் சிற்பவியலாளரிடம் மனதை பறிகொடுத்த சையது 1959 ஆம் ஆண்டு அவரை மணம் புரிந்தார். தமது துணைவியாரின் அன்னையின் விருப்பத்திற்கிணங்க பிரான்சிலேயே வசிக்கவும் உடன்பட்டார்.[15]. ஏப்ரல் 5, 2002 அன்று பாரிசில் ஜானைன் மரணமடைந்தார்.[16]
மேற்கோள்கள்
தொகு- ↑ Painting is like sadhana... டி என் ஏ இந்தியா, செப்டம்பர் 18, 2005.
- ↑ Artst Details பரணிடப்பட்டது 2009-07-12 at the வந்தவழி இயந்திரம் Raza at serigraphstudio.com.
- ↑ Lalit Kala Ratna Profiles அலுவல்முறை விருதுபெற்றோர் பட்டியல்
- ↑ பத்ம பூசண் விருது பெற்றோர்
- ↑ இந்திய நாயகர்கள் S. H. Raza at iloveindia.com.
- ↑ Syed Haider Raza turns 85 பரணிடப்பட்டது 2007-04-10 at the வந்தவழி இயந்திரம் The Hindu, Feb 21, 2007.
- ↑ Biography பரணிடப்பட்டது 2008-01-08 at the வந்தவழி இயந்திரம் shraza.net, the Official website.
- ↑ Artist Bio பரணிடப்பட்டது 2008-03-06 at the வந்தவழி இயந்திரம் Raza Retrospective 2007, New York.
- ↑ Profiles பரணிடப்பட்டது 2009-01-30 at the வந்தவழி இயந்திரம் S H Raza at delhiartgallery.com.
- ↑ Profile of the Month பரணிடப்பட்டது 2011-04-21 at the வந்தவழி இயந்திரம் Sayed Haider Raza at indianartcircle.com.
- ↑ 11.0 11.1 Artist Summary Sayed Haider Raza at artfact.com.
- ↑ "Artist Background". Archived from the original on 2005-02-09. பார்க்கப்பட்ட நாள் 2009-12-18.
- ↑ Artist Directory பரணிடப்பட்டது 2008-03-04 at the வந்தவழி இயந்திரம் S H Raza at art.in.
- ↑ Profile பரணிடப்பட்டது 2012-03-01 at the வந்தவழி இயந்திரம் S. H. Raza at vadehraart.com.
- ↑ Hindustan Times Master strokes, HT City, The Arts, p.10, February 23, 2008.
- ↑ Janine Mongillat பரணிடப்பட்டது 2011-06-07 at the வந்தவழி இயந்திரம் The Hindu, Apr 09, 2002.
மேலும் படிக்க
தொகு- Passion: Life and Art of Raza, by Sayed Haider Raza, Ashok Vajpeyi (Ed.). 2005, Rajkamal Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8126710403.
- Raza: A Life in Art, by Ashok Vajpeyi, 2007, Art Alive Gallery, New Delhi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-901844-4-1.
- Bindu: Space and time in Raza's vision, by Geeti Sen. Media Transasia, 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9627024066.
புற இணைப்புகள்
தொகு- Official website of S.H.Raza பரணிடப்பட்டது 2010-12-31 at the வந்தவழி இயந்திரம்
- SH Raza Paintings பரணிடப்பட்டது 2018-12-15 at the வந்தவழி இயந்திரம்